ராணுவத்தைத் திரும்பப்பெறுவது குறித்து இந்தியா – மாலத்தீவு இடையே பேச்சுவார்த்தை
கம்பாலா: மாலத்தீவுடனான உறவு விரிசலுக்கு மத்தியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அமைச்சர்கள் இருவரும் இருநாட்டு உறவுகள் பற்றி வெளிப்படையான உரையாடல் நடத்தினர். இருநாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையில் இச்சந்திப்பு நடந்துள்ளது கவனிக்கத்தக்கது. அணிசேரா அமைப்பின் (Non-Aligned Movement) இரண்டு நாள் உச்சி மாநாடு உகாண்டா தலைநகர் கம்பாலாவில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அதில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் … Read more