அமெரிக்காவில் பனிப்புயல்: 61 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. பனிப்பொழிவுடன் பனிப்புயலும் வீசி வருகிறது. பனிப்புயலால் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டென்னிசி, ஓரிகன் ஆகிய மாகாணங்களில் பனிப்புயல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் வீசி வரும் பனிப்புயலில் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தினத்தந்தி Related Tags : America  அமெரிக்கா 

மாலத்தீவு | மருத்துவ உதவிக்கு இந்திய விமானத்தை பயன்படுத்த அதிபர் அனுமதி மறுத்ததால் சிறுவன் பலி

புதுடெல்லி: மாலத்தீவில் மருத்துவ சிகிச்சைக்கான பயணத்துக்காக இந்தியா வழங்கிய டோனியர் விமானத்தை பயன்படுத்த அந்நாட்டு அதிபர் முகமது முய்சு அனுமதி மறுத்த நிலையில் அங்கு 14 வயது சிறுவன் ஒருவன் சனிக்கிழமை உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உயிழந்த சிறுவன் மூளைக் கட்டி மற்றும் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு போராடி வந்துள்ளார். புதன்கிழமை இரவு சிறுவனுக்கு பக்கவாத பாதிப்பு தீவிரமடைந்தது. இதனைத் தொடர்ந்து, அவர் வசித்து வந்த தூரத்து தீவான வில்மிங்டனில் இருந்து சிகிச்சைக்காக தலைநகர் மாலேவுக்கு … Read more

மிகப்பெரும் விலைக்கு ஏலம் போன அர்னால்டின் கைக்கடிகாரம்

கட்டுக்கோப்பான உடல் அமைப்பு மற்றும் தனது நடிப்பின் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர். 76 வயதான இவர் கலிபோர்னியா மாநில கவர்னராகவும் இருந்துள்ளார். இவர், தான் பயன்படுத்திய பொருட்களை ஏலத்தில் விட்டு, அதில் கிடைக்கும் தொகையை மாசுபாடுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக நன்கொடையாக அளிக்கவுள்ளதாக அறிவித்து இருந்தார். அதன்படி, அர்னால்ட் பயன்படுத்திய பொருட்களுக்கான ஏலம் ஆஸ்திரியாவில் ஸ்டான்கில்வர்ட் ரிசார்ட் எனும் புகழ் பெற்ற தங்கும் விடுதியில் நடைபெற்றது. இதில் அர்னால்டின் … Read more

பாகிஸ்தான் – ஈரான் மோதலும் பின்னணியும்: போர் மூளும் அபாயமா?

ஈரான் – பாகிஸ்தான் இடையே நடந்த ஏவுகணைத் தாக்குதல்கள், மத்திய கிழக்கு நாடுகள் பகுதிக்குள் போர் மேகம் வலுக்கும் வாய்ப்பாக மாறும் அபாயம் உள்ளதாக கணிக்கப்படுகிறது. அதன் பின்னணி என்ன? சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பாகிஸ்தானுக்கும், ஷீயா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஈரானுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. கடந்த டிசம்பரில் ஈரானின் சிஸ்தான் பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் அல்-தும் என்ற சன்னி தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் ராணுவ … Read more

இந்திய விமானத்தை பயன்படுத்த அனுமதி மறுத்த மாலத்தீவு அதிபர்: சிறுவன் உயிரிழப்பு

மாலி, மாலத்தீவு புதிய அதிபராக முகமது முய்சு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதால் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மாலத்தீவில் இந்திய படை வீரர்கள் 88 பேர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை மார்ச் 15ம் தேதிக்குள் திரும்பப்பெறும்படி இந்தியாவுக்கு மாலத்தீவு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேவேளை, மாலத்தீவுக்கு டிரோனியர் ரக விமானத்தையும் இந்தியா வழங்கியுள்ளது. இந்த விமானத்தை இந்திய வீரர்கள் இயக்கி வருகின்றனர். மாலத்தீவில் மருத்துவ மற்றும் பிற பயன்பாட்டிற்காக இந்த விமானம் பயன்படுத்தப்பட்டு … Read more

‘ஆப்கனில் விபத்துக்குள்ளானது இந்திய விமானம் இல்லை’ – மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் விபத்துக்குள்ளானது இந்திய விமானம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ள பயணிகள் விமானம் டெல்லியில் இருந்து மாஸ்கோவுக்கு சென்றதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்திருந்த நிலையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆப்கானிஸ்தான் அருகே நடந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் சிக்கியது இந்தியாவிலிருந்து சென்ற விமானமோ, தனியார் விமானமோ இல்லை. அது மோராக்கோவில் பதிவு செய்யப்பட்ட சிறிய ரக … Read more

Denied permission to use Indian flight: Boy dies in Maldives | இந்திய விமானத்தை பயன்படுத்த மாலத்தீவு அதிபர் அனுமதி மறுப்பு: சிறுவன் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாலே: மாலத்தீவில் மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்ட சிறுவனை அவசர சிகிச்சைக்கு அழைத்து செல்ல, இந்தியா வழங்கிய டோரினியர் விமானத்திற்கு மிகத் தாமதமாக அனுமதியளிக்கப்பட்டதால், அச்சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக இந்தியாவுக்கும்- மாலத்தீவுக்கு இடையேயான உறவில் மோதல் போக்கு நிலவி வருகிறது. மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சீனாவுக்கு ஆதரவை தெரிவித்து வருகிறார். மாலத்தீவில் உள்ள இந்திய படைவீரர்கள் 88 பேரை மார்ச் 15ம் தேதிக்குள் திரும்பப் பெறும்படி … Read more

அமெரிக்காவில் 74 ஆயிரம் மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்த ஜோ பைடன்

வாஷிங்டன், அமெரிக்காவில் கல்விக்கடன் வாங்கிய பலரும் அதனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டனர். எனவே இந்த கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி ஜனாதிபதி ஜோ பைடன் மாணவர்களுக்கு வழங்கிய கல்விக்கடனை ரத்து செய்வதாக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தார். இந்தநிலையில் சுமார் 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.41 ஆயிரம் கோடி) கல்விக்கடனை ரத்து செய்வதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதன்மூலம் 74 ஆயிரம் பேர் பயனடைய … Read more

Indian plane crash in Afghanistan?: Center denies | ஆப்கானிஸ்தானில் இந்திய விமானம் விபத்தா?: மத்திய அரசு மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காபூல்: ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம், இந்திய விமானம் கிடையாது என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் இருந்து ரஷ்யா தலைநகர் மாஸ்கோ சென்ற பயணிகள் விமானம் ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ள பதக்ஷான் மாகாணத்தின் சிபக் மாவட்டத்தில் மலையின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. விபத்துக்குள்ளான விமானத்தில் எத்தனை பேர் பயணித்தார்கள், உயிரிழந்தவர்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. … Read more

21 students killed in school hostel fire in China | பள்ளி விடுதியில் தீ விபத்து சீனாவில் 21 மாணவர்கள் பலி

பீஜிங்,சீனாவில் உறைவிடப்பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில், விடுதியில் தங்கியிருந்த, 21 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள பாங்க்செங் மாவட்டத்தின் டுஷு நகரில், தனியார் உறைவிடப்பள்ளி உள்ளது. இங்குள்ள விடுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென தீப்பற்றி விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு தங்கி படித்து வந்த துவக்கப்பள்ளி மாணவர்கள், 21 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் பலியான … Read more