பூமிக்கு அடியில் என்னதான் நடக்கிறது? – விஞ்ஞானிகளையே குழப்பத்தில் ஆழ்த்திய ஜப்பான் பூகம்பம்

புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் உலகமே ஈடுபட்டு வந்த நிலையில், ஜப்பானுக்குத் துக்க தினமாக அமைந்ததன் காரணம், இஷிகாவா தீவில் 7.6 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட மகா பூகம்பம் தாக்கியதில் உயிரிழப்புகளும், மக்கள் பரிதவிப்பு அலறல்களும், கட்டிடங்கள் இடிந்து விழுந்ததும் ஆகும். இதோடு நிற்காமல் நூற்றுக்கணக்கான பின்னதிர்வுகள், சுனாமி எச்சரிக்கை, பேரலைகள் முதலானவை ஜப்பான் மக்களை அறியா பீதிகளுக்கு இட்டுச் சென்றது. மக்கள் மட்டுமல்ல, நிலநடுக்க ஆய்வாளர்கள், பூகம்ப ஆய்வு விஞ்ஞானிகளையும் இது குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜப்பான் உலகில் … Read more

Judge Mary Kay Holthus, Deobra Redden: The convict who jumped on the judge who announced the sentence | தண்டனை அறிவித்த பெண் நீதிபதி மீது அடிக்க பாய்ந்த குற்றவாளி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் வேகாசில் கிளார்க் கவுண்டி மாவட்ட நீதிபதியை நீதிமன்ற அறையில் வைத்தே குற்றவாளி தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. தண்டனை அறிவித்த உடன் ஆத்திரத்தில் நீதிபதி மீது பாய்ந்து குற்றவாளி தாக்கியுள்ளார். அமெரிக்காவில் லாஸ் வேகாஸ் நகரில் தாக்குதல் வழக்கில் கைதானவர் டியோப்ரா ரெட்டன் (30). தாக்குதலால் பாதிக்கப்பட்டவருக்கு கடுமையான உடல் சீர்கேடு உருவானதாலும், இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நிவேடா நகர நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. … Read more

சிறை தண்டனை வழங்கிய நீதிபதி மீது குற்றவாளி பாய்ந்து தாக்கியதால் பரபரப்பு @ லாஸ் வேகாஸ்

லாஸ் வேகாஸ்: தனக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதியை, அவரது மேஜை மீது பாய்ந்து குற்றவாளி ஒருவர் தாக்கிய சம்பவம், அமெரிக்காவின் லாஸ் வேகாஸின் மாகாண நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிமன்ற வளாகத்தில் உள்ள கேமராவில் பதிவான இந்த வன்முறைத் தாக்குதல் காட்சிகள் வெளியாகியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான க்ளார்க் கவுன்ட்ரி மாகாண நீதிபதி மேரி கே.ஹோல்தஸ் தனது இருக்கையில் இருந்து பின்னால் சுவரில் விழுந்ததில் சிறு காயம் அடைந்தார். எனினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு காயங்கள் … Read more

79 runs target for India | இந்தியாவுக்கு 79 ரன் இலக்கு

கேப்டவுன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்தியாவின் வெற்றிக்கு 79 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தென் ஆப்ரிக்க அணி 2வது இன்னிங்சில் 176 ரன் எடுத்தது. இந்தியாவின் பும்ரா 6 விக்கெட் கைப்பற்றினார். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா தோற்றது. இரண்டாவது டெஸ்ட் கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 55, இந்தியா 153 ரன் … Read more

அமெரிக்காவில் மசூதிக்கு வெளியே இமாம் சுட்டுக் கொலை: குற்றவாளியை தேடும் போலீஸ்

நியூஆர்க்: அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் மசூதிக்கு வெளியே முஸ்லிம் இமாம் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பிச்சென்ற குற்றவாளியை தேடும் பணி நடந்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். நியூஜெர்ஸி மாகாணத்தின் முக்கிய நகரமாக விளங்குவது நியூயார்க். இங்கு இஸ்லாமியர்கள் கணிசமான அளவில் வசிக்கின்றனர். இங்கு அமைந்துள்ள மஸ்ஜித் முஹம்மத் என்ற மசூதியில் ஹஸன் ஷரீஃப் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக இமாம் (இஸ்லாமிய மதகுரு) ஆக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (ஜன … Read more

ஜப்பான் நிலநடுக்கம் | இதுவரை 73 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு

டோக்கியோ: ஜப்பானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் இதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மரணமடைந்த அனைவரும் முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட இஷிகாவா மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 33 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இடிபாடுகளில் சிக்கிய மக்களை … Read more

ஈரானில் ராணுவ ஜெனரல் காசிம் சுலைமானி நினைவு தினத்தில் இரட்டை குண்டுகள் வெடித்து 103 பேர் உயிரிழப்பு

கெர்மன்: ஈரானில் நேற்று நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் 103-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் 141 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் ராணுவ ஜெனரல் காசிம் சுலைமானியை, 2020-ம் ஆண்டு அமெரிக்க ராணுவம் ட்ரோன் தாக்குதல் மூலம் படுகொலை செய்தது. இராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது தொடர்ந்து கண்காணித்து துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுலைமானி உயிரிழந்தார். இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நேற்று அவரது நான்காம் … Read more

அடுத்தடுத்து குண்டு வெடிப்பு.. அதிர்ந்த ஈரான் – 70 பேர் பலி..170 பேர் படுகாயம்

பாக்தாத், கடந்த 2020-ம் ஆண்டு அமெரிக்காவின் டிரோன் தாக்குதலில் ஈரானின் புரட்சிப் படை தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் அமெரிக்கா மீது ஈரான் கடும் கோபத்தை வெளிப்படுத்தியது. ஆனால் சுலைமான் படுகொலையை அமெரிக்கா அப்போது நியாயப்படுத்தியது. குறிப்பாக அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் இதை நியாயப்படுத்தி இருந்தார். இந்த நிலையில், ஈரானின் கெர்மானில் உள்ள காசிம் சுலைமான் கல்லறையில் இன்று நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. இதற்காக பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் அஞ்சலி செலுத்த இன்று கூடியிருந்தனர். அப்போது … Read more

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு

காபூல், ஆப்கானிஸ்தானில் இன்று பிற்பகல் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பிற்பகல் 2.54 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காபூல் அருகே 29 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று நள்ளிரவில் அரை மணி நேரத்திற்குள் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. பைசாபாத் அருகே ஏற்பட்ட … Read more