இஸ்ரேல் கிராமத்தில் 40 குழந்தைகள் கொன்று குவிப்பு: அதிர்ச்சி தகவல்

டெல் அவிவ்: இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் 6வது நாளாக இன்றும் நீடிக்கிறது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி தாக்கினர். அத்துடன் காசா முனையை ஒட்டியுள்ள இஸ்ரேல் பகுதிக்குள் நுழைந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுக்கொன்றனர். அதன்பின்னர் இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக போர் பிரகடனம் செய்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் புகுந்து … Read more

“பாலஸ்தீனத்துக்கு எதிரான போர்க் குற்றங்களை நிறுத்த வேண்டும்” – ஈரான், சவுதி தலைவர்கள் ஆலோசனை

ரியாத்: ஹமாஸ் – இஸ்ரேல் போர் குறித்து ஈரான் நாட்டு அதிபர் இப்ராஹிம் ரைசி, சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இருவரும் தொலைபேசியில் விவாதித்துள்ளனர். உலக அரங்கில் மிக முக்கியமான நகர்வாக இது பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள ஈரானிய அரசு ஊடகம், “பாலஸ்தீனத்துக்கு எதிரான போர்க் குற்றங்களுக்கு முடிவுகட்ட வேண்டும்” என இரு தலைவர்களும் ஆலோசித்ததாக தெரிவித்துள்ளது. அப்போது, “நடந்துகொண்டிருக்கும் போரினை தடுக்க சர்வதேச அளவில் சவுதி புதிய முன்னெடுப்புகளை … Read more

லைவ்: காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,354ஆக உயர்வு

டெல் அவிவ், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி, ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதுடன், ஆயுதங்களுடன் இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்ணில்பட்டவர்களை எல்லாம் சுட்டுக்கொன்றனர். இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்த இஸ்ரேல் அரசு காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. அதன்படி … Read more

போர்க்களத்தில் குடும்பத்தினருக்கு மெசேஜ்-ல் அப்டேட் கொடுத்த இஸ்ரேல் இளம் ராணுவ வீராங்கனை| Shooting At Me…: Israeli Soldier Sends Chilling Texts To Family Before Being Killed By Hamas

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜெருசலேம்: ஹமாஸ் பயங்கரவாதிகளுடன் போர்க்களத்தில் சண்டையிட்ட 19 வயது இஸ்ரேல் இளம் ராணுவ வீராங்கனை கார்ப்ரல் நமா போனி என்பவர், தனது குடும்பத்தினருக்கு, போர் நிலவரம் தொடர்பாக அவ்வபோது மெசேஜ்-ல் தகவல் தெரிவித்து வந்தார். இறுதியில் அவர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையே 6 நாளாக போர் நீடித்து வருகிறது. இதில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலிய ராணுவப் படையினர் ஹமாஸ் பயங்கரவாதிகளுடன் … Read more

“பிணைக் கைதிகளை விடுவித்தால் மட்டுமே காசாவுக்கு மின்சாரம், தண்ணீர்…” – இஸ்ரேல் திட்டவட்டம்

டெல் அவிவ்: ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இஸ்ரேலியர்களை விடுவித்தால் மட்டுமே காசாவுக்கு மின்சாரம், தண்ணீர், எரிபொருள் ஆகியவற்றை வழங்குவோம் என்று இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கி 6 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இந்த மோதலில் இஸ்ரேல் தரப்பில் 1,200 பேரும், காஸாவில் 1,100 பேரும் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் காரணமாக காசாவுக்கு மின்சாரம், தண்ணீர், எரிபொருள் ஆகியவற்றின் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தியுள்ளது. இதனால், காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் அடிப்படைத் … Read more

சீனாவை போலவே இந்தியாவுக்கும் அதிக கடன்; ஆனால் ஆபத்து இல்லை: ஐ.எம்.எப்., தகவல்| India has high debt like China, but risks are moderated: IMF

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: ”இந்தியாவுக்கும் சீனாவை போல கடன்கள் அதிகம் உள்ளன. ஆனால் இடர்ப்பாடுகள் சீனாவை விடக் குறைவாக உள்ளதால்ஆபத்துக்கள் இல்லை என பன்னாட்டு நிதியத்தின் (ஐ.எம்.எப்.,) நிதி விவகாரத்துறை துணை இயக்குநர் ரூட் டீ மூயிஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும், அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவின் தற்போதைய கடனும் சீனாவை போன்று அதிகம் உள்ளது. இந்தியாவின் கடன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) 81.9 சதவீதமாக உள்ளது. சீனாவின் கடன் … Read more

பதான்கோட் தாக்குதலில் தொடர்புள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை

புதுடெல்லி: பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப் படை தளத்தில் 2016 ஜனவரியில் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் 4 தீவிரவாதிகள் ஊடுருவி திடீர் தாக்குதல் நடத்தினர். பின்னர் நால்வரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை தரப்பில் 7 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலை ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் சியால் கோட் கமாண்டரான ஷாகித் லத்தீப்உள்ளிட்ட இருவர் கையாண்டது, வழிநடத்தியது தெரியவந்தது. இந்நிலையில் சியால்கோட் நகரில்உள்ள மசூதி ஒன்றில் ஷாகித் லத்தீப்அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். ஷாகித் லத்தீப் கடந்த … Read more

“ஒவ்வொரு ஹமாஸும் உயிரற்ற மனிதர்கள்” – இஸ்ரேல் பிரதமர்

டெல் அவிவ்: ஹமாஸ் பயங்கரவாதிகளுடனான சண்டை தொடரும் என்று தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீன பயங்கரவாதிகள் அனைவரும் உயிரற்ற மனிதர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ஹமாஸ் குழு சனிக்கிழமை இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முதல் முறையாக ஹமாஸ்களை அழிக்கும் இஸ்ரேலின் நோக்கத்தினை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். “ஹமாஸ்கள் டேஷ் (இஸ்லாமிய அரசு குழு) உலகம் டேஷ்களை அழித்ததைப் போல நாங்கள் அவர்களை நசுக்கி அழித்தொழிப்போம்” என முதல்முறையாக அவரது … Read more