சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் உச்சி மாநாட்டில் பஹல்காம் தாக்குதலை கண்டித்து கூட்டறிக்கை: காரில் பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் புதின் ஆலோசனை

தியான்ஜின்: சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. மாநாட்டுக்கு பிறகு, ஒன்றாக புறப்பட்டு சென்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், பிரதமர் மோடியும் காரிலேயே அமர்ந்து ஒரு மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். முதல் நாள் மாநாட்டின்போது … Read more

பாகிஸ்தான்: ராணுவ ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்து – 5 வீரர்கள் பலி

லாகூர், பாகிஸ்தானின் கில்கித் – பல்திஸ்தான் மாகாணம் டைமர் மாவட்டத்தில் இன்று ராணுவ ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டது. அந்த ஹெகாப்டரில் ராணுவ வீரர்கள் 5 பேர் பயணித்தனர். ஹெலிகாப்டர் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. உடனடியாக ஹெலிகாப்டரை தரையிறக்க விமானி முயற்சித்தார். அப்போது, ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராணுவ வீரர்கள் 5 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 1 More update … Read more

இந்தியாவுக்கு வரி குறைப்பு சாத்தியமா? – ட்ரம்ப் புதிய கருத்து

வாஷிங்டன்: அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை பூஜ்ஜியமாக குறைக்க இந்தியா முன்வந்துள்ளது. இருந்தாலும் இது காலம் கடந்த தாமதமான முடிவு என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, தியான்ஜின் நகரில் ஞாயிற்றுக்கிழமை அன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். தொடர்ந்து திங்கட்கிழமை அன்று ரஷ்ய அதிபர் புதினையும் பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சூழலில் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபர் … Read more

உங்களுடன் பேச வேண்டும்… 10 நிமிடம் காத்திருந்து பிரதமர் மோடியை ஆடம்பர காரில் அழைத்து சென்ற புதின்

பீஜிங், சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இன்றும் தொடர்ந்து நடந்தது. இந்த 2 நாள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டை தொடர்ந்து ரஷிய அதிபர் புதின் மற்றும் பிரதமர் மோடி என இருவரும் இருதரப்பு சந்திப்பில் கலந்து கொள்ள இருந்தனர். அப்போது, புதின் தன்னுடைய ஆடம்பர மற்றும் … Read more

உக்ரைன் உடனான மோதலை விரைவில் முடிவுக்கு வர புதினிடம் மோடி வலியுறுத்தல்

தியான்ஜின்: உக்ரைன் உடனான மோதல் கூடிய விரைவில் முடிவுக்கு வரப்பட வேண்டும், அமைதி நிலைநாட்டப்பட வேண்டும், இது ஒட்டுமொத்த மனித நேயத்தின் அழைப்பு என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான சந்திப்பின்போது பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டுக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை இன்று (01.09.2025) சந்தித்துப் பேசினார். இதற்காக இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்துக்கு இருவரும் ஒரே காரில் பயணித்தனர். … Read more

பாகிஸ்தான் பிரதமரை கண்டுகொள்ளாத சீன அதிபர்

பீஜிங், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கடந்த 2001-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்தநிலையில், சீனாவின் தியான் ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இதில் சீனாவின் நீண்ட கால நண்பனாக கருதப்பட்ட பாக்., பிரதமரை, சீன அதிபர் கண்டுகொள்ளாமல் சென்ற … Read more

எஸ்சிஓ உச்சிமாநாடு பிரகடனத்தில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குக் கண்டனம்

தியான்ஜின்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு சீனாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ ) பிரகடனத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை இந்தியா எடுத்தது. இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் … Read more

ஆப்கானிஸ்தான் பூகம்பம்: பலி 800 ஆக அதிகரிப்பு; 4500+ காயம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று (செப்.1) ஏற்பட்ட பூகம்பத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 800 ஆக அதிகரித்துள்ளது. 4,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆப்கானிஸ்தானின் நான்கர்ஹர் மாகாணத்தில் ஜலாலாபாத் நகரம் உள்ளது. இது பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. ஜலாலாபாத்தில் இருந்து 27 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிராமத்தில் பூகம்பம் மையம் கொண்டிருந்தது. பூமிக்கு அடியில் 8 கிமீ ஆழத்தில் பூகம்பம் மையம் கொண்டிருந்தது. முதலில் 6.3 ரிக்டர் அளவிலும், … Read more

பனிப்போர் மனநிலையை எதிர்க்க வேண்டும்: எஸ்சிஓ உச்சிமாநாட்டில் சீன அதிபர் பேச்சு

தியான்ஜின்: பனிப்போர் மனநிலை, பிராந்திய மோதல், மிரட்டல் நடைமுறை ஆகியவற்றை எதிர்க்க வேண்டும் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார். எஸ்சிஓ உச்சிமாநாட்டில் உரை நிகழ்த்திய சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்காவை மறைமுகமாக விமர்சித்தார். அவர் தனது உரையில், “இரண்டாம் உலகப் போர் குறித்த சரியான வரலாற்றுக் கண்ணோட்டத்தை நாம் ஊக்குவிக்க வேண்டும். பனிப்போர் மனநிலை, பிராந்திய மோதல், மிரட்டல் நடைமுறை ஆகியவற்றை எதிர்க்க வேண்டும்” என … Read more

ஷாங்காய் மாநாட்டுக்குப் பின் புதினுடன் ஒரே காரில் சென்ற பிரதமர் மோடி

தியான்ஜின்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மாநாட்டுக்குப் பின்னர் ரஷ்ய அதிபர் புதினுடன் ஒரே காரில் சென்ற நிகழ்வு கவனம் பெற்றுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கடந்த 2001-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு சீனாவின் தியாஞின் நகரில் நடந்தது. … Read more