துருக்கி நாடாளுமன்றம் அருகே தற்கொலை படை தாக்குதல்: 1,000 குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் கைது

அங்காரா, சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகள் குர்திஷ் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்கள் அங்கிருந்து கொண்டு துருக்கி நாட்டின் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர். பயங்கரவாத அமைப்பாக கருதப்படும் இவர்களை ஒடுக்க துருக்கி அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தநிலையில் துருக்கி நாட்டின் நாடாளுமன்றம் அருகே சமீபத்தில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 போலீஸ்காரர்கள் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த மற்றொரு பயங்கரவாதியை போலீசார்சுட்டுக்கொன்றனர். ஏவுகணை தாக்குதல் கூட்டத்தொடர் … Read more

3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்: இயற்பியலுக்கான நோபல் பரிசு3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி,பொருளாதாரம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த 2-ம் தேதி முதல் அறிவிக்கப்படுகிறது. முதல் நாளில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு ட்ரூ வெய்ஸ்மேன், கட்டாலின் கரிக்கோவுக்கு அறிவிக்கப்பட்டது. 2-ம் நாளான் நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதன்படி அமெரிக்காவின் ஒகையோ மாகாண பல்கலைக்கழக பேராசிரியர் பியர்லி அகோஸ்டினி, … Read more

பிரேசில் நாட்டின் அமேசான் பகுதி ஏரியில் கரை ஒதுங்கிய டால்பின்கள்

பிரேசிலியா, காலநிலை மாற்றத்தால் பூமியின் சராசரி வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இது உலக நாடுகளில் பல்வேறு பாதிப்புகளுக்கு காரணமாக உள்ளது. உலகின் மிகப்பெரிய அமேசான் மழைக்காடுகளையும் இது விட்டுவைக்கவில்லை. அங்கு கடந்த சில நாட்களாக 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. இந்தநிலையில் அங்குள்ள டெபே ஏரியில் சுமார் 100 டால்பின்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. இதுகுறித்த காட்சிகள் அங்குள்ள சமூகவலைதளங்களில் பரவி சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிக வெப்பநிலை காரணமாக … Read more

நேபாளத்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: டெல்லியிலும் உணரப்பட்டது

புதுடெல்லி: நேபாளத்தில் 6.2 மற்றும் 4.6 ரிக்டர் அளவுகளில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, டெல்லி தேசிய தலைநகரப் பிராந்தியம் மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளில் வலுவாக உணரப்பட்டது. நேபாளத்தில் நேற்று பிற்பகல் 2.25 மணிக்கு 4.6 ரிக்டர் அளவிலும் இதையடுத்து 2.51 மணிக்கு 6.2 ரிக்டர் அளவிலும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்கள் சுமார் 1 நிமிடம் நீடித்தன. முதல் நிலநடுக்கம் பூமியில் 10 கி.மீ. ஆழத்திலும் இரண்டாவது நிலநடுக்கம் 5 கி.மீ. … Read more

இந்தியாவில் பணியாற்றும் 41 தூதரக அதிகாரிகளை திரும்ப பெற கனடாவுக்கு கெடு

புதுடெல்லி: இந்தியாவில் பணியாற்றும் 41 கனடா தூதரக அதிகாரிகளை வரும் 10-ம் தேதிக்குள் திரும்பபெறுமாறு கனடா அரசிடம் இந்தியா வலியுறுத்தி உள்ளது. அதன்பிறகு, அவர்களது தூதரக பாதுகாப்பு உரிமை பறிக்கப்படும் என்று மத்திய அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 1980-1990 காலகட்டத்தில் பல்வேறு பிரிவினைவாத அமைப்புகள் தலைதூக்கின. காலிஸ்தான் பெயரில் தனி நாடு கோரி அந்த அமைப்புகள் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டன. மத்திய, மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கைகளால் பிரிவினைவாத அமைப்புகள் ஒடுக்கப்பட்டன. … Read more

உலக விலங்குகள் தினம்| World Animal Day

உலகில் பல்வேறு வகை விலங்குகள் உள்ளன. இவை நமக்கு பல வழிகளிலும் உதவுகின்றன. விலங்குகளை பாதுகாப்பது, அவை வேட்டையாடுவதை தடுப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அக்.,4ல் உலக விலங்குகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. விலங்குகள் நல ஆர்வலரான இத்தாலியின் ‘பிரான்சிஸ் ஆப் அசிசியின் நினைவு நாளை குறிப்பிடும் வகையில் இத்தினம். 1931ல் இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் தொடங்கப்பட்டது.விலங்குகள் வீடு, காட்டு விலங்குகள் என பிரிக்கப்படுகின்றன. பெரும்பாலானவை பாலுாட்டி வகையை சேர்ந்தவை. உலகில் பல்வேறு வகை விலங்குகள் உள்ளன. … Read more

இந்திய படைகளை வெளியேற்ற மாலத்தீவின் அடுத்த அதிபர் முடிவு| Next President of Maldives decides to withdraw Indian forces

மாலே ”மாலத்தீவில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு ராணுவம் உடனடியாக வெளியேற்றப்படும்,” என, அந்நாட்டின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள முகமது முயீஸ் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவம் என்ற பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக தன் கருத்தை, அவர் வெளிப்படுத்தி உள்ளார். தெற்காசிய நாடான மாலத்தீவு அதிபர் தேர்தலில், அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த முகமது முயீஸ் வெற்றி பெற்றதை அடுத்து, அந்நாட்டின் புதிய அதிபராக அவர் பொறுப்பேற்க உள்ளார். வெற்றிக்கு பிந்தைய முதல் பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது, ”மாலத்தீவில் முகாமிட்டுள்ள … Read more