உலக செய்திகள்
Resistance to Chinese aggression? Maldives President Jalra! | சீன ஆக்கிரமிப்பை எதிர்ப்பதா? மாலத்தீவுகள் அதிபர் ஜால்ரா!
பீஜிங்: இந்தியர்கள் கொந்தளிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மாலத்தீவுகள் இன்னும் விலகவில்லை. இந்நிலையில், சீனாவின் நட்பை பிடித்துக் கொள்வதற்காக, மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கும் சீனாவின் முயற்சி குறித்து கேள்வி எழுப்பலாமா என, மாலத்தீவுகள் அதிபர் கூறியுள்ளார். பிரதமர் மோடி குறித்தும், நம் நாட்டின் சுற்றுலா வசதிகள் குறித்தும், சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற தெற்காசிய நாடான மாலத்தீவுகளின் சில அமைச்சர்கள், கிண்டல், கேலி செய்தனர். இதற்கு நம் நாட்டு மக்கள் சமூக வலைதளத்தில் கொதித்தெழுந்தனர். மாலத்தீவுகளை புறக்கணிப்போம் என்ற கோஷம் … Read more
அமெரிக்க சரக்கு கப்பலை பறிமுதல் செய்த ஈரான்
டெஹ்ரான், ஈரான்-அமெரிக்கா இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடிக்கிறது. இந்த சூழலில் ஓமன் நாட்டின் கடலில் சென்று கொண்டிருந்த அமெரிக்காவுக்கு சொந்தமான ‘செயின்ட் நிக்கோலஸ்’ என்ற கப்பலை ஈரான் கடற்படை நேற்று பறிமுதல் செய்தது. இது குறித்து ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” ‘சூயஸ் ராஜன்’ என்ற பெயரிடப்பட்ட சரக்கு கப்பல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்க வழிகாட்டுதலின் கீழ் ஈரான் சரக்கு கப்பலில் இருந்து எண்ணெயை திருடியது. ஈரானிய எண்ணெய் பின்னர் … Read more
திக்குமுக்காடும் ஏமன்… அமெரிக்காவும் இங்கிலாந்தும் இணைந்து தாக்குதல் – பின்னணி என்ன?
Yemen Airstrikes 2024: அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகியவை கூட்டாக இணைந்து ஏமன் நாட்டின் மீது இன்று அதிகாலை முதல் தாக்குதலை தொடங்கி உள்ளன.
பாகிஸ்தானில் வாட்டும் குளிர்: 36 குழந்தைகள் பலி
லாகூர், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் குளிர் காலநிலையால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 36 குழந்தைகள் பலியாகி உள்ளனர் . மேலும் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வரும் 31ம் தேதி வரை பள்ளிகளில் காலை அசெம்பிளி நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் குளிர் காலநிலையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க அடிப்படை சுகாதார வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி குழந்தைகள் கட்டாயம்முகக் கவசம் அணிய வேண்டும், கைகளை நன்றாக கழுவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more
Sheikh Hasina sworn in as Prime Minister of Bangladesh for the fifth term | வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக பதவியேற்பு
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டாக்கா : வங்கதேச நாட்டின் பிரதமராக, ஐந்தாவது முறையாக அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசீனா, 76, நேற்று பதவியேற்றார். நம் அண்டை நாடான வங்கதேசத்தில், இடைக்கால அரசின் தலைமையில் தேர்தல் நடத்த வேண்டும் என முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தியது. இது தேர்தல் ஆணையத்தால் ஏற்கப்படாததை அடுத்து, கடந்த 7ம் தேதி நடந்த பொது தேர்தலை அக்கட்சியும், அவர்களின் கூட்டணி கட்சிகளும் புறக்கணித்தன. இதில் … Read more
மாலத்தீவின் உள்விவகாரங்களில் பிற நாடுகள் தலையிடுவதை ஏற்க முடியாது – சீனா
பீஜிங், சமீபத்தில், பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தின்போது, பிரிஸ்டைன் பீச்சில் அவர் எடுத்த வீடியோவை பகிர்ந்ததற்கு எதிராக மாலத்தீவு மந்திரிகள் சிலர் அவதூறு ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை வெளியிட்டனர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், இந்தியர்கள் பலர் மாலத்தீவுக்கான சுற்றுலா பயணங்களை ரத்து செய்தனர். தூதரக அளவிலும் இந்த விவகாரம் வெடித்தது. மாலத்தீவு தூதருக்கு இந்தியா சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இதனிடையே மாலத்தீவு அரசு, 3 துணை மந்திரிகளை பதவி நீக்கம் செய்திருந்தது. மாலத்தீவின் சுற்றுலா தொழிலுக்கான … Read more
அமெரிக்காவின் மாண்ட்கோமெரி நகர மேயராக பதவியேற்ற முதல் இந்திய-அமெரிக்க பெண்
வாஷிங்டன், அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள மான்ட்கோமெரி நகர மேயராக பதவியேற்ற முதல் சீக்கிய மற்றும் இந்திய-அமெரிக்க பெண் என்ற சாதனையை நீனா சிங் படைத்துள்ளார். கடந்த 24 ஆண்டுகளாக மாண்ட்கோமெரியில் வசிக்கும் நீனா சிங், 2016 முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கவுன்சில் உறுப்பினராக இருந்து பின்னர் துணை மேயராக பதவி வகித்த நீனா சிங் தற்போது மேயராகி அசத்தியுள்ளார். மேயராக பதவியேற்றது குறித்து பேசிய நீனா சிங், நியூஜெர்சி மாகாணத்தின் வரலாற்றில் இது ஒரு … Read more
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் 37 பேர் கொண்ட புதிய அமைச்சரவை அறிவிப்பு
டாக்கா, வங்காளதேத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவாமி லீக் வெற்றி பெற்றதை அடுத்து, 5-வது முறையாக அந்நாட்டின் பிரதமராக ஷேக் ஹசீனா தேர்வாகி உள்ளார். தேர்தல் நடைபெற்ற 299 தொகுதிகளில் 223 தொகுதிகளை கைப்பற்றி ஷேக் ஹசீனா தலைமையிலான கட்சி கைப்பற்றியது. இந்த நிலையில், ஷேக் ஹசீனாவின் 37 பேர் கொண்ட புதிய அமைச்சரவை நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. அமைச்சரவையில் பிரதமர் ஹசீனா, 25 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 11 இணை அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளதாக அமைச்சரவை செயலாளர் … Read more
10,000 corona victims in December alone | டிசம்பர் மாதத்தில் மட்டும் கொரோனா பலி 10,000
ஜெனீவா விடுமுறை காலம் மற்றும் புதிய உருமாறிய ஜே.என்.1 வகை தொற்று பரவல் காரணமாக, கடந்த மாதம் மட்டும் கொரோனா தொற்றுக்கு உலகம் முழுதும் 10,000 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியதாவது: டிசம்பர் மாதத்தில் மட்டும், 50 நாடுகளில் கொரோனா தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் விகிதம், 42 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த நிலையை … Read more