Passenger train fire: 5 killed in Bangladesh | பயணிகள் ரயிலுக்கு தீ: வங்கதேசத்தில் 5 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டாக்கா: வங்கதேசத்தில், ஓடும் ரயிலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில், பயணிகள் 5 பேர் உயிரிழந்தனர்; ஏராளமான பேர் படுகாயம் அடைந்தனர். வங்கதேசத்தில் வரும் 27 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக, எதிர்கட்சி அறிவித்திருக்கிறது. இதனால் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், ஓடும் ரயிலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஜெஸ்ஸோரில் இருந்து டாக்கா நோக்கி சென்ற … Read more

Autonomy for Tamils: Voice of support for the Sri Lankan President | தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம்: இலங்கை அதிபர் ஆதரவு குரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு : இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தன்னாட்சி அதிகாரம் வழங்கும், 13வது அரசியலமைப்பு திருத்த தீர்வுக்கு, அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஆதரவு தெரிவித்துள்ளார். நம் அண்டை நாடான இலங்கையில் இனப் பிரச்னைக்கு தீர்வு காண, முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ், முன்னாள் இலங்கை அதிபர் ஜெயவர்தனே இணைந்து, 1987ல் அந்நாட்டு அரசியலமைப்பு சட்டத்தில் 13வது திருத்தம் செய்வதற்கான உடன்பாட்டை உருவாக்கினர். அரசியலமைப்பு சட்டம் 13ஏ தமிழ் சமூகத்திற்கு அதிகாரப் … Read more

ரூ.3.32 லட்சத்தை கடித்து துப்பிய செல்லநாய்.. அதிர்ந்து போன உரிமையாளர்!

வாஷிங்டன், வீட்டில் உள்ள ஒரு குடும்ப உறுப்பினருக்கு நிகராக பலரது வீட்டில் நாய்கள் வளர்க்கப்படுகின்றன. பெட்ரூம் முதல் கிட்சன் வரை வீட்டின் அனைத்து இடங்களுக்கும் சென்று வரும் அளவுக்கு செல்லம் கொடுத்து பலரும் வளர்த்து வருகிறார்கள். இப்படி வளர்க்கப்படும் நாய்கள் சில நேரங்களில் வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை கவ்வி கொண்டு போய் விளையாடுவது என தனது சேட்டையை செய்து வைத்து விடும். இதனால் உரிமையாளர்கள் மனம் நொந்து சில நாட்கள் நாயை திட்டிக்கொண்டே இருப்பார்கள். … Read more

2 நிமிட கூகுள் மீட் அழைப்பு.. 200 ஊழியர்கள் பணிநீக்கம்: அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் அதிரடி

வாஷிங்டன்: நிதி நெருக்கடி, அதிகரிக்கும் செலவினம், வருவாய் குறைவு போன்ற காரணங்களால், பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை குறைத்துவருகின்றன. அந்த வரிசையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஸ்டார்ட்அப் தொழில்நுட்ப நிறுவனமான பிரன்ட்டெஸ்க் நிறுவனமும் இணைந்துள்ளது. ஆன்லைன் வாடகை தளமான பிரன்ட்டெஸ்க் நிறுவனம், சமீபத்தில் முதற்கட்டமாக 200 பேரை வேலையை விட்டு நீக்கியிருக்கிறது. இந்த நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கையால் முழுநேர ஊழியர்கள், பகுதி நேர ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் வேலையை இழந்துள்ளனர். 2 நிமிட கூகுள் மீட் அழைப்பு … Read more

இலங்கை: 13-வது திருத்த சட்டத்திற்கு ரணில் விக்கிரமசிங்கே ஆதரவு

கொழும்பு, இலங்கைத் தமிழர் இனப் பிரச்னையைத் தீர்க்கும் முயற்சியாக, கடந்த 1987-ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும், இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்தனேவுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் மூலம் 13-வது திருத்தச் சட்டம் உருவானது. இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என இலங்கை அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், இலங்கையில் உள்ள தமிழ் சிறுபான்மையினருக்கு அதிகாரப் பகிர்வை அளிக்கும் 13-வது திருத்தச் சட்டத்திற்கு இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ஆதரவு தெரிவித்துள்ளார். … Read more

“நான் யூதராக இருந்தாலும்…” – பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்த ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன்

சிகாகோ: இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். சாட்ஜிபிடி செயலியை உருவாக்கிய ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்தவர் சாம் ஆல்ட்மேன். யூதரான இவர் பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார். தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் சாம் ஆல்ட்மேன் பதிவிட்டுள்ளதாவது: இஸ்லாமிய மற்றும் அரபு (குறிப்பாக பாலஸ்தீன்) நாடுகளைச் சேர்ந்த, சக தொழில்நுட்ப … Read more

பாகிஸ்தான் பொதுத்தேர்தலை ஒத்திவைக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் வரும் பிப்ரவரி 8-ந்தேதி பொதுத்தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் பாகிஸ்தானில் தற்போது நிலவி வரும் குளிர்காலம் காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் குளிர் வாட்டி எடுத்து வருகிறது. இந்த நிலையில் கடுமையான வானிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக, அடுத்த மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்தலை ஒத்திவைக்க பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு பாகிஸ்தான் தகவல் தொடர்பு துறை மந்திரி முர்தாஸா சோலங்கி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் … Read more

ஜப்பான் நிலநடுக்க உயிரிழப்பு 92 ஆக அதிகரிப்பு; 242 பேரை காணவில்லை

டோக்கியோ: ஜப்பானில் புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது என்றும், இதுவரை 242 பேரைக் காணவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானின் மேற்கு கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்ட 72 மணி நேரத்திற்குப் பிறகு ஒரு பெண், தற்போது இடிபாடுகளில் இருந்து கவனமாக மீட்கப்பட்டிருக்கிறார். மக்கள் தற்போது 34,000 பேர் வீடுகளை இழந்திருப்பதாக கூறப்படுகிறது. அதோடு அவர்கள் வெளியில் சுகாராதமற்ற முறையில் வசிப்பதால், அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் … Read more

தென்கொரியா நோக்கி பீரங்கி குண்டுகளை வீசிய வடகொரியா – போர் மூளும் அபாயம்

சியோல், வடகொரியா – தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக பதற்றம் நிலவி வருகிறது. அணு ஆயுத சோதனை மேற்கொண்டு உலக நாடுகளை அவ்வப்போது அதிர்ச்சிக்குள்ளாக்கி வரும் வடகொரியா தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால் தாக்குதல் நடத்துவோம் என எச்சரித்து வந்தது. இந்நிலையில், தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா இன்று திடீரென பீரங்கி தாக்குதல் நடத்தியுள்ளது. தென்கொரியாவின் யோன்பியோங் தீவுப்பகுதியை குறிவைத்து இன்று காலை 9 மணிக்கு வடகொரியா பீரங்கி மூலம் குண்டுகளை வீசியது. வடகொரியா வீசிய … Read more

சோமாலியா அருகே 15 இந்தியர்களுடன் சரக்கு கப்பல் கடத்தல்

புதுடெல்லி: சோமாலியா அருகே 15 இந்தியர்களுடன் சரக்கு கப்பல் ஒன்று கடத்தப்பட்டுள்ளது. மத்திய ஆப்ரிக்காவைச் சேர்ந்த சோமாலியாவின் கடற் பகுதியில் MV LILA NORFOLK என்ற சரக்கு கப்பல் நேற்று மாலை கடத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலில் 15 இந்தியர்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய ஆப்ரிக்காவைச் சேர்ந்த சோமாலியாவின் கடற் பகுதியில் MV LILA NORFOLK என்ற சரக்கு கப்பல் நேற்று மாலை கடத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலில் 15 இந்தியர்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. … Read more