கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் ரியல் எஸ்டேட்டுக்கு நிலம் தர மாட்டோம்: ஆஸி. குடும்பம் உறுதி

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி புறநகர் பகுதியில் அமைந்துள்ளது பாண்ட்ஸ் என்ற பகுதி. இங்கு ஜம்மித் என்பவர் குடும்பத்துக்கு சொந்தமாக 1.99 ஹெக்டேர் நிலம் உள்ளது. பசுமையாக காட்சியளிக்கும் இந்த நிலத்தின் நடுவே 5 படுக்கையறை வீட்டில் ஜம்மித் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்களின் நிலத்தை சுற்றியுள்ள இடங்கள் அனைத்தும் வீடுகளாக காட்சியளிக்கின்றன. அதற்கு நடுவே நிலத்துடன் காட்சியளிக்கும் ஒரே வீடு ஜம்மித் வீடுதான். இதனால் ஜம்மித் குடும்பத்தினர் நிலத்தின் மீது ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு … Read more

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளின்கனுடன் ஜெய்சங்கர் சந்திப்பு: கனடா பிரச்சினையில் மவுனம்

வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கனை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்த நிலையில் கனடா பிரச்சினை குறித்து இருவரும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மவுனம் காத்தது கவனம் பெற்றுள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் நிஜார் கொலையால் இந்தியா – கனடா இடையே மோதல் வலுத்துள்ள நிலையில் அமெரிக்கா சென்ற வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கனை சந்தித்தார். தனது அண்டை நாடான கனடாவும், தெற்காசியப் பிராந்தியத்தில் முக்கியமான நாடாக விளங்கும், அதுவும் … Read more

காணாமல் போன பூமியின் 8-வது கண்டம் 'ஜிலாண்டியா'… புவியியலாளர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்!

வெல்லிங்டன், தண்ணீரால் சூழப்பட்ட நமது பூமியின் நிலப்பரப்பு, மொத்தம் 7 கண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 8-வதாக ஒரு கண்டம் பூமியில் இருந்ததாகவும், ‘கடல்கோள்’ எனப்படும் ஒரு பேரழிவு காரணமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அந்த 8-வது கண்டம் தண்ணீரில் மூழ்கிவிட்டதாகவும் நீண்ட காலமாக புவியியல் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் 375 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் காணாமால் போன 8-வது கண்டம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக கடந்த 2017-ம் ஆண்டு விஞ்ஞானிகள் அறிவித்திருந்தனர். அந்த 8-வது கண்டத்தின் … Read more

அமெரிக்க வெளியுறவு மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு; கனடா விவகாரம் பற்றி ஆலோசனையா?

வாஷிங்டன், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த வாரம் ஐ.நா. பொது சபையின் கூட்டத்தொடர் நடந்தது. இதில், மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அந்நாட்டு வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கனை, மத்திய மந்திரி ஜெய்சங்கர் இன்று நேரில் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பில் கனடாவில் இந்த ஆண்டு ஜூனில் காலிஸ்தானிய பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. எனினும், அதுபற்றிய … Read more

உளவு பிரிவு அதிகாரியை கடித்து வைத்த அமெரிக்க அதிபரின் செல்ல நாய்; ஓராண்டில் 11-வது சம்பவம்

நியூயார்க், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பல்வேறு வளர்ப்பு பிராணிகளை தன்னுடன் வைத்திருக்கிறார். அவற்றில், மேஜர், கமாண்டர் என பெயரிடப்பட்ட செல்ல நாய்களும் அடங்கும். இவற்றில், அதிபராக பைடன் பதவியேற்றதும் அவருடைய செல்ல நாய் மேஜர், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டது. அது அப்போது வெள்ளை மாளிகையின் அதிகாரி ஒருவரை கடித்து விட்டது என கூறப்பட்டது. ஆனால், அதுபற்றிய கூடுதல் விவரங்கள் எதனை பற்றியும் உளவு பிரிவு அதிகாரிகளோ அல்லது வெள்ளை மாளிகையோ வெளியிடவில்லை. இந்நிலையில், பைடன் … Read more

அணு சக்தி கொள்கையை தீவிரப்படுத்த அரசியலமைப்பை திருத்திய கிம்ஜோங்உன்| Kim Jong Un amended the constitution to intensify nuclear power policy

பியோங்யாங்: அணு சக்தி கொள்கையை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக அரசியலமைப்பில் திருத்தங்களை வட கொரியா கொண்டுவந்துள்ளதாகக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியா அதிபராக கிம்ஜோங் உன் உள்ளார். அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் ரஷ்யா சென்ற வடகொரிய அதிபர், அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது ரஷ்ய ராணுவ தளவாடங்களை கிம்ஜோங் பார்வையிட்டார். இந்நிலையில் அணு ஆயுதங்களை உற்பத்தியை விரைவுபடுத்தும் விதமாக அணு … Read more

பாகிஸ்தானில் ஒரேநாளில் 159 பேருக்கு டெங்கு காய்ச்சல்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் கொசுக்கடி காரணமாக உண்டாகும் டெங்கு நோய் பாதிப்பு உயர்ந்து வருகிறது. நாட்டின் முக்கிய நகரங்களான ராவல்பிண்டி, முல்தான், பைசாலாபாத், குஜ்ரன்வாலாவில் டெங்கு பாதிப்பு நோயாளிகள் அதிகரித்து வருகிறார்கள். லாகூரில் மட்டும் இந்தாண்டு இதுவரை 1,511 பேர் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகினர். பாகிஸ்தானில் நேற்று ஒருநாள் மட்டும் புதிதாக 159 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இந்தாண்டு 3 ஆயிரத்து 849 ஆக உயர்ந்தது. நேற்று காலை … Read more

நாஜி வீரரை கவுரவித்த விவகாரம் மன்னிப்பு கோரிய கனடா பிரதமர்| Canadas Prime Minister Apologizes for Honoring Nazi Hero

ஒட்டவா,-நாஜி படைப் பிரிவின் முன்னாள் அதிகாரி கனடா பார்லிமென்டில் கவுரவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்காக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்பு கோரியுள்ளார். ஐரோப்பிய நாடான உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, கடந்த வாரம் வட அமெரிக்க நாடான கனடாவில் சுற்றுப் பயணம் செய்தார். அப்போது அவருடன், உக்ரேனியரான நாஜிப் படைகளின் முன்னாள் அதிகாரி யாரோஸ்லாவ் ஹன்கா, 98, என்பவரும் வந்திருந்தார். இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற ஹன்காவிற்கு கனடா பார்லிமென்டில் உரிய கவுரவம் அளிக்கப்பட்டது. ஜெலன்ஸ்கி, … Read more

காலநிலை மாற்றம் காரணமாக அமேசான் காடுகளில் வறட்சி அபாயம்

ரியோ டி ஜெனிரோ, உலகின் நுரையீரலாக அமேசான் காடுகள் செயல்படுகின்றன. ஜனத்தொகை வெளியிடும் கரியமில வாயுக்கள் உள்ளிட்ட நச்சுகளை சுத்திகரித்து ஆக்சிஜன் என்னும் உயிர்காற்றை உற்பத்தி செய்து வருகிறது. அமேசான் மலைக்காடுகளின் 60 சதவீதப்பகுதி தென் அமெரிக்கா நாடான பிரேசிலில் உள்ளது. இந்தநிலையில் காலநிலை மாற்றம் காரணமாக அமேசானில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் காட்டுத்தீ பரவியது. கட்டுங்கடங்காத காட்டுத்தீ காரணமாக காடுகள் பலத்த சேதத்திற்கு உள்ளாகின. மேலும் அவ்வப்போது பெய்யும் மழையும் பொய்த்துபோனது. அங்கு உள்ள … Read more

உலக இருதய தினம்| world heart day

ஒருநாளைக்கு சராசரியாக 1.15 லட்சம் முறை இருதயம் துடிக்கிறது. உடல் முழுவதும் ரத்தத்தை கொண்டு செல்லும் பணியை இருதயம் மேற்கொள்கிறது. இருதயத்தை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த செப். 29ல் உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. மாறிய உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, மது, புகையிலை பயன்பாடு, உடல் பருமன், நீரிழிவு, இரவுப்பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இருதய பாதிப்பு ஏற்படுகிறது. ‘இருதயத்தை பயன்படுத்துவோம்; இருதயத்தை தெரிந்து கொள்வோம்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. ஒருநாளைக்கு சராசரியாக 1.15 லட்சம் … Read more