மன்னர் வம்சாவளி அல்லாத சாமானிய பெண்ணை கரம் பிடித்தார் புருனே இளவரசர்

புதுடெல்லி: “ஹாட் ராயல்” என்று அழைக்கப்படும் புருனேயின் இளவரசர் அப்துல் மதீன் இப்னி ஹசனல் போல்கியா (Abdul Mateen ibni Hassanal Bolkiah), தனது காதலியான யாங் முலியா அனிஷா ரோஸ்னாவை (Yang Mulia Anisha Rosnah) திருமணம் செய்துகொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புருனே நாடு எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் ஒன்றாகும். இந்த நாட்டின் மன்னராக இருப்பவர் சுல்தான் ஹசனல் போல்கியா. இவரின் 10-வது மகனும், இளவரசருமான அப்துல் … Read more

ஹவுதிகள் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்: அழுத்தத்தைத் தொடர ஜோ பைடன் உறுதி

வாஷிங்டன்: செங்கடல் வணிகப் பாதையை பாதுகாப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் உறுதி அளித்ததைத் தொடர்ந்து ஹவுதிகள் மீது அமெரிக்கா வெள்ளிக்கிழமை புதிய தாக்குதல் நடத்தியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த முறை ஹவுதிகளின் ராடார் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், “செங்கடலில் ஹவுதிகளின் தாக்குதல்களைத் தடுக்கும் அமெரிக்க முயற்சியின் முக்கிய இலக்காக ராடார் தளங்கள் உள்ளன” என்று தெரிவித்தனர். தாக்குதல் குறித்த கூடுதல் விபரங்களை … Read more

தைவானில் இன்று அதிபர் தேர்தல்

தைபே, சீனாவால் உரிமை கொண்டாடப்பட்டு வரும் தைவானில் இன்று தேர்தல் நடைபெற உள்ளது. அந்தப் பகுதியில் அதிபரை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதற்காக 8-ஆவது முறையாக நடைபெறும் இந்தத் தேர்தலில் வேட்பாளர்களிடையே மிகக் கடுமையான போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது. டிபிபி கட்சியின் லாய் சிங்-டே, கேஎம்டி கட்சியின் ஹூ யூ-ஈ, டிபிபி கட்சியின் கோ வென்- ஜே ஆகியோர் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தல் தைவானில் சீனாவின் எதிர்காலக் கட்டுப்பாட்டை முடிவு செய்யும் என்பதால் இதன் முடிவுகள் ஆர்வத்துடன் … Read more

வடகொரியாவில் ரஷிய சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

மாஸ்கோ, 2019-ம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இதனை தடுக்க ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தின. குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்படி வடகொரியாவும் தனது நாட்டின் எல்லைகளை கடந்த 2020-ம் ஆண்டு மூடியது. இதனால் சுற்றுலா துறை மூலம் கிடைக்கும் வருவாய் வெகுவாக பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்புவதால் சர்வதேச அளவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் வடகொரியாவும் … Read more

மங்கோலியாவில் பனிக்குவியலில் கார் சிக்கியதால் 4 பேர் மூச்சுத்திணறி உயிரிழப்பு

உலன்பேட்டர் மங்கோலியா நாட்டில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் சாலைகள், வீதிகள் என காணும் இடமெங்கும் பனிக்கட்டிகளாக காட்சியளிக்கின்றன. எனவே வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லும்படி நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தநிலையில் சுக்பாதர் மாகாண நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் இரு குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இருந்தனர். அப்போது சாலையில் இருந்த பனிக்குவியலில் அந்த கார் … Read more

ஹவுதி மீது அமெரிக்கா, இங்கிலாந்து தாக்குதல் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை உயர்வு

வாஷிங்டன், இஸ்ரேல்-ஹமாஸ் இயக்கத்தினர் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதன் எதிரொலியாக செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளில் இருந்து வரும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள். உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் வழித்தடங்களுள் ஒன்றான செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக, பல்வேறு கப்பல் நிறுவனங்கள் … Read more

Lets go nuclear: Russia threatens | அணு ஆயுதத்தை கையில் எடுப்போம்: ரஷ்யா மிரட்டல்

மாஸ்கோ : நோட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா 2022 பிப்., 24ல் போர் தொடுத்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையே போர் நடந்து கொண்டுள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பொருளாதார உதவி, ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. இதனால் உக்ரைனும் ரஷ்யாவை எதிர்த்து சண்டையிட்டு வருகிறது. இதற்கிடையில் உக்ரைன் மேற்கத்திய நாடுகளின் ஏவுகணைகளை போரில் பயன்படுத்தினால் அணு ஆயுதத்தை எடுப்போம் என ரஷ்யா பகிரங்கமாக மிரட்டல் … Read more

ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் – 5 பேர் பலி

சனா, இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கும், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கும் இடையேயான போர் 3 மாதங்களுக்கு மேல் நீடித்து வருகிறது. இதனிடையே, இந்த போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஆதரவு அளித்து வருகிறது. மேலும், செங்கடல் வழியாக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் … Read more

1 லி. பாட்டில் குடிநீரில் 2.40 லட்சம் நேனோ பிளாஸ்டிக் துகள்கள்: அமெரிக்க ஆய்வில் அதிர்ச்சி தகவல்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில் குடிநீரில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருக்கும் என்பது நாம் ஓரளவுக்கு அறிந்ததே. ஆனால், அதன் அளவு என்ன என்பதுதான் சமீபத்திய அமெரிக்க அறிவியல் ஆய்வில் வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவலாகும். அதாவது, ஒரு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில் குடிநீரில் சுமார் 2,40,000 நேனோ பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருக்கின்றன என்பதுதான் அந்த எச்சரிக்கை தரும் ஆய்வுத் தகவலாகும். பேக்கேஜ் தண்ணீரை விற்கும் நிறுவனங்கள் தாங்கள் எடுக்கும் தண்ணீர் மிகவும் சுத்தபத்தமான இடங்களிலிருந்து எடுக்கப்படுவதாக விளம்பரம் … Read more