Gun-wielding drug gang atrocity on live TV terrorizes Ecuador | டிவி நேரலையில் துப்பாக்கி காட்டி போதை கடத்தல் கும்பல் அட்டூழியம் ஈக்வடாரில் பயங்கரம்

குவாயாகில், ஈக்வடார் நாட்டில், செய்தி தொலைக்காட்சியின் நேரலை ஒளிபரப்பின்போது, அரங்கத்திற்குள் நுழைந்த துப்பாக்கி ஏந்திய கும்பல், செய்தியாளர்கள் மற்றும் நிலைய ஊழியர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் நேரலையில் ஒளிபரப்பாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில், ‘கார்டல்’ என்றழைக்கப்படும், போதை பொருள் கடத்தல் கும்பல்களின் அட்டூழியம் கட்டுக்கடங்காமல் உள்ளது. அதிரடி நடவடிக்கை அரசு, போலீஸ், சட்டம் என எதையும் மதிக்காமல் இஷ்டம் போல இவர்கள் ஆட்டம் போட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஈக்வடார் … Read more

பாலியல் வன்கொடுமை வழக்கில் நேபாள கிரிக்கெட் வீரர் லாமிச்சேனுக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காத்மாண்டு: பாலியல் வன்கொடுமை வழக்கில் நேபாள கிரிக்கெட் வீரர் லாமிச்சேனுக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம். கடந்த டிசம்பர் 29-ம் தேதி காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்தது. 23 வயதான சந்தீப் லாமிச்சேன் மீது கடந்த 2022-ல் பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. 17 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்தார் என்பது தான் அவர் மீதான குற்றச்சாட்டு. தொடர்ந்து ஆண்டு ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த விவகாரம் … Read more

10 கி.மீ கடக்க 37 நிமிடம்… உலகிலேயே மிக மெதுவாக வாகனங்கள் இயங்கும் நகரங்களில் லண்டன் முதலிடம்!

லண்டன்: உலகிலேயே வாகனங்கள் மிக மெதுவாக இயக்கப்படும் நகரமாக லண்டன் இருக்கிறது. இங்கே மணிக்கு 20 மைல் வேகத்திலேயே வாகனங்களை ஓட்டுநர்கள் இயக்குவதாக ஓர் ஆய்வறிக்கை கூறுகின்றது. மத்திய லண்டனில் 10 கிமீட்டர் தூரத்தைக் கடக்க 37 நிமிடங்கள் 20 நொடிகள் ஆவதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாம்டாம் என்ற இருப்பிடம் (லொகேஷன்) கண்டறியும் தொழில்நுட்ப நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. உலகம் முழுவதும் 55 நாடுகளில் 387 நகரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதில் லண்டன் … Read more

“காசா போரில் குழந்தைகள், அப்பாவி மக்கள் கொடுத்த விலை அதிகம்” – அமெரிக்க வெளியுறவு அமைச்சர் @ இஸ்ரேல்

டெல் அவிவ்: காசா போரில் குழந்தைகள், அப்பாவி பொதுமக்கள் கொடுத்த விலை அதிகமானது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் போர் 3 மாதங்களைக் கடந்து நடந்துவரும் நிலையில் பிளின்கன் இஸ்ரேல் வந்துள்ளார். இந்தப் போர் ஆரம்பித்த பின்னர் அவர் நான்காவது முறையாக இஸ்ரேல் வந்துள்ளார். இஸ்ரேல் அரசுப் பிரதிநிதிகள் அதிகாரிகளுடன் அவர் போர் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் இந்தச் சந்திப்பு குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். … Read more

US, UK forces shoot down 21 drones, missiles fired by Houthis in Red Sea | செங்கடலில் தொடரும் ஹவுதி தாக்குதல்: 21 ஏவுகணைகளை வீழ்த்தியது அமெரிக்கா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: செங்கடல் பகுதியில் பல சர்வதேச சரக்கு கப்பல்கள் செல்லும் வழித்தடத்தை குறி வைத்து, ஹவுதி அமைப்பினர் தாக்கிய 21 ஏவுகணைகளை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இந்த போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஏமனின் ஹவுதி படை செயல்படுகிறது. இவர்கள், காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவில்லை … Read more

“அது எங்களுடைய தவறு” – அலாஸ்கா விமான விபத்துக்கு பொறுப்பு ஏற்றார் போயிங் சிஇஓ

நியூயார்க்: அலாஸ்கா ஏர்லைன்ஸின் விமானம் ஒன்றின் கதவு நடுவானில் வெடித்துப் பறந்த அபாயகரமான சம்பவத்துக்கு போயிங் நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது.அது எங்களுடைய தவறு என்று அந்நிறுவனத்தின் சிஇஓ டேவ் கால்ஹவுன் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மை இருக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். அலாஸ்கா ஏர்லைன்ஸின் போயிங் 737- 9 மேக்ஸ் ரக விமானம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை அண்டாரியோவுக்கு செல்லும் வழியில் அதன் கதவு ஒன்று நடுவானில் வெடித்துப் பறந்தது. இதனால் அந்த விமானம் அவசரமாக போர்ட்லேண்டில் … Read more

Israel-Hamas War: Loss of Lives Unacceptable: Indias Opinion | இஸ்ரேல்-ஹமாஸ் போர்: உயிர் இழப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது: இந்தியா கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் ஏற்படும் உயிர் இழப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி ருசிரா கம்போஜ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை கூட்டம் நடந்தது. அப்போது, ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி ருசிரா கம்போஜ் பேசியதாவது: காசாவில் காணப்படும் சூழ்நிலையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கும் மற்றும் மனிதநேய உதவிகளை நீட்டிப்பதற்கும் இந்தியா தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேல் மற்றும் … Read more

Union Minister Smriti Irani in Madina | மதீனா நகரில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ரியாத்: சவுதி அரேபியாவில், இஸ்லாமியர்களின் புனித நகரமான மதீனாவுக்கு ஸ்மிருதி இரானி பயணம் மேற்கொண்டார். இது குறித்த புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, வெளியுறவு இணையமைச்சர் முரளீதரன் ஆகியோர் அரசு முறைப்பயணமாக சவுதி அரேபியா சென்றுள்ளனர். அங்கு ஹஜ் பயணம் தொடர்பான ஒப்பந்தத்தில் இரு நாட்டு அமைச்சர்களும் கையெழுத்து போட்டனர். பிறகு, இஸ்லாமியர்களின் புனித நகரமான மதினாவுக்கும், திங்கள் கிழமை ஸ்மிருதி … Read more

பிரான்ஸ் பிரதமராக கேப்ரியல் நியமனம்

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக 34 வயது கேப்ரியல் அட்டல் அறிவிக்கப்பட்டுள்ளார். பிரான்ஸ் அதிபராக இமானுவேல் மேக்ரான், இரண்டாவது முறையாக பதவி வகிக்கிறார். அவது பதவிக் காலம் முடிய இன்னும் 3 ஆண்டுகள் உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு அரசுஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்தும் முடிவு, புதிய குடியேற்ற மசோதா ஆகியவற்றுக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து மக்களின் அதிருப்தியை சரிசெய்யும் முயற்சியாக அமைச்சரவையை மாற்றி அமைக்க அதிபர் மேக்ரான் முடிவு செய்தார். இதன்படி, … Read more

தாமரை வடிவிலான வானியல் செயற்கைக்கோளை செலுத்தியது சீனா

பீஜிங்: பிரபஞ்சத்தில் வாணவேடிக்கைகளைப் போல ஒளிரும் மர்மமான நிலையற்ற நிகழ்வுகளைக் கண்காணிப்பதற்காக தாமரை வடிவிலான புதிய வானியல் செயற்கைக்கோளை சீனா இன்று விண்ணில் செலுத்தியது. ஐன்ஸ்டீன் புரோப் (EP)என்ற இந்த செயற்கைக்கோள், லாங் மார்ச்-2சி என்ற ராக்கெட் மூலம் தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது. புதிய எக்ஸ்ரே கண்டறிதல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த செயற்கைக்கோள், வானியல் நிகழ்வுகளை படம்பிடிக்க உள்ளது. செயற்கைக் கோள் சுமார் 1.45 டன் எடை … Read more