உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்: முதலிடத்தில் 6 நாடுகள்; எந்த இடத்தில் இந்தியா?

புதுடெல்லி: 2024-ம் ஆண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலான ‘ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ்’ வெளியிட்டுள்ளது. இதன்படி பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகளும், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய ஆசிய நாடுகளும் முதலிடம் பிடித்துள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் தொடர்ந்து முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டு வருகிறது. இந்தப் பட்டியலில் பாகிஸ்தான், ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் முறையே 101, 102, 103, 104 ஆகிய இடங்களைப் … Read more

‘உலக அளவில் டிசம்பர் மாதம் மட்டும் கோவிட் தொற்றுக்கு 10,000 பேர் உயிரிழப்பு’

வாஷிங்டன்: உலக அளவில் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் கோவிட் பாதிப்பால் உயிரிழந்திருக்கின்றனர் என்றும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படுவதிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்றும் ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இது குறித்து கூறியது: “கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் கோவிட் பாதிப்பால் உயிரிழந்திருக்கின்றனர். கிட்டத்தட்ட 50 நாடுகளில், குறிப்பாக ஐரோப்பா … Read more

Maldives President meets Chinese President as wave of protests mounts in India | இந்தியாவில் அதிகரிக்கும் எதிர்ப்பு அலை: சீன அதிபருடன் மாலத்தீவு அதிபர் சந்திப்பு

பீஜிங்: மாலத்தீவுகள் நிர்வாகத்துக்கு எதிராக, நம் நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் முஹமது முய்சு, சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை நேற்று சந்தித்து பேசினார். தெற்காசிய நாடான மாலத்தீவுகளில் கடந்த ஆண்டு செப்டம்பரில் அதிபர் தேர்தல் நடந்தது. இதில், நம் அண்டை நாடான சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாடு உடைய முஹமது முய்சு, புதிய அதிபராக தேர்வானார். சமீபத்தில் மாலத்தீவுகளைச் சேர்ந்தசில அமைச்சர்கள், நம் பிரதமர் நரேந்திர மோடி குறித்தும், நம் நாட்டின் சுற்றுலா … Read more

பன்னுன் விவகாரம் | நிகில் குப்தா வழக்கறிஞருக்கு ஆதாரங்களை வழங்க அமெரிக்கா எதிர்ப்பு

புதுடெல்லி: அமெரிக்க சீக்கியரான குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய நிகில் குப்தா என்ற இந்தியர் மூலம் இந்திய அதிகாரி முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக நிகில் குப்தாவின் வழக்கறிஞர்களுக்கு ஆதரங்களை வழங்க அமெரிக்க அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து செக் குடியரசில் இருந்து நிகில் குப்தாவை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கான நடைமுறைகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்கின் ஆதாரங்களை ஒப்படைக்கும் அவரது கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு இந்தக் கடிதத்தை சமர்ப்பிப்பதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் … Read more

jn1 coronavirus, Tedros Adhanom Ghebreyesus: Death due to covid : World Health Organization information | கோவிட் பாதிப்பால் மரணம்: உலக சுகாதார மையம் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: கோவிட் பாதிப்பால் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாக உலக சுகாதார மைய தகவல் தெரிவிக்கிறது.இது தொடர்பாக இந்த அமைப்பின் டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் கூறியிருப்பதாவது: கோவிட் ஜே.என்-1 பாதிப்பு மிக கவலை அளிக்கிறது. கோவிட் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி, கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்டவை அவசியம் என வலியுறுத்தினோம். விடுமுறை காலம் மற்றும் மக்கள் அதிகம் கூடுதல், … Read more

சமூக ஊடக வதந்தியால் மூண்ட கலவரம்: பப்புவா நியூ கினியா நாட்டில் 15 பேர் பலி

மோர்ஸ்பி: பப்புவா நியூ கினியா நாட்டில் அரசு ஊழியர்கள், காவலர்கள், பொதுப்பணித்துறை ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு சம்பளக்குறைப்பு செய்யப்போவதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து போலீஸார் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கலவரம் வெடித்தது. இதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய கண்டத்தில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா நாட்டில், அரசு ஊழியர்கள், காவலர்கள் பொதுப்பணித்துறை ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு சம்பளக்குறைப்பு செய்யப்போவதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து போலீஸார் மற்றும் … Read more

Pannun murder plot: US objects to providing proof to Nikhil Guptas lawyers | பன்னுனைக் கொல்ல சதி: நிகில் குப்தாவிடம் ஆதாரங்களை காட்ட அமெரிக்க எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: காலிஸ்தான் பயங்கரவாதி குர்பந்த சிங் பன்னுனைக் கொல்ல சதி செய்ததாக கைது செய்யப்பட்ட நிகில்குப்தா மீதான கொலைக் குற்றச்சாட்டின் ஆதாரத்தை காட்ட அமெரிக்க அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவின் குடியுரிமை பெற்ற காலிஸ்தான் பயங்கரவாதியும், ‛நீதிக்கான சீக்கியர் அமைப்பின்’ தலைவருமான குர்பத்வந்த் சிங் பன்னுனை, நியூயார்க்கில் வைத்து கொலை செய்ய இந்திய அதிகாரியுடன் இணைந்து முயன்றதாகவும், அதற்காக ஒருஆளை வாடகைக்கு அமர்த்தியதாகவும் நிகில் குப்தா மீது … Read more

கரோனா பரவல் உச்சம்: மருத்துவமனைகளில் முகக்கவசத்தை கட்டாயமாக்கியது ஸ்பெயின் அரசு

மாட்ரிட்: கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் ஸ்பெயின் நாட்டில் உள்ள மருத்துவமனைகள், மருந்தகங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு அங்கு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா தொற்று கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது. அத்துடன் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளுடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் முகக்கவசம் அணிய மக்களை வலியுறுத்துமாறு அந்த … Read more

Canada News Today: Pearson International Airport :Man Jumps From Planes Cabin Door Before Take-Off In Canada, Sustains Injuries | கிளம்பும் போது விமானத்தில் இருந்து குதித்த நபர்: கனடாவில் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஒட்டாவா: கனடாவில் விமானம் கிளம்பும் நேரத்தில் கதவை திறந்து பயணி கீழே குதித்த சம்பவம் சக பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கனடாவின் ஆன்டாரியோ நகரில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு ‛ ஏர் கனடா’விற்கு சொந்தமான விமானம் ஒன்று கிளம்பியது. விமானம் கிளம்பும் நேரத்தில், அமைதியாக அமர்ந்திருந்த பயணி ஒருவர் திடீரென யாரும் எதிர்பாராத வகையில், விமானத்தின் கதவை திறந்து 20 அடி … Read more

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: ஸ்பெயினில் முகக்கவசம் கட்டாயம்..!!

மேட்ரிட், ஸ்பெயின் நாட்டில் காய்ச்சல், கொரோனா மற்றும் பிற சுவாச நோய்கள் அதிகரித்து வருவதால், இன்று முதல் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுகாதார வசதிகள் மற்றும் மருந்தகங்களில் முகக்கவசங்களின் பயன்பாடு கட்டாயமாக நிறுத்தப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட அரசாங்க முடிவுகள், சில பிராந்திய நிர்வாகங்களின் எதிர்ப்பை எதிர்கொண்டது. இந்த சூழலில் ஸ்பெயின் நாட்டின் வெலெனிக்கா, கடலொனியா, முர்சியா ஆகிய மாகாணங்களில் பொது இடங்களில் முகக்கவசம் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. தினத்தந்தி … Read more