இராக் வணிக வளாகத்தில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு – நடந்தது என்ன?

பாக்தாத்: இ​ராக்​கில் வணிக வளாகத்​தில் ஏற்​பட்ட தீ விபத்​தில் சிக்கி 61 பேர் உயி​ரிழந்​தனர். இந்த விபத்து குறித்து விசா​ரணை நடத்த உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. கிழக்கு இராக்​கின் வசிட் மாகாணம் குட் நகரில் ஒரு வாரத்​துக்கு முன்பு ஒரு புதிய வணிக வளாகம் திறக்​கப்​பட்​டது. 5 தளங்​களைக் கொண்ட அதில் உணவகம், சூப்​பர் மார்க்​கெட் உள்​ளிட்​டவை இயங்கி வரு​கின்​றன. இந்​நிலை​யில், புதன்​கிழமை இரவு அந்த வணிக வளாகத்​தில் தீ விபத்து ஏற்​பட்​டது. இதையடுத்து தீ மளமளவென பரவியது. இதுகுறித்து … Read more

18 நாட்களுக்கு பின்பு மனைவி, மகனை சந்தித்தபோது… சுபான்ஷு சுக்லாவின் நெகிழ்ச்சியான தருணங்கள்

நியூயார்க், ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்ல இந்தியாவின் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவை சேர்ந்த பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த திபோர் கபு, போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். அவர்கள் 4 பேரும் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தின் ஏவுதள வளாகத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் பொருத்தப்பட்ட, பால்கன்-9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த மாதம் 25-ந்தேதி புறப்பட்டனர். விண்ணில் ஏவப்பட்ட … Read more

ஈராக்; வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: 60 பேர் பலி, பலர் காயம்

பாக்தாத், மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈராக்கின் அல் குட் நகரத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 5 மாடிகள் கொண்ட அந்த வணிக வளாக கட்டிடத்தில் தீ பிடித்ததால், வணிக வளாகத்திற்கு வந்து இருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த பயங்கர தீ விபத்தில், 60 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈராக் ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. பலர் காயம் அடைந்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து … Read more

அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் இந்திய பெண் செய்த செயல்.. இதை மட்டும் செய்யாதீர்கள் என எச்சரிக்கை

வாஷிங்டன், அமெரிக்கா நாட்டில் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள ‘டார்கெட்’ எனும் சூப்பர் மார்க்கெட்டில், இந்திய பெண் ஒருவர், சுமார் 7 மணி நேரம் பொருட்களை தேடி, தேடி எடுத்திருக்கிறார். ரூ.1.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை எடுத்த அவர், அங்கிருந்து பொருட்களுக்கு பணம் கொடுக்காமல் எஸ்கேப் ஆக முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளார். இதனையடுத்து, அமெரிக்க தூதரகம், விசா குறித்த எச்சரிக்கையை அளித்திருக்கிறது. இதுகுறித்து மேலும் ஒரு எச்சரிக்கை தகவலாக,கொள்ளை போன்ற செயல்கள் எதிர்காலத்தில் அமெரிக்க விசாவிற்கு உங்களை … Read more

பாகிஸ்தானில் கனமழை: வெள்ளப்பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை 124 ஆக உயர்வு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக பஞ்சாப், கைபர் பக்துவா, சிந்து, பலூசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இதில் 3 வீடுகள் இடிந்து விழுந்தன. எனவே கட்டிட இடிபாடு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி சுமார் 116 பேர் பலியாகி இருந்தனர். 150-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிகிச்சை பலனின்றி மேலும் … Read more

இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

வாஷிங்டன், அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக பல்வேறு நாடுகள் மீதும் அதிரடியாக வரிகளை விதித்தார். கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை டிரம்ப் வெளியிட்டார். இதனால் உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. இதன்காரணமாக அமெரிக்க அரசின் வரி விதிப்பு திட்டம் கடந்த 9-ம் தேதி வரை … Read more

அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களுக்கு தூதரகம் புதிய எச்சரிக்கை!

புதுடெல்லி: அமெரிக்காவில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இந்தியப் பெண் ஒருவர் திருட்டில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களுக்கு டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் ஒரு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. அது தொடர்பாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “தாக்குதல், திருட்டு, ஒரு கட்டிடத்துக்குள் நுழைந்து பொருட்களைத் திருடுதல் போன்ற செயல்களில் நீங்கள் அமெரிக்காவில் ஈடுபட்டால், அது சட்ட சிக்கல்களை உருவாக்கும். அது உங்கள் விசா நிரந்தரமாக ரத்து … Read more

வங்கதேசத்தில் ஹசீனா ஆதரவாளர்கள் – போலீஸார் இடையே மோதல்: 4 பேர் உயிரிழப்பு

டாக்கா: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக அவர் தனது பதவியை இழந்து, அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைப்பு சார்பில், நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாணவர்கள் பலர் அமைச்சர்களாக … Read more

ஈராக் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: 50 பேர் பலியானதாக தகவல்!

பாக்தாத்: ஈராக் நாட்டில் அல் குட் நகரில் உள்ள ஒரு பல் அடுக்கு கொண்ட வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த தீ விபத்தை அல் குட் நகர் அமைந்துள்ள வாசிட் மாகாண ஆளுநர் முகமது அல் மியாஹி உறுதிப்படுத்தியுள்ளார். “வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50-ஐ தொட்டுள்ளது. நிறைய பேர் காயமடைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் உடனடியாக உறுதியாகவில்லை. இன்னும் 48 மணி நேரத்துக்குள் … Read more

Tax Free Countries: உலகின் இந்த நாடுகளில் வருமான வரி செலுத்த தேவையில்லை…

உலகில் சில நாடுகளில் வருமான வரி விதிக்கப்படுவதில்லை.அப்படியானால் இந்த நாடுகளின் அரசாங்கங்கள் தங்கள் செலவுகளை எவ்வாறு நடத்துகின்றன என்ற கேள்வியும் கூடவே எழுகிறது?