அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்: வங்கதேசத்தில் இடைக்கால அரசுக்கு நெருக்கடி
டாக்கா: வங்கதேசத்தில் எதிர்க்கட்சியினர், அரசு ஊழியர்களை தொடர்ந்து தற்போது ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களால் இடைக்கால அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது. இவரது அரசு சீர்திருத்தம் என்ற பெயரில் பல்வேறு முடிவுகளை வலிந்து திணிப்பதாக புகார் எழுந்த நிலையில் … Read more