தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு
துஷான்பே, மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.42 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கோரோக் அருகே 80 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தினத்தந்தி Related Tags : நிலநடுக்கம் தஜிகிஸ்தான் Earthquake Tajikistan