லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 2 பத்திரிகையாளர்கள் பலி

பெய்ரூட்: லெபனான் நாட்டின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 2 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் இருவரும் அந்த நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் இயங்கி வரும் அல்-மயாதீன் எனும் அரபு மொழி தொலைக்காட்சிக்காக பணியாற்றி வந்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது அவர்கள் லெபனான் – இஸ்ரேல் எல்லை நிலவரம் தொடர்பாக செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகவல் அந்த நாட்டின் தகவல் துறை அமைச்சர் ஜியாத் மக்காரி உறுதி செய்துள்ளார். இந்த தாக்குதலில் லெபனான் நாட்டை … Read more

போரில் பெற்றோர்… குழந்தைகளை மகிழ்வித்த மேஜிக் நிபுணர் கண்ணீர்

டெல் அவிவ், இஸ்ரேலில் புலம்பெயர்ந்து சென்ற குழந்தைகள் மற்றும் ராணுவ வீரர்களை மகிழ்விக்கும் உன்னத பணியில் ஆலன் சகோவிஜ் என்பவர் ஈடுபட்டு உள்ளார். இதற்காக அவர், இப்ராத், கிர்யாத் கத், பெய்ட் ஷீமேஷ், ஜெருசலேம் மற்றும் பெய்தர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த அக்டோபர் 26-ந்தேதி முதல் நவம்பர் 7-ந்தேதி வரையிலான 9 நாட்களில் அதிரடி சுற்றுப்பயணம் செய்து, 26 மேஜிக் ஷோக்களை நடத்தியிருக்கிறார். இதில், இப்ராத் பகுதியில் ஒட்டுமொத்த மக்கள் தொகையான 10,800 பேரில் 960 பேர் … Read more

இது 3வது முயற்சி.. இந்த வாரத்திலேயே உளவு செயற்கைக்கோளை ஏவ தயாராகும் வட கொரியா

சியோல், வட கொரியா, தென் கொரியா நாடுகளுக்கிடையிலான மோதல் காரணமாக கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா மேற்கொள்ளும் ஏவுகணை சோதனைகள், போர் ஒத்திகை போன்ற ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. பதற்றத்தை தணிக்க சமாதான ஒப்பந்தம் போடப்பட்டிருந்தாலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. வட கொரியாவை கண்காணிக்கும் வகையில், தென் கொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை வரும் 30 ஆம் தேதி செலுத்த திட்டமிட்டுள்ளது. … Read more

காசா: 250 பயங்கரவாத இலக்குகள் அழிப்பு

டெல் அவிவ், இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன் எல்லை பகுதியையும் சூறையாடி, வன்முறையில் ஈடுபட்டது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். 2,700 பேர் காணாமல் போயுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தளபதிகள் … Read more

சூடானில் கடுமையான மோதல்; ஐ.நா. அமைதி காப்பாளர் உள்பட 32 பேர் பலி

கார்டூம், சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே கடந்த ஏப்ரலில் மோதல் ஏற்பட்டது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் உள்நாட்டிற்குள்ளேயும் மற்றும் அண்டை நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து சென்று உள்ளனர். இதுவரை 9 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என ஐ.நா. புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கின்றது. இந்நிலையில், சூடான் மற்றும் தெற்கு சூடான் இடையே சர்ச்சைக்குரிய பகுதியை சொந்தம் கொண்டாடுவதில் மோதல் ஏற்பட்டது. இதில், அபைய் என்ற நிர்வாக பகுதிக்கு உட்பட்ட இரண்டு கிராமங்களுக்குள் புகுந்த அடையாளம் … Read more

“இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் உள்ளது” – ஹமாஸ் தலைவர் தகவல்

புதுடெல்லி: இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தெரிவித்துள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh), “இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது” என டெலிகிராமில் தெரிவித்துள்ளார். கத்தார் இருதரப்புகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இரண்டு தரப்பிலும் சுமுக முடிவு விரையில் எட்டப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில். இஸ்ரேல் 5 நாள் போர் நிறுத்தமும், தெற்கு … Read more

சுரிநாம் நாட்டில் தங்கச் சுரங்கத்தில் விபத்து: 10 தொழிலாளர்கள் பரிதாப பலி

சுரிநாம்: தெ.அமெரிக்க நாடான சுரிநாமின் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். விபத்துப் பகுதிக்கு காவல்துறை, ராணுவ அதிகாரிகள், மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். விபத்து நடந்தது நாட்டின் தென் பகுதியில். விபத்துக்குள்ளான சுரங்கம் அரசுக்கு சொந்தமானது அல்ல, சட்டபூர்வமானதும் அல்ல. மாறாக சிலர் தாமாகவே இணைந்து தங்கத்தைத் தேடி சுரங்கம் அமைத்து தங்கம் சேகரிக்க முயற்சித்துள்ளனர். அப்போது சுரங்கம் இடிந்துவிழுந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சுரிநாமில் இதுபோல் மக்களே இணைந்து தங்கம் தேடுவது வழக்கமான … Read more

மைக்ரோசாஃப்ட்டில் இணைந்தார் சாம் ஆல்ட்மேன்

புதுடெல்லி: சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவன சிஇஓ பதவியில் இருந்து நீக்கப்பட்ட சாம் ஆல்ட்மேன் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் இணைந்துள்ளார். இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவன சிஇஓ சத்யா நாதெல்லா,எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: சாம் ஆல்ட்மேன் மற்றும் அதன்முன்னாள் தலைவர் கிரெக் ப்ரோக்மேன் ஆகியோர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் இணைந்து செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆராய்ச்சிக்கான புதிய குழுவை வழிநடத்துவார்கள். ஓப்பன் ஏஐ நிறுவனத்துடனான எங்கள் கூட்டணி தொடரும். அத்துடன் வாடிக்கையாளர்களுக்கு புதுவிதமான தயாரிப்புகளை வழங்குவோம் என்பதிலும் நம்பிக்கை கொண்டுள்ளோம். … Read more

What happened to the 25 people in the hijacked cargo ship? | கடத்தப்பட்ட சரக்கு கப்பலில் 25 பேர் கதி என்ன

டெல் அவிவ் : இந்தியா வந்த இஸ்ரேல் நாட்டுடன் தொடர்புடைய சரக்கு கப்பலை நடுக்கடலில் ஹவுதி பயங்கரவாதிகள் கடத்திய நிலையில் அதில் இருந்த 25 சிப்பந்திகளை மீட்பது தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே கடந்த மாதம் 7ம் தேதி முதல் போர் நடந்து வருகிறது. எச்சரிக்கை இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஏமனின் ஹவுதி கிளர்ச்சி படை … Read more

இந்தியாவுடனான 100 ஒப்பந்தங்கள் மறுஆய்வு: மாலத்தீவு அதிபர்

மாலி: மாலத்தீவு நாட்டின் அதிபராக 2018 முதல் இப்ராஹிம் முகமது சோலி (மாலத்தீவு ஜனநாயக கட்சி) பதவி வகித்தார். இவரது பதவிக் காலத்தில் மாலத்தீவு இந்தியாவின் நட்பு நாடாக விளங்கியது. அங்கு 77 இந்தியவீரர்கள் பாதுகாப்புப் பணிக்காக முகாமிட்டுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முகமது முய்சு கடந்த 17-ம் தேதி அதிபராக பொறுப்பேற்றார். சீன ஆதரவு தலைவராக கருதப்படும் முய்சு அதிபராக பொறுப்பேற்ற மறுநாளே இந்தியா தனது ராணுவ … Read more