டிரம்ப் பதவி ஏற்ற பிறகு அமெரிக்காவில் இருந்து 6 மாதங்களில் 1,563 இந்தியர்கள் நாடு கடத்தல்

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக டெனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருந்த இந்தியர்கள் உள்பட பிற நாட்டை சேர்ந்தவர்கள் விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டனர். இந்தியர்கள் கை விலங் கிட்டு நாடு கடத்தப்பட்டது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதியில் இருந்து இம்மாதம் (ஜூலை) 15-ந்தேதி வரை அமெரிக்காவில் இருந்து இதுவரை 1,563 இந்தியர்கள் நாடு … Read more

சரியான நேரத்தில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வேன்; நேபாள பிரதமர்

காத்மண்டு, நேபாளத்தின் பிரதமராக 4வது முறையாக கேபி சர்மா ஒலி கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவியேற்றார். வழக்கமாக நேபாளத்தின் பிரதமராக பதவியேற்பவர்கள் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவிற்கு வருவார்கள். ஆனால், கடந்த ஆண்டு பிரதமராக பதவியேற்ற கேபி சர்மா ஒலி தனது முதல் வெளிநாட்டு பயணமாக சீனாவுக்கு சென்றார். மேலும், நேபாளம் சீனாவுடன் நெருக்கம் காட்டி வருவது இந்தியாவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சரியான நேரத்தில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வேன் என்று நேபாள பிரதமர் கேபி … Read more

பாராகிளைடிங் விபத்தில் உலகப் புகழ் பெற்ற ஸ்கை டைவிங் வீரர் உயிரிழப்பு

ரோம், ஆஸ்தியாவை சேர்ந்த உலகப் புகழ் பெற்ற பாராகிளைடிங் வீரர் பெலிக்ஸ் பாம்கார்ட்னர்(வயது 56). இவர் கடந்த 2012-ம் ஆண்டு ‘ரெட் புல் ஸ்ட்ராடோஸ்’ என்ற திட்டத்தின்கீழ், பூமியின் வளிமண்டலத்திற்கும் விண்வெளிக்கும் இடையே உள்ள எல்லையில் இருந்து பூமியை நோக்கி ஸ்கை டைவிங் செய்து சாதனை படைத்தார். அப்போது அவர் ஒலியை விட சுமார் 1.25 மடங்கு அதிக வேகத்தில் பூமியை நோக்கி விழுந்தார். பின்னர் பாராசூட் மூலம் நியூ மெக்சிகோ பாலைவனத்தில் பத்திரமாக தரையிறங்கினார். இதன் … Read more

அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடுக்கிவிடப்பட வேண்டும் என்பதில் உக்ரைனுடன் உடன்படுகிறேன் – புதின்

மாஸ்கோ: ரஷ்யா – உக்ரைன் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடுக்கிவிடப்பட வேண்டும் எனும் ஜெலன்ஸ்கியின் கருத்தில் உடன்படுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. நேட்டோவில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி அந்நாட்டுக்கு எதிராக ரஷ்யா, ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை நடைபெற்ற சமாதான முயற்சிகள் பலனளிக்கவில்லை. எனினும், அமைதிக்கான தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், போரில் ஈடுபட்டு வரும் நாடுகள் … Read more

3 பேரின் டிஎன்ஏ-க்களுடன் குழந்தைப் பிறப்பு: பரம்பரை நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் மைல்கல் முயற்சி!

மருத்துவ உலகின் ஒரு புதிய மைல் கல் என்று சொல்லும் அளவுக்கு, பிரிட்டனில் 3 பேரின் டிஎன்ஏ மூலம் குழந்தை பிரசவிக்கும் முறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த முறையில் அங்கு 8 குழந்தைகள் பிறந்துள்ளன. பரம்பரை நோய்கள் அடுத்த வாரிசுகளுக்கு கடத்தப்படுவதை தடுக்கவே மகப்பேறு சிகிச்சையில் இந்தப் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் பிறக்கும் குழந்தைகள், தனது தாய், தந்தை மற்றும் கருமுட்டை தானமாக அளிக்கும் பெண் ஆகிய 3 பேரின் டிஎன்ஏ-க்களைப் பெற்றிருக்கும். இவ்வாறாக … Read more

உலக லெவல் வைரலான கள்ள உறவு… Kiss Cam-ல் சிக்கிய சிஓஇ – என்ன மேட்டர்?

Andy Byron Affair Viral Video: பிரபல இசை நிகழ்ச்சியின் போது, பிரபல நிறுவனத்தின் சிஇஓ திருமணத்தை தாண்டிய உறவில் இருந்த வீடியோ தற்போது உலகளவில் வைரலாகி வருகிறது.

‘கிஸ் கேம்’ சர்ச்சையில் சிக்கிய சிஇஓ – யார் இந்த ஆண்டி பைரான்? – முழு பின்னணி

ஆஸ்ட்ரோனமர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆண்டி பைரானும், அதே நிறுவனத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவரும் இசை நிகழ்ச்சி ஒன்றில் நெருக்கமாக இருக்கும் வீடியோவை பற்றித்தான் சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் பேச்சு. அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் பிரபல இசைக்குழுவான ‘கோல்ட்பிளே’ இசை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. உலகில் பல்வேறு நாடுகளில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளில், விளையாட்டுப் போட்டிகளில் ’கிஸ் கேம்’ என்ற கேமரா வைக்கப்படுவது வழக்கம். இதன் மூலம் போட்டியின் போது நெருக்கமாக … Read more

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு மருத்துவ பரிசோதனை ஏன்? – வெள்ளை மாளிகை விளக்கம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் கணுக்கால் பகுதியில் வீக்கம் அதிகரித்ததை தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அது குறித்த அப்டேட்டை வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக பகிர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு இப்போது 79 வயது ஆகிறது. அண்மையில் அவர் பங்கேற்ற நிகழ்வின்போது அவரது கணுக்கால் பகுதியில் வீக்கம் இருந்ததும், கையில் ரத்தக்கட்டு போன்ற காயம் இருந்ததும் கவனத்துக்கு வந்தது. அதை மறைக்கும் வகையில் ஒப்பனை செய்திருந்தார் ட்ரம்ப். இதனால் அவரது உடல்நலன் குறித்த கேள்வி … Read more

மழை, வெள்ள பாதிப்​பு​களால் கடந்த 3 வாரங்​களில் பாகிஸ்தானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 150 ஆக உயர்வு

இஸ்லாமாபாத்: ​பாகிஸ்​தானில் மழை, வெள்ள பாதிப்​பு​களால் கடந்த 3 வாரங்​களில் 150-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ளனர். பாகிஸ்​தானில் பஞ்​சாப், கைபர் பக்​துன்​வா, ஜில்​ஜிட்​-​பால்​டிஸ்​தான் உள்​ளிட்ட பகு​தி​களில் கடந்த சில வாரங்​களாக கனமழை பெய்து வரு​கிறது. தலைநகர் இஸ்​லா​மா​பாத், ராணுவ தலை​மையக​மான ராவல்​பிண்டி உட்பட பல்​வேறு நகரங்​கள், கிராமங்​கள் வெள்​ளத்​தில் மூழ்கி உள்​ளன.ஜீலம், சிந்​து, சட்​லஜ், ஜில்​ஜிட், ஸ்வாட் உள்​ளிட்ட நதி​களில் வெள்​ளம் பெருக்​கெடுத்து ஓடு​கிறது. கனமழை காரண​மாக பாகிஸ்​தானின் பஞ்​சாப் மாகாணம் முழு​வதும் அவசர நிலை அமல் செய்​யப்​பட்டு … Read more

கம்போடியாவில் சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 1,000 பேர் கைது

நாம்பென்: கம்​போடியா அரசு வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யுள்​ள​தாவது: ஆன்​லைன் மோசடிகள் தொடர்பாக ஐந்து மாகாணங்​களில் தீவிர சோதனை நடத்​தப்​பட்​டது. இதில், 1,000-க்​கும் மேற்​பட்டோர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இதில், 200-க்​கும் மேற்​பட்​ட​வர்​கள் வியட்​நாம் நாட்டை சேர்ந்​தவர்​கள். 27 பேர் சீனர்​கள், 75 பேர் தைவானை சேர்ந்​தவர்​கள். உள்​நாட்​டைச் சேர்ந்த 85 பேரும் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். அவர்​களிட​மிருந்து கணினிகள், மொபைல்​போன்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன. Source link