தென்சீனக்கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் படகுகளை தடுத்து நிறுத்திய சீனா

மணிலா, உலகின் பரபரப்பான வர்த்தக பாதைகளுள் ஒன்றான தென்சீனக்கடல் பகுதி முழுமைக்கும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அதேசமயம் பிலிப்பைன்ஸ், தைவான், வியட்நாம், மலேசியா போன்ற நாடுகளும் அதற்கு உரிமை கோருகின்றன. இதனால் அங்கு நீண்ட காலமாக பிராந்திய மோதல் நீடித்து வருகிறது. அதன்படி அங்குள்ள ஷோல் பகுதியில் சில மிதக்கும் தடைகளை நிறுவி பிலிப்பைன்ஸ் படகுகளை சீனா தடை செய்தது. ஆனால் கடந்த வாரம் பிலிப்பைன்ஸ் கடற்படையினரால் அந்த தடைகள் அகற்றப்பட்டன. இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் … Read more

பாகிஸ்தானின் ஊடகங்களை கட்டுப்படுத்த சீனா முயற்சி – அமெரிக்கா குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானுக்கு சீனா கடனுதவி வழங்கி வருகிறது. அதேசமயம் பாகிஸ்தானின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக சீனா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுகின்றன. அந்த வகையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ‘பாகிஸ்தானின் ஊடகங்களை சீனா முழுவதும் கட்டுப்படுத்த முயல்கிறது. மேலும் வெளிநாட்டு தகவல்களை கையாளும் முயற்சிகளுக்காக சீனா கோடிக்கணக்கில் பணம் செலவிடுகிறது’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தனது கம்யூனிஸ்ட் கட்சியின் நேர்மறை கருத்துகளை வெளியிடவும், … Read more

நார்வே எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்: நார்வே நாட்டை சேர்ந்த எழுத்தாளர் ஜான் பாஸ் (64) இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. கடந்த 2-ம் தேதி முதல்மருத்துவம், இயற்பியல், வேதியியல் ஆகியவற்றுக்கான நோபல்பரிசுகள் அடுத்தடுத்த நாட்களில்அறிவிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து நேற்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு நார்வே நாட்டை சேர்ந்த எழுத்தாளர் ஜான் பாஸுக்கு அறிவிக்கப்பட்டது. கடந்த 1959-ம் ஆண்டில் நார்வேநாட்டின் ஹாஜேசண்ட் … Read more

உக்ரைன் கிராமத்தில் ரஷ்யா பயங்கர தாக்குதல்: 51 பேர் உயிரிழப்பு

குப்யான்ஸ்க்: உக்ரைன் நாட்டின் வடகிழக்கு திசையில் அமைந்துள்ள கார்கிவ் என்ற பகுதிக்கு உட்பட்ட குப்யான்ஸ்க் நகருக்கு அருகில் உள்ள ஹ்ரோசா (Hroza) என்ற கிராமத்தில் ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில் சுமார் 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 6 பேர் காயமடைந்துள்ளனர். இதனை உக்ரைன் அரசு உறுதி செய்துள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த சூழலில் உக்ரைன் நாட்டின் ஹ்ரோசா கிராமத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை … Read more

உக்ரைனில் மளிகை வணிக வளாகத்தின் மீது ரஷ்யா ராக்கெட் வீசி தாக்குதல்: 49 பேர் பலி| Russia rocket attack on grocery store in Ukraine: 49 killed

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கிவிவ்: உக்ரைனில் மாளிகை வணிகவளாகத்தின் மீதுரஷ்யா நடத்திய ராக்கெட் வீச்சில் 49 பேர் பலியானதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, அதன் அண்டை நாடான ரஷ்யா போர் தொடுத்து உள்ளது. பல நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் போர் நீடித்து வரும் நிலையில் போரை முடிவுக்கு கொண்டுவர நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகளில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில் இன்று (05 … Read more

‘சொல்ல முடியாதவற்றுக்காக குரல்…’ – நார்வே எழுத்தாளருக்கு இலக்கிய நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம் (ஸ்வீடன்): 2023-ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு, நார்வே எழுத்தாளரான ஜான் ஃபோஸ்ஸேக்கு (Jon Fosse) அறிவிக்கப்பட்டுள்ளது. போஸ்ஸேயின் “சொல்ல முடியாதவற்றுக்காக குரல் கொடுக்கும் அவரது புதுமையான நாடகங்கள் மற்றும் உரைநடைகளுக்காக” இப்பரிசு வழங்கப்படுவதாக தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி தெரிவித்துள்ளது. இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெறும் ஜோன் போஸ்ஸின் சிறந்தப் படைப்பு ‘செப்டோலோஜி’. இதனை 2021-ம் ஆண்டு அவர் எழுதி முடித்தார். மற்றவை ‘தி அதர் நேம் 2020’, ‘ஐ இஸ் அனதர் 2020’ … Read more

நார்வே எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு| Nobel Prize 2023 for Literature for Norwegian author Jon Fosse

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஸ்டாக்ஹோம்: இலக்கியத்துக்கான நோபல் பரிசு, நார்வே நாட்டை சேர்ந்த எழுத்தாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனை சேர்ந்த ஆய்வாளர் ஆல்ப்ரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் நோபல் பரிசு அளிக்கப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என ஆறு துறைகளில் சாதனை படைத்தோருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும். அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அக்.,2 முதல் அறிவிக்கப்பட்டு … Read more

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு – 5 மாணவர்கள் காயம்

பால்டிமோர், அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம் பால்டிமோர் நகரில் மோர்கன் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி படிக்கும் விடுதி மாணவர்களுக்கான சாப்பாடு பரிமாறும்போது இருதரப்பு மாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வன்முறை அதிகரித்த நிலையில் மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினார். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த துப்பாக்கிச்சூடு … Read more

தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு

பீஜிங், சீனாவின் ஷான்சி மாகாணம் வூடாய் நகர் அருகே உள்ள ஜின்பிங் கிராமத்தில் மக்காச்சோளம் பதப்படுத்தும் ஆலை ஒன்று உள்ளது. அங்குள்ள உலர்கள தொட்டியை சுத்தப்படுத்தும் பணிக்கு வேலையாட்கள் அமர்த்தப்பட்டனர். மக்காச்சோளம் பதப்படுத்தும் தொட்டிக்குள் இறங்கியப்படி ஒருவர் சுத்திகரிப்பு பணியை தொடங்கினார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி தொட்டிக்குள் விழுந்து கிடந்தார். அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்க தொட்டிக்குள் குதித்தனர். அப்போது அங்கு பரவியிருந்த விஷவாயு தாக்கி 6 தொழிலாளர்கள் அடுத்தடுத்து … Read more