உலக செய்திகள்
பணய கைதிகளை விடுவிக்கும் விவகாரம்.. ஹமாஸ் விதித்த நிபந்தனைகளை நிராகரித்த நேதன்யாகு
காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது. இடையில் தற்காலிக போர்நிறுத்தத்தின்போது ஹமாஸ் அமைப்பினர் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவித்தனர். இன்னும் 136 பேர் ஹமாஸ் அமைப்பினரின் பிடியில் இருப்பதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் இஸ்ரேல் கூறி வருகிறது. இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வந்து பணயக் கைதிகளை விடுவிப்பதற்காக ஹமாஸ் அமைப்பினர் ஒரு ஒப்பந்தத்தை முன்மொழிந்தனர். அதில், இஸ்ரேல் தரப்பு தாக்குதலை நிறுத்திவிட்டு படைகளை வாபஸ் … Read more
சீனாவில் நிலச்சரிவு: மண்ணுக்குள் புதைந்த 47 பேர்- மீட்புப்பணிகள் தீவிரம்
பீஜிங், சீனாவின் யுனான் மாகாணத்தின் ஜாடோங் நகரில் லியாங்ஷூய்குன் கிராமம் உள்ளது . இந்த கிராமத்தில் இன்று காலை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 10க்கும் மேற்பட்ட வீடுகளை சேர்ந்த 47 பேர் மண்ணுக்குள் புதைந்தனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து 500க்கும் மேற்பட்டோரை மீட்புக்குழுவினர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர். கடந்த சில நாட்களாக … Read more
அடேங்கப்பா.. ஒவ்வொரு ஆண்டும் இவ்வளவு விலங்குகளை மனிதர்கள் சாப்பிடுகிறார்களா..? வைரலாகும் வீடியோ
உலகம் முழுவதும் பெரும்பாலான உணவு பிரியர்களின் முதல் தேர்வு இறைச்சியாகத்தான் இருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட விலங்குகளின் இறைச்சியை அதிக அளவில் சாப்பிடுகின்றனர். பண்டிகை காலங்களில் இறைச்சி விற்பனை பல மடங்கு அதிகரிக்கும். இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் மனிதர்கள் சாப்பிடும் விலங்குகளின் எண்ணிக்கை தொடர்பான சமீபத்திய புள்ளிவிவரம் தலையை சுற்ற வைக்கிறது. இதுதொடர்பாக, சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் காட்டப்பட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, உலகம் முழுவதும் மனிதர்கள் 100 பில்லியனுக்கும் அதிகமான விலங்குகளை உட்கொள்கின்றனர். … Read more
உடற்பயிற்சி மூலம் பிரபலமான ராணுவ வீராங்கனை தற்கொலை – மகள் பிறந்தநாளை கொண்டாடிய சிலநாட்களில் விபரீத முடிவு
வாஷிங்டன், அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி வந்த வீராங்கனை மிச்சேல் யங்க் (வயது 34). இவர், தான் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டு பிரபலமடைந்தார். மிச்சேலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இவருக்கு கிரேசி (வயது 12) என்ற மகள் உள்ளார். கிரேசிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தனது மகள் கிரேசி பிறந்தநாள் தொடர்பாக மிச்சேல் யங்க் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், … Read more
பாப் பாடலை கேட்டு ரசித்த சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடும் தண்டனை விதித்த வடகொரிய அரசு
பியாங்யாங், தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்த குற்றத்துக்காக தங்கள் நாட்டைச் சேர்ந்த 2 சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடுமையான வேலை செய்யும் தண்டனையை வட கொரிய அரசு விதித்திருப்பது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 16 வயதே நிரம்பிய இரண்டு சிறுவர்கள் தென் கொரிய பாப் இசை, சினிமாவைக் கண்டு ரசித்ததற்காக தண்டிக்கப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட கொரியா பல ஆண்டுகளாகவே தென் கொரியாவுடன் எந்த விதத்தில் தொடர்பு ஏற்படுத்தினாலும் … Read more
இந்திய ஹெலிகாப்டரை பயன்படுத்த அனுமதி மறுத்த மாலத்தீவு அதிபர் – சிகிச்சை தாமதத்தால் சிறுவன் உயிரிழப்பு
புதுடெல்லி: மாலத்தீவில் உடல்நிலை பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவனை இந்திய ஹெலிகாப்டரில் அழைத்து செல்ல அனுமதி வழங்க அந்நாட்டு அதிபர் முய்ஸு தாமதித்ததால் அந்த சிறுவன் உயிரிழந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து மாலத்தீவு ஊடகங்கள் தெரிவித்ததாவது: காஃபு அட்டோலைச் சேர்ந்த 13 வயது சிறுவனக்கு உடல் நிலை திடீரென மோசமடைந்தது. இதையடுத்து, இந்திய அரசு வழங்கிய ஹெலிகாப்டர் மூலம் அந்த சிறுவனை மாலேவில் உள்ள உயர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அனுமதி கோரப்பட்டது. … Read more
உலகின் பெரிய பணக்கார அரசியல்வாதி அதிபர் புதின்
புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் அதிகாரப்பூர்வ ஆண்டு வருமானம் 1.4 லட்சம் டாலர். இந்திய மதிப்பில் ரூ.1 கோடி. தான் வசிப்பது 800 சதுர அடி வீடுதான் என்றும் தன்னிடம் 3 கார்கள் மட்டுமே இருப்பதாகவும் அவர் முன்பு தெரிவித்திருக்கிறார். ஆனால், புதினின் உண்மையான சொத்து மதிப்பு குறித்து பல்வேறு தகவல்கள் உலாவுகின்றன. விளாதிமிர் புதின் 2012-ம் ஆண்டு முதல் ரஷ்ய அதிபராக பதவி வகித்து வருகிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு 200 பில்லியன் … Read more
25 killed in missile attack on Russian-occupied Ukraine | ரஷ்ய ஆக்கிரமிப்பு உக்ரைன் மீதான ஏவுகணை தாக்குதலில் 25 பேர் பலி
கீவ் : உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில், 25 பேர் கொல்லப்பட்டனர். ‘நேட்டோ’ எனப்படும் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பில் சேர எதிர்ப்பு தெரிவித்து ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இரு தரப்பினருக்குமான சண்டையில் பெண்கள், குழந்தைகள், ராணுவ வீரர்கள் என ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் தொடர்கிறது. இதில், உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. … Read more