இஸ்ரேல் – பாலஸ்தீன போர் | ‘ஒரு நிமிட இடைவெளி இன்றி தாக்குதல்’ – காசாவில் 1,20,000 பேர் வெளியேற்றம்

காசா: ஒரு நிமிட இடைவெளி கூட இல்லாமல் காசாவில் தாக்குதல் நடந்து வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ள நிலையில், அங்கிருந்து இதுவரை 1,20,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். சனிக்கிழமை முதல் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்களால் இஸ்ரேல் தரப்பில் 700 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 260 பேர் ஓர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள். இந்தத் தாக்குதல்களின்போது 100 இஸ்ரேலியர்கள் கடத்தப்பட்டு, காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. அதேபோல், ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக … Read more

கொல்ல வேண்டாம், விட்டு விடுங்கள்…!! ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் கெஞ்சும் இளம்பெண்; அதிர்ச்சி வீடியோ

டெல் அவிவ், இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை ஹமாஸ் பயங்கரவாதிகள் அமைப்பை சேர்ந்த குழுவினர் அதிரடியாக ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி, தாக்குதல்களை நடத்தி, அதிர்ச்சி ஏற்படுத்தியது. இஸ்ரேலும், பதில் தாக்குதலுக்கு தயாரானது. படைகளை குவித்து பதிலடியும் கொடுத்தது. இதனால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலில் நடந்த இந்த ஏவுகணை தாக்குதலில் பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் உள்ளனர். இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாத குழு … Read more

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் இஸ்ரேல், பாலஸ்தீன ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம்

நியூயார்க்: நியூயார் நகரிலுள்ள டைம்ஸ் சதுக்கத்தில் பாலஸ்தீன ஆதரவாளர்களின் பேரணி ஒன்று தொடங்கியது. ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலை ஆதரித்த இவர்களுக்கும், இஸ்ரேல் ஆதரவாளர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. ‘பாலஸ்தீனம் விடுதலை பெறும்’ என்று ஒரு தரப்பினர் முழக்கமிட, மற்றொரு தரப்பினர் ‘இது உங்களுக்கு அவமானம்’ என்று முழக்கமிட்டனர். இந்தப் பேரணிக்கு நியூயார்க் சாப்டர் ஆஃப் தி டெமாக்ரட்டிக் சோசலிஸ்ட் (என்ஓய்சி -டிஎஸ்ஏ) என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. பாலஸ்தீன மக்களுடன் ‘ஒற்றுமை’ மற்றும் ‘75 ஆண்டு கால … Read more

இஸ்ரேல்: இளம்பெண் உடலை நிர்வாண கோலத்தில் தெருவில் இழுத்து சென்ற கொடூரம்

டெல் அவிவ், காசா மற்றும் இஸ்ரேல் எல்லையையொட்டிய கிராமப்புற பண்ணை நிலத்தில் கடந்த சனிக்கிழமை நோவா திருவிழா நடந்துள்ளது. அமைதி வேண்டி அதற்காக நடத்தப்பட்ட இசை திருவிழாவில் ஷானி லூக் என்ற ஜெர்மனி நாட்டை சேர்ந்த இளம்பெண், தோழியுடன் சென்று கலந்து கொண்டுள்ளார். இதில், அவர்கள் நடனம் ஆடி, உணவு உண்டு, குடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், திடீரென ஹமாஸ் பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்கள் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி, தாக்குதல்களை நடத்தி, அதிர்ச்சி … Read more

அமெரிக்க பேராசிரியர் கிளாடியாவுக்கு பொருளாதார நோபல் பரிசு!

ஸ்டாக்ஹோம்: நடப்பு ஆண்டுக்கான பொருளாதார அறிவியல் நோபல் பரிசு, அமெரிக்க பேராசிரியர் கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. “தொழிலாளர் சந்தையில் (labour market) பெண்களின் பங்குகள் பற்றிய புரிதலை மேம்படுத்தியதற்காக” கிளாடியா கோல்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி தெரிவித்துள்ளது. 1946-ம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்த க்ளாடியா கோல்டின், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். பெண்களின் வருவாய் மற்றும் தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்கு குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளார். இவரது ஆராய்ச்சி 200 … Read more

அமெரிக்காவை சேர்ந்தவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு| American Nobel Prize in Economics

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஸ்டாக்ஹோம்: அமெரிக்காவை சேர்ந்த கிளாடியா கோல்டினுக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனை சேர்ந்த ஆய்வாளர் ஆல்ப்ரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் நோபல் பரிசு அளிக்கப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என ஆறு துறைகளில் சாதனை படைத்தோருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும். அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அக்.,2 முதல் அறிவிக்கப்பட்டு … Read more

கனடாவில் விமானம் விழுந்து நொறுங்கி இந்திய பயிற்சி விமானிகள் பலி

மராட்டியத்தை சேர்ந்தவர்கள் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் லாங்லியில் ஸ்கைகுவெஸ்ட் ஏவியேஷன் என்ற விமானம் ஓட்டுவதற்கான பயிற்சி மையம் செயல்படுகிறது. இங்கு இந்தியரான அபய் காத்ரு (வயது 25) என்பவர் விமானி பயிற்சிக்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் சென்றிருந்தார். இவருடன் யாஷ் ராமுகடே என்ற மற்றொரு இந்தியரும் அங்கு பயிற்சி பெற்று வந்தார். இவர்கள் இருவருமே மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். நொறுங்கிய விமானம் இந்தநிலையில் சம்பவத்தன்று விமானம் ஓட்டுவதற்கான பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியின்போது … Read more

ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஈரான், சிரியா, லெபனான் நாடுகள் ஆதரவு

ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஈரான், சிரியா மற்றும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு ஆதரவாக உள்ளது. இவர்கள் அனைவருமே இப்பகுதியில் அமெரிக்காவின் கொள்கையை எதிர்க்கின்றனர். ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்தியில், ‘‘ ஹமாஸ் தாக்குதல், ஆக்கிரமிப்பாளர்களின் முன்னிலையில் பாலஸ்தீன மக்களின் நம்பிக்கைக்கு சான்றாக உள்ளது. ஹமாஸ் அமைப்பினருக்கு பாலஸ்தீன பகுதி மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள இதர நாடுகளிலும் ஆதரவாளர்கள் உள்ளனர்.’’ என தெரிவித்துள்ளது. ஹமாஸ் தாக்குதலால் பெருமிதம் அடைகிறோம் என ஈரான், சிரியா … Read more

இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதல்; 600 பேர் பலி என அதிர்ச்சி தகவல்

டெல் அவிவ், இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு நேற்று அதிரடியாக ஏவுகணை தாக்குதலை நடத்தியது. திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி, அதிர்ச்சி ஏற்படுத்தியது. இஸ்ரேலும், பதில் தாக்குதலுக்கு தயாரானது. பதிலடியும் கொடுத்தது. இதனால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலில் நடந்த இந்த ஏவுகணை தாக்குதலில் பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் உள்ளனர். இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல் … Read more