Arrest of opposition parties who set fire to the train in Bangladesh | வங்கதேசத்தில் ரயிலுக்கு தீ எதிர்க்கட்சியினர் கைது

டாக்கா, வங்கதேசத்தில், பயணியர் ரயிலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் இரு குழந்தைகள் உட்பட நான்கு பேர் பலியாகினர். இதுதொடர்பாக எதிர்க்கட்சி பிரமுகர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நம் அண்டை நாடான வங்கதேசத்தில், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில், ஆவாமி லீக் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு, இன்று பொதுத்தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலை, பிரதான எதிர்க்கட்சியான பி.என்.பி., எனப்படும் பங்களாதேஷ் தேசியவாத கட்சி புறக்கணித்துள்ளது. ‘ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தால் தேர்தல் நியாயமாக நடைபெறாது’ என, … Read more

“இந்தியா நம்பகமான நட்பு நாடு; எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தது” – வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பேச்சு

டாக்கா: “இந்தியா ஒரு நம்பகமான நட்பு நாடு, 1971-ம் ஆண்டு விடுதலைப் போரின்போது எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தது” என்று வங்கதேச பிரதமர் ஷேத் ஹசீனா தெரிவித்துள்ளார். வங்கதேசத்தின் 12-வது பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. தேர்தல் நாளில் இந்தியாவுக்கு அவர் அனுப்பிய செய்தி குறித்து அவரிடம் கேட்டபோது, “நாம் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இந்தியா எங்களின் நம்பகமான நட்பு நாடு. எங்களின் விடுதலைப் போரின் போது எங்களுக்கு ஆதரவளித்தது. 1975-க்கு பின்னர் நாங்கள் எங்கள் ஒட்டுமொத்த … Read more

Chinese survey ships banned in Sri Lanka | சீன ஆய்வு கப்பல்களுக்கு இலங்கையில் தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கையில் சீனாவின் ஆய்வு கப்பல்கள் நிறுத்தப்படுவது குறித்து இந்தியா கவலை தெரிவித்ததால், இலங்கையின் கடல் பகுதிக்குள் வெளிநாட்டு ஆய்வு கப்பல்கள் நுழைவதற்கு ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை புவிசார் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது. இங்குள்ள கொழும்பு துறைமுக பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக ஆராய்ச்சி என்ற பெயரில் சீனாவின் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்ட சம்பவங்கள் அரங்கேறி வந்தன. கடந்த ஆண்டு அக்டோபரில் சீனாவின் ஷி யான் … Read more

Elections: இன்று வாக்குப்பதிவு, நாளை முடிவுகள்… ஆனால் பிரதமர் இவர் தான்

Bangladesh PM Sheikh Hasina: எதிர்க்கட்சிகளே கலந்துக் கொள்ளாத பொதுத்தேர்தல்! பங்களாதேஷில் இன்று வாக்குப்பதிவு, நாளை முடிவுகள்…  

Bangladesh Election: Prime Minister Sheikh Hasina casts her vote | வங்கதேச தேர்தல்: ஓட்டளித்தார் பிரதமர் ஷேக் ஹசீனா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டாக்கா: வங்கதேச பொதுத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்கியது. டாக்காவில் உள்ள ஓட்டுச்சாவடியில் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ஓட்டுப்பதிவு செய்தார். 12 கோடி பேர் ஓட்டளிக்கவுள்ள நிலையில், 25 கட்சிகளை சேர்ந்த சுமார் 1,500 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வங்கதேச நாட்டில் அவாமி லீக் கட்சி ஆட்சி நடக்கிறது. பிரதமராக ஷேக் ஹசீனா உள்ளார். இவரது பதவி காலம் நிறைவடைந்ததையடுத்து, நாட்டின் 12 வது பொதுத்தேர்தல் இன்று(ஜன.,07) காலை துவங்கியது. தேர்தலையொட்டி … Read more

First ever jallikattu tournament in Sri Lanka | முதல் முறையாக இலங்கையில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி

கொழும்பு, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி, முதன் முறையாக நம் அண்டை நாடான இலங்கையின் திரிகோணமலையில் நேற்று நடந்தது. தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் நம் ஊரை போன்று, பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவதில்லை. இந்நிலையில் தமிழகத்தின் சிவகங்கையை பூர்வீகமாக கொண்ட செந்தில் தொண்டைமான், தற்போது திரிகோணமலை மாகாண கவர்னராக உள்ளார். இவர், தமிழகத்தை போல இலங்கையிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தார். இதன்படி, … Read more

Myanmar confirms that key northeastern city near China has been seized by an armed ethnic alliance | மியான்மரில் உள்நாட்டு போர் தீவிரம்: முக்கிய நகரை கைப்பற்றியது ஆயுதக்குழு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாங்காக்: மியான்மரில் அரசு படைகளுக்கு எதிராக களமிறங்கியுள்ள பழங்குடியின ஆயுதக் குழு, வடகிழக்கே சீனாவுடனான எல்லையில் உள்ள முக்கிய நகரை கைப்பற்றி உள்ளது. நம் அண்டை நாடான மியான்மரில், ஆங் சான் சூச்சி தலைமையிலான அரசை கவிழ்த்து, 2021ல் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, ராணுவ ஆட்சிக்கு எதிராக, நாட்டிலுள்ள பழங்குடியின குழுக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆதரவு மூன்று முக்கிய அமைப்புகள் அடங்கிய இந்த ஆயுதம் … Read more

Bangladesh general election today: Sheikh Hasina again? | இன்று வங்கதேச பொதுத்தேர்தல்: மீண்டும் ஷேக் ஹசீனா ?

டாக்கா: வங்கதேச பொதுத்தேர்தல் இன்று நடக்கிறது. இத்தேர்தலை பிரதான எதிர்கட்சி புறக்கணித்து, பொதுவேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கதேச நாட்டில் அவாமி லீக் கட்சி ஆட்சி நடக்கிறது. பிரதமராக ஷேக் ஹசீனா உள்ளார். இவரது பதவி காலம் நிறைவடைந்ததையடுத்து, நாட்டின் 12 வது பொதுத்தேர்தல் இன்று காலை துவங்குகிறது. இந்நிலையில் இத்தேர்தல் நேர்மையாகவும் , நியாயமாகவும் நடைபெறவில்லை என கூறி பிரதான எதிர்கட்சியான வங்கதேச தேசிவாத கட்சி தேர்தலை புறக்கணித்து விட்டு 48 மணி … Read more