இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் குறித்து முதல்முறையாக ஈரான் அதிபருடன் சவுதி இளவரசர் ஆலோசனை

ரியாத்: பாலஸ்தீனத்துக்கு எதிரான போர் குற்றங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர். ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, காசா மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த 5 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் விமானப்படை நடத்திய குண்டு வீச்சில் காசா நகரில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. வான் தாக்குதலுக்கு பயந்து காசா நகரில் … Read more

அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்க எகிப்து மறுப்பு

காசா பகுதியில் 23 லட்சம் பேர் வசிக்கின்றனர். வான் தாக்குதலால் கடந்த 24 மணி நேரத்தில் 3,39,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் மூன்றில் இரண்டு பகுதி மக்கள் ஐ.நா பள்ளிகளுக்கு வந்துள்ளனர். மற்றவர்கள் அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்றுள்ளனர். வான் தாக்குதலுக்கு அஞ்சி வெளியேறும் மக்களை தங்கள் பகுதிக்குள் அனுமதிக்கும்படி எகிப்து அரசிடம் அமெரிக்கா கூறியது. ஆனால், இந்த கோரிக்கையை எகிப்து நிராகரித்துவிட்டது. காசா பகுதியை விட்டு பாலஸ்தீன மக்கள் வெளியேறினால், அது … Read more

ஹமாஸை முற்றிலும் ஒழிப்போம்: நெதன்யாகு உறுதி

ஹமாஸ் தீவிரவாதிகள் அனைவரையும் கூண்டோடு ஒழிப்போம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிபூண்டுள்ளார். ஹமாஸ் தீவிரவாதி ஒவ்வொருவரும், இறந்த மனிதன் என நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் நெதன்யாகு கூறியுள்ளார். இஸ்ரேலில் போர் பயிற்சி பெற்ற 3,60,000 பேர் காசா அருகே வரவழைக்கப்பட்டுள்ளனர். காசா எல்லையை ஒட்டியுள்ள இஸ்ரேலிய குடியிருப்புகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஹமாஸ் தீவிரவாதிகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இஸ்ரேல் ராணுவம் களம் இறங்கியுள்ளது. செஞ்சிலுவை சங்கம் வேண்டுகோள்: … Read more

லதா ரஜினிகாந்த் வழக்கு மீண்டும் விசாரிக்க உத்தரவு| Lata Rajinikanth case ordered to be re-investigated

புதுடில்லி, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கோச்சடையான் திரைப்படம், 2014-ல் வெளியானது. இந்த திரைப்படத்தை தயாரிப்பதற்காக, ‘ஆட் பிரோ அட்வர்டைசிங்’ என்ற நிறுவனத்திடம் இருந்து, தயாரிப்பாளர்களில் ஒருவரான, ‘மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம், 6.20 கோடி ரூபாய் கடன் பெற்றது. அதற்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்து கையெழுத்திட்டார். இந்த கடன் தொகையை திருப்பி அளிக்காததால் லதா மற்றும், ‘மீடியா ஒன் குளோபல்’ நிறுவனம் மீது, பெங்களூரு முதன்மை நீதிமன்றத்தில் 2015ல் வழக்கு தொடரப்பட்டது. இந்த … Read more

நெதன்யாகு – பிளிங்கன் சந்திப்பு| Netanyahu – Blinken meeting

ஜெர்மனி உதவி போர் மேகம் சூழ்ந்துள்ள இஸ்ரேலுக்கு ராணுவ மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க ஐரோப்பிய நாடான ஜெர்மன் முன்வந்துள்ளது. இது குறித்து அந்நாட்டு ராணுவ அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் கூறுகையில், ”இந்த சமயத்தில் இஸ்ரேலுடன் நாங்கள் நிற்கிறோம். அவர்கள் கேட்டுகொண்டபடி, இரண்டு ஆளில்லா குட்டி விமானங்கள் வழங்கப்படும். வெடி பொருட்கள், கப்பல்கள் போன்றவையும் தேவை என்பதை அறிகிறோம். மருத்துவ உதவியும் வழங்கத் தயாராக உள்ளோம். இதைப்பற்றி அந்நாட்டுடன் விவாதிக்க உள்ளோம்,” என்றார். ‘பேச்சுவார்த்தை தேவை’ இஸ்ரேல் … Read more

ஹமாஸ் பயங்கரவாத தாக்குதல்; 3 நாட்களுக்கு முன்பே இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்த எகிப்து

கெய்ரோ, இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லை பகுதியிலும் புகுந்து அந்த பகுதியில் இருந்த மக்களை தாக்கியது. இதில், பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். எண்ணற்றோரை பணய கைதிகளாகவும் சிறை பிடித்து வைத்தது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பாதுகாப்பு படையும் பதிலடி கொடுத்து வருகிறது. காசா பகுதியில் உள்ள கட்டிடங்களை இலக்காக கொண்டு வான்வழி தாக்குதல்களை நடத்துகிறது. இஸ்ரேலுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா … Read more

காசா மீது 6 நாட்களில் 6,000 குண்டுகள் வீச்சு – ‘இடைவிடாமல் தாக்குவோம்’ என ஹமாஸுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

டெல் அவிவ்: ஹமாஸை கட்டுப்படுத்தும் விதமாக காசாவில் 6 நாட்களில் 6,000 குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய விமானப் படை தெரிவித்துள்ளது. மேலும், இடைவிடாமல் தாக்குவோம் எனவும் ஹமாஸை இஸ்ரேல் விமானப் படை எச்சரித்துள்ளது. ஹமாஸ் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது அமெரிக்கா. இதனிடையே, அமெரிக்காவின் ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேல் சென்றுள்ளார். அவர், இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரை சந்தித்து பேசினார். … Read more

இஸ்ரேலில் குழந்தைகளை கொன்ற விவகாரம்.. ஜோ பைடன்- வெள்ளை மாளிகை முரண்பட்ட கருத்து

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உயிரிழப்புகள் தொடர்பாக அடுத்தடுத்து வரும் தகவல் கவலை அளிப்பதாக உள்ளது. குறிப்பாக, முன்னறிவிப்பு இன்றி இஸ்ரேல் பகுதிக்குள் புகுந்து ஹமாஸ் நடத்திய தாக்குதலில் சுமார் 40 குழந்தைகள் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தரும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பின்போது பேசுகையில், இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் ஒரு தீய செயல் என்றும், குழந்தைகளின் தலைகளை பயங்கரவாதிகள் வெட்டும் புகைப்படங்களை பார்ப்பேன் … Read more

மின்சாரம் இன்றி திணறும் காசா மருத்துவமனைகள்.. ஊசலாடும் மனித உயிர்கள்

காசாவை முற்றுகையிட்டு இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு பேரழிவு ஏற்பட்டுள்ளது. போரில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு வந்தவண்ணம் உள்ளனர். இதனால் மருத்துவமனைகள் நிரம்பிவழிகின்றன. எங்கு பார்த்தாலும் அழுகுரல் கேட்டவண்ணம் உள்ளது. இது ஒருபுறமிருக்க, காசாவுக்கான குடிநீர் விநியோகம், உணவு மற்றும் எரிபொருள் ஆகியவற்றை இஸ்ரேல் நிறுத்தி விட்டது. எரிபொருள் கொண்டு செல்வதையும் அனுமதிக்கவில்லை. இதனால் காசா நிலைகுலைந்துள்ளது. காசாவில் இருந்த ஒரே ஒரு மின் உற்பத்தி நிலையத்திலும் எரிபொருள் தீர்ந்துபோனதால் நேற்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. … Read more