இஸ்ரேல்-பாலஸ்தீன் மோதல்: 2,100 பேர் பலி, ஒரே இரவில் 200 ஹமாஸ் இலக்குகள் அழிப்பு

Israel Palestine War: பாலஸ்தீனில் 900 பேர் உயிரிழப்பு, 4500 பேர் படுகாயம் என பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் அறிவிப்பு. இஸ்ரேல் தரப்பில் 1200 உயிரிழப்பு, 2900 காயம் என ஹீப்ரூ வானொலி அறிவித்துள்ளது

''காசா குடியிருப்பு பகுதிகள் மீது தாக்குதல் நடத்தவில்லை'' – இஸ்ரேல் ராணுவம் விளக்கம்

டெல் அவிவ்: காசாவில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும், ஹமாஸ் பயங்கரவாதிகள் உள்ள கட்டிடங்களை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்படுவதாகவும் இஸ்ரேல் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்புக்கும் இடையே மோதல் தொடங்கி 4 நாட்கள் முடிந்து 5வது நாளை எட்டி உள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் குறித்து அதன் ராணுவ செய்தித் தொடர்பாளர் … Read more

அமெரிக்காவில் இந்தியா- கனடா வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை? | Jaishankar, Canadian FM held secret meeting in US to solve crisis: Report

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலையால் இந்தியா – கனடா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலினி ஜோலி, அமெரிக்காவில் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை இரு நாடுகளும் உறுதி செய்யவில்லை. காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில், இந்திய ஏஜன்ட்களுக்கு தொடர்பிருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார். இதை … Read more

ஆப்கனிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு

ஹெராத்: ஆப்கனிஸ்தானின் ஹெராத் நகருக்கு அருகே இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது. ஆப்கனிஸ்தானின் ஹெராத் நகருக்கு அருகே கடந்த 7ம் தேதி மிகப் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அடுத்தடுத்து இருமுறை ஏற்பட்ட நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகின. அதோடு, தொடர் நில அதிர்வுகளும் ஏற்பட்டன. இதன் காரணமாக பல கிராமங்கள் தரைமட்டமாகி, 2,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், … Read more

ஆப்கனை மீண்டும் உலுக்கிய நிலநடுக்கம்: பலி 2,400 ஐ தாண்டியது| Earthquake hits Afghanistan again today: More than 2,400 dead

காபூல்: சில தினங்களுக்கு முன், ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,400 ஐ தாண்டி உள்ளது. இன்று(அக்.,11) மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில், 2021 ஆகஸ்ட் முதல், தலிபான் அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகின்றனர். அந்நாட்டின் நான்காவது பெரிய நகரமாகவும், அதிக மக்கள் தொகை உடைய நகரமாகவும் ஹெராத் விளங்குகிறது. இந்நிலையில், இந்த நகரின் வடமேற்கே கடந்த 7ம் தேதி அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இவை, முறையே, 6.3; … Read more

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கிய அமெரிக்கா: காசாவில் இருந்து 2.6 லட்சம் பேர் வெளியேற்றம்| Israel-Hamas war: first plane laden with US weapons has arrived: Israel military

ஜெருசலேம்: ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது எதிர்பாராத வகையில் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் அமெரிக்கா, ஆயுதங்களை வழங்கியுள்ளது. மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே, நீண்ட கால மோதல் உள்ளது. பாலஸ்தீனியர்களிடம் இருந்த காசா பகுதியை, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, 2007ல் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 6ம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள், … Read more

வேலையின்மையால் திண்டாடும் சீன இளைஞர்கள்| Chinese youth suffering from unemployment

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: சீனாவில் அதிகரித்துள்ள வேலையின்மையால் அந்நாட்டு இளைஞர்கள் திண்டாடுகின்றனர். உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. தற்போது 21.3 சதவீதம் இளைஞர்கள் அங்கு வேலை இல்லாமல் தவிப்பதாக நியூசிலாந்தின் விக்டோரியா பல்கலைக்கழகம் ஆய்வறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. இது கொரோனா காலகட்டத்துக்கு முன்பு இருந்ததை விட இரண்டு மடங்குகள் அதிகம். இப்பிரச்னைக்கு அந்நாட்டு அரசாங்கத்தின் முரண்பாடான சில கொள்கைகளே முக்கிய காரணம் என … Read more

இக்கட்டான இந்த தருணத்தில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும்: நெதன்யாகுவிடம் மோடி உறுதி

புதுடெல்லி: பாலஸ்தீன எல்லையில் தொடரும் போர் பிரச்சினை குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் நேற்று தொடர்பு கொண்டு பேசினார். ‘‘இந்த கடினமான நேரத்தில் இந்திய மக்கள், இஸ்ரேலுடன் உறுதியாக நிற்கின்றனர். தீவிரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் இந்தியா கடுமையாகவும் சந்தேகத்துக்கு இடமின்றியும் கண்டிக்கிறது’’ என்று அப்போது, நெதன்யாகுவிடம் மோடி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். … Read more

காசா எல்லைப் பகுதி முழுவதும் கட்டுப்பாட்டில் வந்தது: 1,500 ஹமாஸ் தீவிரவாதிகளின் உடல்கள் மீட்பு – இஸ்ரேல் ராணுவம்

டெல் அவிவ்: இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 1,500 ஹமாஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இஸ்ரேலில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,000 ஆகவும், பாலஸ்தீனத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 788 ஆகவும் உயர்ந்துள்ளது. கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் நாட்டின் தெற்குப் பகுதியில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் தரை, வான், கடல் மார்க்கமாக திடீர் தாக்குதல் நடத்தினர். அன்றைய தினம் பாலஸ்தீனத்தின் காசா எல்லை பகுதியில் இருந்து இஸ்ரேலை குறிவைத்து 5,000-க்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. ஆயிரக்கணக்கான ஹமாஸ் … Read more