பாகிஸ்தான் சோதனைச் சாவடியில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 7 ராணுவ வீரர்கள் பலி
பாகிஸ்தானில் வடக்கு வஜிரிஸ்தானின் பழங்குடியினர் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் நேற்று பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். முதலில் சோதனைச் சாவடியை நோக்கி முன்னேறிய பயங்கரவாதிகள் மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தி, அவர்களை முன்னேற விடாமல் தடுத்தனர். பின்னர், பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை சோதனைச்சாவடி மீது மோதி வெடிக்கச் செய்தனர். தற்கொலை தாக்குதலும் நடத்தப்பட்டது. இதனால் சோதனைச்சாவடியின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அதன்பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை … Read more