“எங்களின் ஆபாத்பாந்தவன்…”: இந்தியாவுடனான பழைய உறவுகளை நினைவுகூர்ந்த மாலத்தீவு முன்னாள் அமைச்சர்

மாலே: பிரதமர் நரேந்திர மோடி குறித்த தரக்குறைவான கருத்துகள் மாலத்தீவு அரசின் குறுகிய பார்வையை வெளிப்படுத்துவதாக அந்நாட்டு முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மரியா அகமது திதி தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா எங்களுக்கு தேவைப்படும் காலங்களில் வந்து உதவும் ‘911’ அவசர எண் போன்ற ஆபத்பாந்தவன் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாலத்தீவு முன்னாள் அமைச்சர் மரியா அகமது திதி இந்தியாவுடனான முந்தைய நட்பை நினைவுகூர்கையில், “பிரதமர் மோடி மீதான விமர்சனங்கள் தற்போதைய மாலத்தீவு அரசாங்கத்தின் குறுகியப் பார்வையை வெளிப்படுத்துகிறது. … Read more

Maldives leader calls for steps to remove President Muizzu amid row with India | மாலத்தீவு அதிபரை பதவி நீக்கம் செய்ய கோரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாலே: பிரதமர் மோடியை மாலத்தீவு அமைச்சர்கள் கேலி செய்த விவகாரத்தில், அதிபரை பதவி நீக்கம் செய்ய பார்லிமென்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நாட்டில் கோரிக்கை எழுந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை, மாலத்தீவு அமைச்சர்கள் அப்துல்லா மஹ்சூம், மால்ஷா ரஷீப், மரியம் ஷியுனா ஆகியோர் விமர்சித்ததுடன், கேலி செய்தனர். இதற்கு இந்தியர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அவர்களை மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் கண்டித்தார். 3 அமைச்சர்களும் … Read more

வங்கதேச பொதுத்தேர்தலில் வெற்றி; 5-வது முறை பிரதமராகிறார் ஷேக் ஹசீனா

டாக்கா: வங்கதேச பொதுத்தேர்தலில் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் நேற்று முன்தினம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. நவ்கான்-2 தொகுதியில் வேட்பாளர் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் அவாமி லீக் கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது. முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத … Read more

2024 தொடங்கிய சில நாட்களில் பாபா வங்காவின் கணிப்பு அப்படியே நடக்குதே.. அடுத்தடுத்து நடந்த 2 அதிர்ச்சி சம்பவம்

வாஷிங்டன், 2024ல் பல நாடுகளில் பெரிய அளவில் சுனாமி, நிலநடுக்கம் ஏற்பட போகிறது என்று பாபா வங்கா கணித்து இருக்கிறாராம்..அவரின் கணிப்பில் அடுத்தடுத்து 2 முக்கியமான சம்பவங்கள் நடந்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2024ல் என்னென்ன நடக்கும் என்றும் பாபா வங்கா தனது கணிப்பில் எழுதி வைத்து இருக்கிறாராம். அதன்படி 2024ல் இந்தியாவின் வெப்பநிலை 50 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வெப்பநிலை காரணமாக அதிக அளவில் … Read more

16 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில் இருந்து கீழே விழுந்தும் உடையாத ஐபோன்

அமெரிக்காவின் சர்வதேச விமான நிலையம் ஒன்றிலிருந்து அலஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ‘போயிங் 737 மக்ஸ்’ ரக விமானம் ஒன்று கடந்த 5 ஆம் தேதி புறப்பட்டது. இந்த விமானம் நடுவானில் சென்ற போது திடீரென ஜன்னல் உடைந்து பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட அடுத்த சில நொடிகளில் நடுவானில் ஜன்னல் பறந்ததால் பயணிகள் அதிர்ச்சியில் அலறினர். போர்ட்லேண்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தின் ஜன்னல் பறந்ததை அடுத்து உடனடியாக தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் … Read more

இஸ்ரேல் – ஹிஸ்புல்லா மோதல்: படைத்தளபதி பலி

காசா, இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லைகளில் நடைபெற்றுவரும் மோதல் தீவிரமாகி உள்ளது . ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு அக்.7 ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகு ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வந்தது. இஸ்ரேல், கடந்த வாரம் பெய்ரூட்டில் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் முதன்மை தலைவர் பலியானார். இந்தச் சம்பவத்துக்கு இரண்டு நாள்களுக்குப் பிறகு ஹிஸ்புல்லா இஸ்ரேலின் ராணுவ நிலைகள் மீது ஏவுகணை தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. இந்த நிலையில் ஹிஸ்புல்லா தளபதி பயணித்த கார் மீது … Read more

வாடகைத்தாய் முறைக்கு தடை விதிக்க வேண்டும்: போப் பிரான்சிஸ்

ரோம், குழந்தையின்மையை போக்க ஏராளமான மருத்துவ தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டன. அவற்றில் ஒன்றுதான் வாடகைத்தாய் அல்லது பதிலித்தாய் எனும் முறை. ஆங்கிலத்தில் surrogacy என்று கூறப்படுகிறது. ஒரு பெண் மற்றொரு பெண்ணுக்காக தன்னுடைய கர்ப்பப்பையை பயன்படுத்தி குழந்தை பெற்றெடுக்கும் முறையே வாடகைத்தாய் எனப்படுகிறது. குழந்தை பிறந்த பிறகு அதை பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். உடல்ரீதியாக குழந்தை பெற்றெடுக்க முடியாத பெற்றோருக்காக இந்த முறை கொண்டு வரப்பட்டது. சமீப காலமாக வாடகைத்தாய் மூலமாக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் போக்கு உலக … Read more

Sheikh Hasina becomes the prime minister for the fourth consecutive term Bangladesh election | தொடர்ந்து நான்காவது முறையாக பிரதமராகிறார் ஷேக் ஹசீனா வங்கதேச தேர்தல்

டாக்கா: வங்கதேசத்தில் நடந்த பொதுத் தேர்தலில், பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆவாமி லீக் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, தொடர்ந்து நான்காவது முறையாக அவர் பிரதமராக பதவியேற்க உள்ளார். நம் அண்டை நாடான வங்கதேசத்தில் நேற்று முன்தினம் பொதுத் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 300 தொகுதிகளில், ஒரு தொகுதியில் வேட்பாளர் உயிரிழந்ததை அடுத்து, 299 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. ‘பிரதமராக ஷேக் ஹசீனா இருந்தால், தேர்தல் நியாயமாக நடைபெறாது’ எனக் கூறி, இத்தேர்தலை, … Read more

இது டம்மி தேர்தல்.. புதிதாக தேர்தல் நடத்தவேண்டும்: வங்காளதேச பிரதான எதிர்க்கட்சி வலியுறுத்தல்

டாக்கா: வங்காளதேசத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியான அவாமி கட்சி அமோக வெற்றி பெற்றது. தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக குற்றஞ்சாட்டி முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன. ஆனால், ஜதியா கட்சி, வங்காளதேசம் கல்யாண் கட்சி போன்ற கட்சிகள் போட்டியிட்டன. தேர்தல் நடைபெற்ற 299 தொகுதிகளில் 223 தொகுதிகளை கைப்பற்றி ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்காளதேசத்தின் பிரதமராக ஷேக் ஹசீனா 4வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஷேக் ஹசீனாவின் பதவியேற்பு … Read more