கனடா பார்லிமென்ட் சபாநாயகர் ராஜினாமா| Speaker of Parliament of Canada resigns

ஓட்டோவா: நாஜி வீரருக்காக தலைவணங்கிய விவகாரத்தில் கடும் விமர்சனம் எழுந்ததையடுத்து, கனடா பாராளுமன்ற சபாநயகர் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் இந்தியா – கனடா இடையே உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, செப்.,22ம் தேதி கனடா சென்றார். அங்கு, கனடா பார்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஜெர்மனிய சர்வாதிகாரி அடால்ட் ஹிட்லரின் நாஜிப்படை வீரருக்கு ,பிரதமர் ட்ரூடோ உள்பட அனைவரும் எழுந்து … Read more

18 வயது வாலிபராக காட்சியளிக்க… 46 வயது கோடீஸ்வரர் பின்பற்றும் வழிமுறைகள்

லாஸ் ஏஞ்சல்ஸ், வயது முதிர்ச்சி அடையாமல் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை யாருக்கு இல்லை? ஆனால், இயற்கையாக வயது ஆக ஆக, முகம், கை, கால் என உடலின் மொத்த தோற்றமும் மாறுபட்டு, பொலிவு குறைகிறது. முதிர்ச்சியும், தளர்ச்சியும் ஏற்படுகிறது. ஆனால், தன்னுடைய வயது ஏறாமல் 18 வயது வாலிபராகவே தொடர்ந்து காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக கோடீஸ்வரர் ஒருவர் முயற்சி மேற்கொண்டு வருகிறார். பிரையன் ஜான்சன் (வயது 46) என்ற அந்நபர் இளமை தோற்றத்திற்காக ஆண்டுக்கு … Read more

சீன கப்பலுக்கு அனுமதி வழங்கவில்லை இந்தியாவின் பாதுகாப்பே முக்கியம் சொல்கிறார் இலங்கை வெளியுறவு அமைச்சர்| Sri Lankan Foreign Minister says Indias security is important, not allowing Chinese ship

நியூயார்க், ”இந்தியாவின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதால், சீன ஆய்வு கப்பலை எங்கள் நாட்டு துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை,” என, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்து உள்ளார். நம் அண்டை நாடான இலங்கையின் தென் பகுதியில் உள்ள அம்பந்தோட்டை துறைமுகத்தில், ஏவுகணைகள் மற்றும் செயற்கைக்கோள்களை கண்காணிக்கும், ‘யுவான் வாங் 5’ என்ற உளவு கப்பலை, கடந்த ஆண்டு ஆகஸ்டில் சீனா நிறுத்தியது; இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த உளவு … Read more

லிபியா அணை உடைப்பு: 8 பேர் கைது

திரிபோலி, இது குறித்து அந்நாட்டு சட்டத்துறை உயர் அதிகாரி அல்-சித்திக் அல்-சூரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புயல் காரணமாக டெர்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த இரு அணைகள் உடைந்தது தொடர்பாக, நீர்வளத் துறையைச் சேர்ந்த 8 அதிகாரிகளைக் கைது செய்து விசாரித்து வருகிறோம். அவர்களில் 7 பேர் முன்னாள் அதிகாரிகள் ஆவர். ஒருவர் தற்போது பணியாற்றி வருகிறார். தவறான மேலாண்மை, அலட்சியம், தவறான முடிவுகள் போன்றவற்றால் இந்தப் பேரிடருக்குக் காரணமாக இருந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. … Read more

தைவானில் தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலைக்கு ரூ.62 லட்சம் அபராதம்

தைபே நகரம், தைவானின் பிங்டங் மாகாணத்தில் உள்ள கோல்ப் பந்து தயாரிப்பு தொழிற்சாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் 4 தீயணைப்பு வீரர்கள் உள்பட 9 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து அதிபர் சாய்-இங்-வென் உள்பட முக்கிய அதிகாரிகள் அந்த தொழிற்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதில் அந்த தொழிற்சாலையில் ஆர்கானிக் பெராக்சைடு என்ற அபாயகரமான வேதிப்பொருளை அளவுக்கு அதிகமாக, இருப்பு வைத்திருந்தது தெரிய வந்தது. 100 டன் மட்டுமே வைக்க … Read more

நகோர்னோ-கராபக்: எரிவாயு நிலைய வெடிவிபத்தில் 20 பேர் பலி; 300 பேர் படுகாயம்

நாகோர்னோ-கராபக்: அசர்பைஜான் நாட்டின் ஒரு பகுதியான நகோர்னோ-கராபக் பகுதியில் எரிவாயு நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். 300 பேர் படுகாயமடைந்துள்ளனர். அசர்பைஜான் நாட்டின் ஓர் அங்கமாக உள்ள பகுதி நகோர்னோ-கராபக். எனினும், இந்தப் பகுதியை கடந்த 1994 முதல் தனி நாடாக அறிவித்து பிரிவினைவாதிகள் அந்தப் பகுதியை ஆட்சி செய்து வருகிறார்கள். பிரிந்த பிராந்தியத்தின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், எரிவாயு நிலைய வெடிவிபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 13 பேரின் … Read more

ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு 3வது தங்கம்| Asian Games: Indian rower wins silver in boat race

ஹாங்சு: சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் பாய்மர படகு போட்டியில் இந்திய வீராங்கனை நேஹா தாகூர் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். குதிரையேற்றத்தில் இந்திய அணி தங்கம் வென்றது. இது இந்தியாவுக்கு கிடைத்த 3வது தங்கம் ஆகும். சீனாவின் ஹாங்சுவில் ஆசிய விளையாட்டு 19வது சீசன் நடக்கிறது. இதில் இந்தியா நேற்று (செப்.,25) வரை 2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என 11 பதக்கங்களுடன் 6வது இடத்தில் இருந்தது. குதிரையேற்றம் இன்று நடந்த … Read more

ஹாங்சோ | விளையாட்டு அரங்கில் தவறவிடப்பட்ட மொபைல் போன் – தேடித் தந்த தன்னார்வலர்கள்!

ஹாங்சோ: 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதில் ஹாங் காங்கை சேர்ந்த 12 வயதான லியூ-டியான்-யி, செஸ் வீராங்கனை பங்கேற்றுள்ளார். போட்டியில் பங்கேற்ற சுமார் 10,000 இருக்கைகள் கொண்ட விளையாட்டு அரங்கில் அவர் தனது மொபைல் போனை தவறவிட்டுள்ளார். சுமார் 5.23 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள மைதானத்தில் போனை தேடும் பணி நடந்துள்ளது. அந்த போனை அவர் ஸ்விட்ச்-ஆஃப் செய்து வைத்துள்ளார். அதனால் அதை தேடி எடுப்பது சவாலான … Read more