பிரான்ஸ்: வெற்றி கொண்டாட்டத்தில் வன்முறை பரவியதில் 2 பேர் பலி; 192 பேர் காயம்

பாரீஸ், ஜெர்மனியின் முனிச் நகரில், பாரீஸ் செயின்ட்-ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) மற்றும் இன்டர் மிலன் அணிகளுக்கு இடையே சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதி போட்டி நடந்தது. இந்த போட்டியில், பி.எஸ்.ஜி. அணி 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை இல்லாத வகையில் இது மிக பெரிய வெற்றியாகும். இதனை தொடர்ந்து, பிரான்சின் பாரீஸ் நகரின் தெருக்களில் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது திடீரென வன்முறை பரவியது. அப்போது டாக்ஸ் நகரில், 17 வயது சிறுவன் கத்தியால் … Read more

நைஜீரியாவில் அதிர்ச்சி சம்பவம் – சாலை விபத்தில் பலியான 21 விளையாட்டு வீரர்கள்

அபுஜா, நைஜீரியாவின் தென்மேற்கு ஓகுன் மாநிலத்தில் நடந்த விளையாட்டுத் போட்டிகளில் பங்கேற்றுவிட்டு விளையாட்டு வீரர்கள் பஸ்சில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். இந்த பஸ்சில் பெரும்பாலும் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 35 பயணிகள் பயணித்துள்ளனர். அவர்கள் அனைவரும் பஸ்சில் சுமார் 1000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடக்கு கனோ மாநிலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு பாலத்தின் அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த … Read more

ரஷ்யாவில் பாலம் இடிந்து விழுந்து 7 பேர் உயிரிழப்பு: உக்ரைன் சதியா என விசாரணை

மாஸ்கோ: ரஷ்யாவில் மேற்கு பகுதியில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் ரயில் ஒன்று சிக்கி, அதிலிருந்த ஓட்டுநர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். முதல்பாலம் இடிந்த சம்பவம், உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள பிரையான்ஸ் பகுதியில் சனிக்கிழமை இரவு நடந்துள்ளது. பயணிகள் ரயில் மீது பாலம் இடிந்து விழுந்ததில் ரயில் ஓட்டுநரும் உயிரிழந்ததாக அரசு தெரிவித்துள்ளது. சிறிது நேரத்துக்கு பின்பு, உக்ரைன் எல்லைப்பகுதியின் குர்ஸ்க் பிராந்தியத்தில் மற்றொரு பாலம் இடிந்து வேறொரு … Read more

வளர்ந்து வரும் ஏஐ நுட்ப போர் முறை குறித்து முப்படைகளின் தலைமை தளபதி பேச்சு!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஷாங்க்ரி-லா மன்றத்தில் சர்வதேச நாடுகளின் பாதுகாப்பு தலைவர்கள் பங்கேற்ற வட்டமேசை மாநாட்டில் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் பங்கேற்றார். அப்போது வளர்ந்து வரும் போர் முறை குறித்தும், அதில் ஏஐ பங்கு குறித்தும் அவர் எச்சரித்தார். ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, ஜப்பான், நெதர்லாந்து, நியூஸிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு படைத் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். இது ஆசிய அளவிலான முக்கிய பாதுகாப்பு உச்சி மாநாடு … Read more

இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்கா, இந்தியா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியா, சீனா, கனடா, மெக்ஸிகோ உட்பட பல்வேறு நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். இதற்கு பதிலடியாக கடந்த ஏப்ரலில் அவர் சமர்சீர் வரி விகிதத்தை அறிவித்தார். இதன்படி சீன பொருட்களுக்கு அதிகபட்சமாக 145 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. இதுதொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அண்மையில் … Read more

சிரியா: ஏவுகணை கிடங்கு மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்

டெல் அவிவ், இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது. இதற்கு பதிலடியாக, காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசா பகுதியில் 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தும், 1 லட்சத்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா … Read more

இந்திய எம்பிக்கள் குழுவின் விளக்கத்தை ஏற்று பாக். ஆதரவு அறிக்கையை திரும்பப் பெற்றது கொலம்பியா

சசி தரூர் தலைமையிலான இந்திய எம்பிக்கள் குழுவின் விளக்கத்தை ஏற்று பாகிஸ்தான் ஆதரவு அறிக்கையை கொலம்பியா திரும்ப பெற்று உள்ளது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக கடந்த மே 7-ம் தேதி பாகிஸ்தானில் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படை அழித்தது. அப்போது சுமார் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆனால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததாக உலக நாடுகளிடம் பாகிஸ்தான் … Read more

பாகிஸ்தானுக்கு ஆதரவாக வெளியிட்ட அறிக்கையை திரும்ப பெற்றது கொலம்பியா

பொக்கோட்டா, காஷ்மீரின் பகல்காமில் 26 சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதை யடுத்து ஆபரேசன் சிந்தூர் என்ற யெயரில் பாகிஸ்தா னில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதனால் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்த முயற்சித்தது. அதை இந்தியா ராணுவம் முறியடித்தது. இதற்கிடையே பாகிஸ்தா னின் பயங்கரவாத ஆதரவு மற்றும் இந்தியா எடுத்த நடவடிக்கைகள் பற்றி விளக்க வெளிநாடுகளுக்கு எம்.பிக்கள் கொண்ட 7 குழுக்களை மத்திய அரசு அனுப்பி உள்ளது. அவர்கள் ஒவ்வொரு … Read more

இந்தியர்களை யாராலும் பிரிக்க முடியாது: லாத்​வியாவில் திமுக எம்.பி. கனிமொழி பேச்சு

இனி நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்று திமுக கட்சி எம்.பி. கனிமொழி பேசியுள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவை உலகுக்கு அம்பலப்படுத்தவும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ போன்ற இந்தியாவின் தற்காப்பு உரிமையை எடுத்துரைக்கவும் சர்வதேச நாடுகளுக்கு இந்திய பிரதிநிதிகள் சென்றுள்ளனர். இதற்காக அமைக்கப்பட்டுள்ள 7 அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவில், தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையிலான குழுவும் ஒன்று. இந்த குழுவினர் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணமாகி உள்ளனர். இதில் ரஷ்யா, சுலோவேனியா, கிரீஸ் … Read more

நைஜீரியா: வெள்ள பாதிப்புக்கு 151 பேர் பலி

அபுஜா, நைஜீரியா நாட்டின் தலைநகர் அபுஜா நகரில் இருந்து மேற்கே 380 கி.மீ. தொலைவில் மொக்வா என்ற நகரம் உள்ளது. வடக்கு மத்திய பகுதியில் நைஜர் மாகாணத்திற்கு உட்பட்ட இந்த நகர், முக்கிய வர்த்தக மற்றும் போக்குவரத்து நகரங்களில் ஒன்றாக உள்ளது. இந்த நகரங்களுக்கு நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள விவசாயிகள் வெங்காயம், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் பிற உணவு பொருட்களை எடுத்து வந்து விற்பனை செய்வார்கள். இவற்றை நாட்டின் தெற்கு பகுதியில் இருந்து வரும் … Read more