அமெரிக்க முன்னாள் அதிபரின் மனைவி காலமானார்

வாஷிங்டன், 1977 முதல் 1981 வரை அமெரிக்காவின் அதிபராக செயல்பட்டவர் ஜிம்மி கார்ட்டர். இவரது மனைவி ரோஸ்லின் கார்ட்டர். இதனிடையே, 96 வயதான ரோஸ்லின் கார்ட்டர் உடல்நலக்குறைவு காரணமாக ஜார்ஜியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ரோஸ்லின் கார்ட்டர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரோஸ்லின் கார்ட்டர் மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தினத்தந்தி Related Tags : America  அமெரிக்கா 

Former OpenAI CEO Microsoft gave top job to Sam Altman | ஓபன்ஏஐ மாஜி சி.இ.ஓ. சாம் ஆல்ட்மேனுக்கு உயர் பதவி அளித்த மைக்ரோசாப்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: ஓபன்ஏஐ நிறுவனத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட அதன் சி.இ.ஓ.,சாம் ஆல்ட்மேனை, மைக்ரோசாப்ட் நிறுவனம் வரவேற்று உயர் பதவி அளித்துள்ளது. அமெரிக்காவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனம் ஓபன்ஏஐ இதன் சி.ஓ.வாக சாம் ஆல்ட்மேன் பொறுப்பேற்று நிர்வாகித்து வந்தார். சமீபத்தில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து பணிநீக்கம் செய்யப்பட்டார். இதையறிந்த மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் சத்யநாதெல்லா, சாம் ஆல்ட்மேனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கி ஆதரவு நீட்டியுள்ளார். இதன் பின்னணி குறித்த … Read more

காசாவில் உள்ள மருத்துவமனையில் சுரங்கப்பாதை கண்டுபிடித்துள்ளோம் – இஸ்ரேல்

ஜெருசலேம், இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலில் இருந்து 200க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடத்தி சென்றனர். இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, … Read more

காசாவில் நிலைமையை விரைந்து சீர்படுத்த உலக நாடுகளுக்கு சீனா அழைப்பு

புதுடெல்லி: காசாவில் தற்போதையை நிலைமையை உடனடியாக சீர்படுத்த வேண்டும் என்று உலக நாடுகளுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. ஹமாஸ் – இஸ்ரேல் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், பாலஸ்தீன அதிகாரிகள், இந்தோனேசியா, எகிப்து, சவூதி அரேபியா மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் குழு இந்த வாரம் பீஜிங்குக்கு சென்றிருந்தது. அங்கு இஸ்ரேல் – ஹமாஸ் போர் குறித்து விவாதிக்கப்பட்டது. அந்தக் குழுவிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, ”காசாவில் தற்போது நிலவும் … Read more

Telangana Assembly Elections: 2G, 3G, 4G parties… says Amit Shah in Telangana for BRS, AIMIM, Congress | நான்கு தலைமுறைகளை கொண்ட 4ஜி கட்சி காங்கிரஸ்: அமித்ஷா கிண்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜங்கான்: ஜவஹர்லால் நேரு, இந்திரா, ராஜிவ், ராகுல் என 4 தலைமுறைகளை கொண்டுள்ளதால் காங்கிரஸ் கட்சியை 4ஜி கட்சி எனக்கூறலாம் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக ஜங்கானில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் (கே.சி.ஆர்) பாரத் ராஷ்டிர சமிதி கட்சி, அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி மற்றும் … Read more

இந்தியாவுக்கு புறப்பட்ட சரக்கு கப்பல்; கடத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

ஏமன், இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன் எல்லை பகுதியையும் சூறையாடி, வன்முறையில் ஈடுபட்டது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். 2,700 பேர் காணாமல் போயுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். காசாவுக்கு எதிரான இந்த போரை முன்னிட்டு ஏமன் … Read more

தடுப்பூசி போட்டுக்கொள்வது குறைந்ததால் 2021 – 2022 காலக்கட்டத்தில் உலக அளவில் தட்டம்மை இறப்பு 43% அதிகரிப்பு

புதுடெல்லி: தடுப்பூசி போட்டுக்கொள்வது குறைந்ததால் 2021 முதல் 2022 வரை உலகளாவிய தட்டம்மை இறப்புகளில் 43% அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் (CDC) ஆகியவற்றின் புதிய ஆய்வறிக்கையில், “தடுப்பூசி போட்டுக்கொள்வது குறைந்து வருவதைத் தொடர்ந்து, 2021-2022-ல் இருந்து உலகளவில் தட்டம்மை இறப்புகளின் எண்ணிக்கை 43% அதிகரித்துள்ளது. கடந்த 2021-ல் 22 நாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொள்வது குறைந்ததாலும், 2022-ல் 37 நாடுகளில் … Read more

I will repair Penny Quicks grave myself: Sellur Raju Vow | லண்டன் பென்னி குயிக் கல்லறையை நானே சீரமைப்பேன்: செல்லூர் ராஜூ சபதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: முல்லை பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னி குயிக் கல்லறை லண்டனில் உள்ளது. அங்கு சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘பென்னி குயிக் கல்லறையை சீரமைத்து கொடுப்பதாக திமுக அரசு உறுதிமொழி அளித்தும் நிதி ஒதுக்கவில்லை. இதனால் நானே முன்னின்று வேலைகளை நடத்தி முடிக்க முயற்சி செய்வேன்’ எனக் கூறியுள்ளார். தென் மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக திகழும் முல்லை பெரியாறு அணையை கட்டியவர் ஜான் … Read more

காசாவில் கொடூரம்; ஐ.நா.வின் பள்ளியில் நடந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட பலர் பலி

டெல் அவிவ், இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன் எல்லை பகுதியையும் சூறையாடி, வன்முறையில் ஈடுபட்டது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். 2,700 பேர் காணாமல் போயுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இதுதவிர, இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு 240 … Read more

’ஹமாஸ் பதுங்கிடமாக செயல்பட்ட அல் ஷிபா மருத்துவமனை’ – ஆதாரத்தை வெளியிட்ட இஸ்ரேல் ராணுவம்

டெல் அவிவ்: மருத்துவமனைகளை ஹமாஸ் பதுங்கிடமாகவும், தாக்குதலுக்கு திட்டமிடும் இடமாகவும் பயன்படுத்துகிறது, அல் ஷிபா மருத்துவம்னைக்குக் கீழ் ஹமாஸ் சுரங்கம் இருக்கிறது என்று கூறிவந்த இஸ்ரேல் அதனை உறுதிப்படுத்துவதுபோல் சில ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. காசா மருத்துவமனைகளில் 35க்கும் மேற்பட்ட சுரங்கங்களைக் கண்டுபிடித்துள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் எக்ஸ் தளத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ஹமாஸ், “அம்பலமானது: இந்தப் புகைப்படம் அக்டோபர் 7 2023 அன்று அல் ஷிபா மருத்துவமனையில் கேமராவில் பதிவானது. காலை 10.42 … Read more