இந்தியர்களுக்கு விசா தேவையில்லை.. பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு

மணிலா, இந்திய பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தியாக பிலிப்பைன்ஸ் அரசு இப்போது 14 நாட்கள் வரை விசா இல்லாத நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, பிலிப்பைன்ஸ் நாட்டின் அழகிய கடற்கரைகளையும், சுற்றுலா தலங்களையும் காண விரும்பும் இந்தியர்கள், விசா இல்லாமல், 14 நாட்கள்வரை பிலிப்பைன்ஸ் நாட்டில் தங்கியிருந்து சுற்றி பார்க்கலாம். சுற்றுலாவை ஊக்குவிக்கவும், இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தவும் இக்கொள்கையை பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது. மேலும், உரிய விசாவோ அல்லது அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் நிரந்தர வீடோ வைத்துள்ள … Read more

‘பதிலடி கொடுப்பதற்குள் பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு இந்தியா தாக்கியது’ – பாக். பிரதமர் பேச்சு

பாகு: மே 9, 10-ம் தேதி வாக்கில் பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு இந்திய ராணுவம், பாகிஸ்தானின் முக்கிய ராணுவம் தளங்களை தாக்கியது என பாகிஸ்தான் நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். அஜர்பைஜான் நாட்டின் தலைநகரில் அவர் இதனை கூறியிருந்தார். “இந்தியாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்க நாங்கள் திட்டமிட்டு இருந்தோம். மே 9, 10-ம் தேதி அதிகாலை தொழுகைக்கு பிறகு 4.30 மணி அளவில் தாக்குதல் நடத்தலாம் என எங்கள் ராணுவம் முடிவு செய்திருந்தது. ஆனால், அதற்குள் … Read more

அமெரிக்காவில் பயிலும் சீன மாணவர்களுக்கு டிரம்ப் நிர்வாகம் புதிய நெருக்கடி

வாஷிங்டன், அமெரிக்காவில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீன மாணவர்கள் தான் அதிகம் பயின்று வருகின்றனர். கடந்த 2023-24 ம் ஆண்டு கல்வியாண்டில் மட்டும் சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் சீன மாணவர்கள் அமெரிக்காவில் பயின்று வருகின்றனர். அங்கு பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் 4ல் ஒரு பங்கு சீன மாணவர்கள் என சொல்லும் அளவிற்கு அதிக எண்ணையில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு கொண்டவர்கள் சீன மாணவர்களுக்கான விசாக்களை ரத்து செய்ய முடிவு … Read more

பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் பயங்கரவாதி பாக். பேரணியில் பங்கேற்பு

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட சைஃபுல்லா காலித் என்கிற சைஃபுல்லா கசூரி பாகிஸ்தானில் நடந்த ஒரு பொதுப் பேரணியில் காணப்பட்டது பேசுபொருளாக மாறியுள்ளது. பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் மறைமுகமாக ஆதரவளிப்பதற்கான மற்றொரு சான்றாக இச்சம்பவம் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. பஹல்காமில் நடந்த தாக்குதல் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நடந்த மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதல் இதுவாகும். பஹல்காம் தாக்குதலின் மூளையாக சைஃபுல்லா காலித் என்கிற சைஃபுல்லா … Read more

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்: வங்கதேசத்தில் இடைக்கால அரசுக்கு நெருக்கடி

டாக்கா: வங்கதேசத்தில் எதிர்க்கட்சியினர், அரசு ஊழியர்களை தொடர்ந்து தற்போது ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களால் இடைக்கால அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது. இவரது அரசு சீர்திருத்தம் என்ற பெயரில் பல்வேறு முடிவுகளை வலிந்து திணிப்பதாக புகார் எழுந்த நிலையில் … Read more

‘அதிகார வரம்பை மீறுகிறீர்கள் ட்ரம்ப்’ – இறக்குமதி வரிக்கு தடை விதித்த அமெரிக்க நீதிமன்றம் சாடல்

டொனால்டு ட்ரம்ப் விதித்த இறக்குமதி வரிகளுக்கு தடை விதித்துள்ளது நியூயார்க்கில் உள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றம், மேலும், அதிபருக்கு உள்ள சட்டத்துக்கு உட்பட்ட அதிகார வரம்புகளை மீறி ட்ரம்ப் செயல்படுவதாகவும் கோர்ட் அவரைக் கடிந்துள்ளது. அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜன.20-ம் தேதி 2-வது முறையாக அதிபராக பதவியேற்றார். அதிபர் பதவியேற்ற பிறகு அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் முதல் முறையாக உரையாற்றுகையில், “அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா 100 … Read more

ஈரானில் காணாமல்போன 3 இந்தியர்களை கண்டுபிடிக்க தூதரகம் தீவிர முயற்சி

புதுடெல்லி: ஈரானில் காணாமல்போன 3 இந்தியர்களை கண்டுபிடிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹுஷன்பிரீத் சிங் (சங்ரூர்), ஜஸ்பால் சிங் (எஸ்பிஎஸ் நகர்), அம்ரித்பால் சிங் (ஹோஷியார்பூர்) ஆகிய 3 இளைஞர்கள் கடந்த மே 1-ம் தேதி விமானம் மூலம் ஈரான் சென்றனர். ஆனால் டெஹ்ரானில் தரையிறங்கிய பிறகு அவர்களை காணவில்லை. பஞ்சாபின் ஹோஷியார்பூரை சேர்ந்த ஏஜென்ட் ஒருவர் இவர்களை துபாய், ஈரான் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாக உறுதி அளித்துள்ளார். … Read more

அமெரிக்க அரசின் செயல் திறன் துறையில் இருந்து எலான் மஸ்க் விலகல் – பின்னணி என்ன?

வாஷிங்டன்: அமெரிக்க அரசின் செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதனை எக்ஸ் தள பதிவு மூலம் அவர் தெரிவித்துள்ளார். “சிறப்பு அரசு ஊழியராக எனது பணிக்காலம் முடிவடையும் நிலையில், தேவையற்ற செலவுகளைக் குறைப்பதற்கான பணியை மேற்கொள்ளும் வாய்ப்பை அளித்த அதிபர் டொனல்டுக்கு ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையின் நோக்கம் காலப்போக்கில் வலுப்பெறும்” என மஸ்க் தெரிவித்துள்ளார். இதை வெள்ளை மாளிகை அதிகாரி … Read more

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; 2 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவில் நாளுக்குநாள் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் பல உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்நிலையில் அந்நாட்டின் பிலடெல்பியா மாகாணம் லெமன் ஹில்ஸ் டிரைவ் பகுதியில் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் நேற்று இரவு இளைஞர்கள் பலர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இளைஞர், இளம்பெண் என 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை … Read more

ஹமாஸ் ஆயுதக்குழு தலைவர் கொலை – இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

ஜெருசலேம், காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ … Read more