“நாஜி படை போன்ற தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது” – இஸ்ரேலுக்கு புதின் எச்சரிக்கை

மாஸ்கோ: பாலஸ்தீனத்தின் காசா மீதான இஸ்ரேல் தாக்குதலை இரண்டாம் உலகப் போரின் போது லெனின்கிராட் மீதான நாஜி படை தாக்குதலுடன் ஒப்பிட்டு பேசி உள்ளார் ரஷ்ய அதிபர் புதின். மேலும், இஸ்ரேலை அவர் எச்சரித்தும் உள்ளார். கடந்த வாரம் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் விமானப்படை நடத்திய குண்டு வீச்சில் காசா நகரில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. தாக்குதலுக்கு பயந்து … Read more

காசா மீதான தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் – ஈரான் வெளியுறவு மந்திரி வலியுறுத்தல்

டெக்ரான், ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள், குண்டுகளை வீசி, ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதுடன், ஆயுதங்களுடன் இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்ணில்பட்டவர்களை எல்லாம் சுட்டுக்கொன்றனர். இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்த இஸ்ரேல் அரசு காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான போர் இன்று … Read more

“இது ஒரு சிறிய நகரம், தப்பிக்க முடியாது’’ – இஸ்ரேல் எச்சரிக்கையால் காசாவை காலி செய்யும் மக்கள்!

காசா: இஸ்ரேலின் எச்சரிக்கையைத் தொடர்ந்து வடக்கு காசாவை விட்டு பொதுமக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். 24 மணி நேரத்தில் காசா பொதுமக்கள் நகரை விட்டு வெளியேற வேண்டும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, நகரை விட்டு காசா மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். தெற்கு காசாவில் இருந்து வடக்கு காசா நோக்கி ஆயிரக்கணக்கில் இடம்பெயர்ந்து வருகின்றனர். காசாவின் பிரதான நெடுஞ்சாலை வழியாக நூற்றுக்கணக்கான கார்கள், மோட்டார் சைக்கிள்கள், டிரக்குகள் மூலமாக தங்களது எஞ்சிய உடமைகளை எடுத்துக்கொண்டு … Read more

இஸ்ரேல் சென்ற அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி…!

கெய்ரோ, ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள், குண்டுகளை வீசி, ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதுடன், ஆயுதங்களுடன் இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்ணில்பட்டவர்களை எல்லாம் சுட்டுக்கொன்றனர். இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்த இஸ்ரேல் அரசு காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. தொடர்ந்து இஸ்ரேல் – ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான போர் இன்று … Read more

11 லட்சம் மக்களை வெளியேறுமாறு ‘மிரட்டும்’ இஸ்ரேல் – எங்கே செல்வார்கள் காசா மக்கள்?

காசாவின் வடக்குப் பகுதியில் உள்ள 1.1 மில்லியன் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படாவிட்டால் தரைவழித் தாக்குதலில் மோசமாக பேரழிவை சந்திக்க வேண்டியிருக்கும் என ஹமாஸ் இயக்கத்துக்கு இஸ்ரேல் வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்தது. இந்த எச்சரிக்கையை ஹமாஸ் நிராகரித்தது ஒருபுறம் இருக்க, ஐ.நா. மூலம் இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கையை ஐ.நா அமைப்பே கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும், “இத்தகைய செயல் பேரழிவை ஏற்படுத்தும். பேரழிவு தரும் விளைவுகள் இல்லாமல் அத்தகைய இடம்பெயர்வு நடைபெறுவது சாத்தியமில்லை” என ஐ.நா தனது அதிருப்தியை … Read more

ஹார்வர்டு பல்கலை. வாரிய பதவியில் இருந்து திடீரென விலகிய இஸ்ரேல் கோடீஸ்வரர்

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகி உள்ளனர். இது உலக நாடுகளை கவலையடைய செய்துள்ளது. கடந்த சனிக்கிழமை திடீரென ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இசைக்கச்சேரியில் பங்கேற்றவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர். இந்த தாக்குதலே போருக்கு காரணமாக அமைந்தது. ஹமாசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. போரை ஆரம்பித்த ஹமாஸ் இயக்கம் … Read more

இஸ்ரேல் – ஹமாஸ் போர் | பறிபோகும் காசா குழந்தைகளின் உடல், மன நலம் – களம் காட்டும் பெருந்துயரம்!

“குண்டு சத்தம் கேட்கும்போதெல்லாம் நான் என் படுக்கைக்குள் நுழைந்துகொள்வேன், அப்போதுதான் என் மேல் குண்டு விழாது என்றது ஒரு குழந்தை. இன்னொரு குழந்தையோ, குண்டு சத்தம் கேட்டால் என் அம்மாவின் கண் பார்வையைவிட்டு அகலமாட்டேன். கழிவறைக்குக்கூட செல்ல மாட்டேன். அவள் பார்வையிலேயே இருந்தால் என் மீது குண்டு விழுந்தாலும் அம்மா காப்பாற்றுவாள் என்றது.” காசாவில் பிறந்து கலிபோர்னியாவில் உளவியல் நிபுணராக பணிபுரியும் ஃப்ரஜல்லா, பாலஸ்தீன குழந்தைகள் மீது போர் ஏற்படுத்தியுள்ள தாக்கம் பற்றி தாக்கல் செய்த தனது … Read more

பிலிப்பைன்ஸ் தலைநகரில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.!

பிலிப்பைன்ஸ், பிலிப்பைன்ஸ் தலைநகரம் மணிலாவின் தெற்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.2ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் ஓரியன்டல் மீண்டோரோ மாகாணத்தில் உள்ள பியூர்டோ கலேரியா நகரில் இருந்து 31 கி.மீ. தொலைவில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியே ஓடினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. தினத்தந்தி Related Tags : பிலிப்பைன்ஸ்  … Read more

''காசாவில் நோயாளிகளை எப்படி வெளியேற்றுவது?'' – இஸ்ரேல் எச்சரிக்கைக்கு உலக சுகாதார நிறுவனம் அதிருப்தி

காசா நகரை விட்டு பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்ற இஸ்ரேலின் எச்சரிக்கை, காசா நகர மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதைப் போன்றது என்று உலக சுகாதார நிறுவனம் வேதனை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தாரிக் ஜசரேவிக் கூறியது: “இஸ்ரேல் ராணுவம் விதித்துள்ள 24 மணி நேர கெடுவுக்குள் தீவிர சிகிச்சை பெற்று வருபவர்களை வெளியேற்றுவது என்பது இயலாத காரியம் என மருத்துவத் துறை அதிகாரிகள் … Read more

ரஷியா மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 3 பேர் பலி

மாஸ்கோ, ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 20 மாதங்களை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிலும் சமீபகாலமாக இரு நாடுகளும் மாறிமாறி டிரோன் தாக்குதலை நடத்துகின்றன. அதன்படி ரஷியாவின் பெல்கோரோட் பிராந்தியத்தை குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதனை ரஷிய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். எனினும் இந்த டிரோன் தாக்குதலில் பெல்கோரோட் பகுதியில் உள்ள ஒரு கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் பலியாகினர். இருவருக்கு படுகாயம் ஏற்பட்டது. … Read more