வெளிநாட்டு மாணவர் விசா நேர்காணல்களுக்கு தற்காலிக தடை: அமெரிக்கா தடாலடி நடவடிக்கை

நியூயார்க், அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதும் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். அமெரிக்காவில் மீண்டும் பொற்காலம் ஏற்பட செய்வேன் என கூறி வருகிறார். இந்நிலையில், குடியேற்றம் மற்றும் விசா தொடர்பாக கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். இந்த சூழலில், வெளிநாட்டு மாணவர்களுக்கு டிரம்ப் நிர்வாகம் நேற்று புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. வகுப்புகளை பாதியில் நிறுத்துதல் அல்லது வகுப்புகளுக்கு செல்லாமல் தவிர்த்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால், அந்த மாணவரின் விசா ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இந்த … Read more

ஸ்பெயினில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து; 4 பேர் பலி

மாட்ரிட் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அகதிகள் ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்துள்ளனர். இதற்காக படகு மூலம் மத்திய தரைக்கடல் வழியாக அகதிகள் … Read more

‘அமெரிக்காவுடன் இணைந்தால் கோல்டன் டோம் பாதுகாப்பு இலவசம்’ – கனடாவுக்கு ட்ரம்ப் சலுகை! 

வாஷிங்டன்: கனடா அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறினால், கோல்டன் டோம் பாதுகாப்பு அமைப்பில் கனடா இலவசமாக இணையலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்ரூத் சமூக ஊடக தளத்தில் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், “எங்களின் அற்புதமான கோல்டன் டோம் பாதுகாப்பு அமைப்பில் ஓர் அங்கமாக விரும்பும் கனடாவிடம், ஒரு தனித்த சுதந்திர தேசமாக சேர விரும்பினால் 61 பில்லியன் டாலர் அதற்காக செலவாகும். ஆனால், அவர்கள் எங்களின் நேசத்துக்குரிய 51-வது மாநிலமாக … Read more

இந்த ஆண்டில் சுனாமி? காத்திருக்கும் பேரழிவு.. மிரளவைக்கும் பாபா வங்காவின் கணிப்பு!

Covid prediction: தற்போது பரவ தொடங்கி உள்ள கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து 2030ஆம் ஆண்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பாபா வங்கா கணித்துள்ளதாக கூறப்படுகிறது.   

சூடானில் காலரா நோய் பாதிப்பு : ஒரே வாரத்தில் 170 பேர் பலி

சூடானில் பரவிய புதிய காலரா தொற்று காரணமாக ஒரு வாரத்தில் மட்டும் 170-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தலைநகரான கார்ட்டூம் மற்றும் ஓம்டுர்மனில் பெரும்பாலான நோய்த் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால், வடக்கு கோர்டோபான், சென்னார், காசிரா, வெள்ளை நைல் மற்றும் நைல் நதி மாகாணங்களிலும் காலரா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சூடானின் சுகாதார மந்திரி ஹைதம் இப்ராஹிம் கூறுகையில், “கடந்த நான்கு வாரங்களில் கார்ட்டூம் பகுதியில் சராசரியாக 600 முதல் 700 வரை … Read more

இஸ்ரேல்- ஹமாஸ் போர்: காசாவில் பலி எண்ணிக்கை 54 ஆயிரமாக உயர்வு

காசா சிட்டி, காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், … Read more

இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் வெற்றி அடைந்தது: ஷெபாஸ் ஷெரீப்

இந்தியாவுடனான நான்கு நாள் போரில் பாகிஸ்தான் வெற்றி அடைந்தது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், நான்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர், ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்குச் சென்றபோது பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது இத்தகவலை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்டார். அப்போது அவர் மேலும் கூறியதாவது: காஷ்மீர் பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை என இந்தியா உடனான அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நாங்கள் விரும்புகிறோம். மேலும், … Read more

இங்கிலாந்து: கால்பந்து வெற்றி பேரணியில் புகுந்த கார்; 50 பேர் காயம்

லண்டன், இங்கிலாந்து நாட்டில் கால்பந்து பிரீமியர் லீக் போட்டியில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நேற்று மாலை வெற்றி கொண்டாட்டத்திற்காக லிவர்பூல் நகரத்தின் பல்வேறு தெருக்களில் லட்சக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் பலரும் இதில் கலந்து கொண்டனர். அவர்கள் பேரணியாக திரண்டு சென்றனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கார் ஒன்று மக்கள் கூட்டத்திற்குள் திடீரென புகுந்தது. இதில், 4 குழந்தைகள் உள்பட 50 பேர் காயம் … Read more

சீனா: ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து

பீஜிங், சீனாவின் ஷாண்டோங் மாகாணம் வெய்பாங் நகரில் ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த ரசாயன தொழிற்சாலையில் இன்று மதியம் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தொழிற்சாலையில் தீப்பற்றியது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தொழிற்சாலையில் இருந்து ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர். ரசாயன ஆலையில் இருந்து வாயு கசிவும் ஏற்பட்டுள்ளதாக தகவல் … Read more

வங்காளதேசத்தில் ஆசிரியர்கள் போராட்டம்: அரசுக்கு நெருக்கடி அதிகரிப்பு

டாக்கா, வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மாணவர்கள் போராட்டத்தால் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது இதனிடையே, வங்காளதேசத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் பொதுத்தேர்தல் நடத்த வேண்டுமென ராணுவ தளபதி வாகிர் உல் சமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதே கோரிக்கையை எதிர்க்கட்சியாக வங்காளதேச தேசியவாத கட்சி முன்வைத்துள்ளது. எதிர்க்கட்சி தலைவரான ஹலிதா சியாவுக்கு ராணுவ தளபதி வாகிர் ஆதரவு அளித்துள்ளதாக … Read more