தேடப்படும் வைர வியாபாரி மெகுல் சோக்‌ஷியின் ஜாமீன் மனுவை நிராகரித்தது பெல்ஜியம் நீதிமன்றம்

புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.6,300 கோடி மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய வைர வியாபாரி மெகுல் சோக்‌ஷியின் ஜாமீன் மனுவை பெல்ஜியம் நீதிமன்றம் நிராகரித்தது. மும்பையில் நகை வியாபாரம் செய்த கீதாஞ்சலி குழுமத்தின் உரிமையாளர் மெகுல் சோக்‌ஷி (66). இவரும் இவரது உறவினர் நீரவ் மோடியும் சேர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து ரூ.13,000 கோடி அளவுக்கு கடன் பெற்று மோடி செய்து வெளிநாடு தப்பிச் சென்றனர். இவர்கள் நிதி மோசடி குற்றவாளிகளாக … Read more

சீனா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு: இன்று அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார்

தியான்ஜின்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று சீனாவின் தியான்ஜின் நகருக்கு சென்றார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அவர் இன்று சந்தித்துப் பேசுகிறார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று முன்தினம் நடைபெற்ற 15-வது இந்திய, ஜப்பான் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இதன் பிறகு அவர் ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவை சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் 90 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் … Read more

ட்ரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை: மேல்முறையீட்டு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி பல்வேறு நாடுகள் மீது அதிக வரிகளை விதித்த அதிபர் ட்ரம்பின் உத்தரவுகள் சட்டவிரோதமானவை என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கூடுதல் வரிவிதிப்பை நீக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. ட்ரம்ப் அரசு மேல்முறையீடு செய்ய அக்டோபர் 14-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரிவிதிப்புக் கொள்கையை அமெரிக்கா கடை பிடிக்கும் என அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். கனடா, மெக்சிகோ உட்பட … Read more

ஏமனில் இஸ்ரேல் தாக்குதல்: ஹவுதி அரசின் பிரதமர் அஹமத் அல்-ராஹாவி கொல்லப்பட்டார்

சனா: ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி அரசின் பிரதமர் அஹமத் அல்-ராஹாவி கொல்லப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சிப் படை சனிக்கிழமை அன்று அறிவித்தது. இந்த தாக்குதல் ஏமன் தலைநகர் சனாவில் நடந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹவுதி அரசின் அமைச்சர்கள் மற்றும் பிரதமர் அஹமத் அல்-ராஹாவி கொல்லப்பட்டதாக ஹவுதி படை தெரிவித்துள்ளது. இதை அன்றைய தினம் இஸ்ரேல் பாதுகாப்பு படையும் உறுதி செய்திருந்தது. ‘ஹவுதி தீவிரவாத படையின் முக்கிய இடத்தின் மீது … Read more

ஜப்பானில் புல்லெட் ரயிலில் பயணம் செய்த பிரதமர் மோடி

டோக்கியோ, பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று ஜப்பான் நாட்டுக்கு சென்றார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.இதையடுத்து இந்தியா-ஜப்பான் இடையே தொழில்நுட்பம், பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு, போக்குவரத்து, பாதுகாப்பு துறை உள்பட பல்வேறு துறைகளில் 13 ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன.இதன் தொடர்ச்சியாக ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவுடன் பிரதமர் மோடி பேச்சு நடத்தினார். ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். நேற்று … Read more

எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்க சீனா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

தியான்ஜின்(சீனா): எஸ்சிஓ உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவின் தியான்ஜின் நகருக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) இரண்டு நாள் உச்சிமாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக தியான்ஜின் நகரில் உள்ள பின்ஹாய் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சீன உயர் அதிகாரிகளும் இந்திய உயர் அதிகாரிகளும் விமான நிலையத்தில் அவரை வரவேற்றனர். … Read more

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்- பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி

இஸ்லமாபாத், பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா எடுத்த இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான், இந்தியாவில் எல்லையோர கிராமங்களை குறிவைத்து தாக்க முற்பட்டது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய செயலை இந்தியா தனது வான்பாதுகாப்பு அமைப்பு மூலம் முறியடித்தது. மூன்று நாட்களுக்கும் மேலாக இருநாடுகளுக்கும் மேலாக நீடித்த மோதல் பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதையடுத்து முடிவுக்கு வந்தது. சண்டை நிறுத்தம் ஏற்பட்டாலும் பாகிஸ்தானுக்கு … Read more

வரிவிதிப்புக்கு எதிரான தீர்ப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வசமுள்ள ‘ஆப்ஷன்’ என்ன?

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் பல்வேறு நாடுகள் மீது அதிக வரிகளை விதித்த அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் உத்தரவுகள் சட்டவிரோதமானவை என்று கூறி, அந்த உத்தரவுகளை அமெரிக்க கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இது, ட்ரம்ப்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ‘இந்த விவகாரத்தில் அடுத்து என்ன?’ என்ற கேள்வி எழுகிறது. இந்தச் சூழலில், ‘வரிவிதிப்பு தொடர்பான ட்ரம்ப்பின் உத்தரவுகளை அமெரிக்க கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை அமெரிக்க உச்ச … Read more

சீனா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

பீஜிங், ஆசிய நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக அந்நாட்டுக்கு அவர் நேற்று சென்றார். இதன்பின்னர் தலைநகர் டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்றத்தில் பங்கேற்று உரையாற்றினார். தொடர்ந்து ஜப்பான் பிரதமர் ஹிகேரு இஷிபாவை சந்தித்து பேசினார். ஜப்பானில் 16 மாகாண கவர்னர்களை சந்தித்து பேசினார். இந்நிலையில், ஜப்பான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அதனை முடித்து விட்டு சீனாவுக்கு புறப்பட்டார். சீனாவின் தியான்ஜின் நகரில் … Read more

காசா போர் எதிரொலி; இஸ்ரேலுடனான வர்த்தக உறவுகளை துண்டித்த துருக்கி அரசு

டெல் அவிவ், காசா நகர் மீது 21 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். காசாவுக்கு ஆதரவாக உள்ள லெபனான், சிரியா உள்ளிட்ட நாடுகள் மீதும் இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதில், லெபனானுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. ஈரானுடன் இஸ்ரேல் மோதி வருகிறது. மத்திய கிழக்கு பகுதியில் … Read more