கொரிய தீபகற்பத்தில் பதற்றம்… தென்கொரியா மீது மீண்டும் தாக்குதல் நடத்திய வடகொரியா

சியோல், தென்கொரியாவின் யோன்பியாங் தீவுப்பகுதியை நோக்கி, வடகொரியா நேற்று திடீர் தாக்குதல் நடத்தியது. சுமார் 200-க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகள் முழங்கியதாக கூறப்படும் நிலையில், தீவில் வசிக்கும் மக்களை இடம்பெயருமாறு தென்கொரியா உத்தரவிட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் யோன்பியாங் தீவுப்பகுதியை நோக்கி வடகொரியா தாக்குதல் நடத்தியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. பதிலடியாக தென்கொரியாவும் பயிற்சி என்ற போர்வையில் 400 ரவுண்டுகள் சுட்டதாக உள்ளூர் ஊடகங்கள் பதிவு செய்திருக்கின்றன. தொடர்ந்து வடகொரியா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால், மேற்கு … Read more

அமெரிக்காவில் அதிர்ச்சி: மருந்துக்கு பதிலாக குழாய் நீரை செலுத்திய நர்ஸ்; 10 பேர் பலி

ஓரிகான், அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் மெட்போர்டு நகரில் அசாந்தே ரோக் மண்டல மருத்துவ மையம் அமைந்துள்ளது. இதில், கடந்த 2022-ம் ஆண்டு இறுதியில் இருந்து 10 பேர் அடுத்தடுத்து திடீரென மரணம் அடைந்தனர். இதில் அந்த மருத்துவமனையின் முன்னாள் ஊழியர் ஒருவர் மருந்துகளை திருடியிருக்க கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் மருத்துவமனை அதிகாரிகள் கடந்த மாதம் போலீசில் புகார் அளித்தனர். இதுபற்றி நடந்த விசாரணையில், சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு கிருமி நீக்கம் செய்யப்படாத குழாய் நீரை அந்த … Read more

The search for the pirates who tried to hijack the cargo ship is intense | சரக்கு கப்பலை கடத்த முயன்ற கொள்ளையர்களை தேடும் பணி தீவிரம்

புதுடில்லி,அரபிக்கடலில் சோமாலியா அருகே இந்திய மாலுமிகளுடன் சென்ற சரக்கு கப்பலை கடத்த முயன்ற, கடற்கொள்ளையர்களை தேடும் பணியை நம் கடற்படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். அரபிக்கடலில் ஆப்ரிக்க நாடான சோமாலியா கடற்பகுதியில், லைபீரியன் நாட்டு கொடியுடன் ‘எம்.வி.லிலா நோர்போல்க்’ என்ற சரக்கு கப்பல் கடந்த 4ம் தேதி பயணித்தது. பிரேசில் நாட்டின் டுஅகோ துறைமுகத்தில் இருந்து பஹ்ரைனின் கலிபா பின் சல்மான் துறைமுகம் நோக்கி சென்ற அக்கப்பலில், இந்திய மாலுமிகள் 15 பேர் உட்பட 21 பேர் இருந்தனர். … Read more

உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற சாதனையை இழக்கிறது 'புர்ஜ் கலிபா'

உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபா, துபாயில் உள்ளது. இந்த கட்டிடத்தின் கட்டுமான பணிகள் 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி 2010ஆம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி நிறைவடைந்து, பயன்பாட்டிற்கு வந்தது. இதன் உயரம் 828 மீட்டர் (2,716 அடி 6 அங்குலம்) உலகின் தலைசிறந்த நட்சத்திர ஓட்டல்கள், சொகுசு விடுதிகளைக் கொண்ட இந்த புர்ஜ் கலிபா கட்டிடத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் வருகின்றனர். அமீரகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நிச்சயம் செல்லும் … Read more

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு

துஷான்பே, மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.42 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கோரோக் அருகே 80 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தினத்தந்தி Related Tags : நிலநடுக்கம்  தஜிகிஸ்தான்  Earthquake  Tajikistan 

இலங்கையில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி… சீறிப்பாயும் காளைகள்…!

திரிகோணமலை, ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து வரலாற்றில் முதல்முறையாக இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு திருச்சி வந்த போது இலங்கை கிழக்கு மாகாண கவர்னர் செந்தில் தொண்டமான், இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் எனக் … Read more

‘உனக்காக மடிவேன். ஆனால்…’- யுத்தப் பாடலுடன் நியூசி. நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட ஹானாவின் பின்புலம்

வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையின்போது பழங்குடியின போர் பாடல் பாடி அதிரவைத்து தனது இனத்தினர் பற்றி உணர்ச்சிகரமாக பேசிய இளம் பெண் எம்.பி. ஒருவரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதன் பின்புலத்தைப் பார்ப்போம். நியூசிலாந்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த 54-வது நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தேசிய கட்சியினர் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தனர். இதனிடையே, அங்குள்ள டி பாடி மவோரி கட்சியைச் சேர்ந்த 6 பேர் எம்.பி.களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். … Read more