” இந்தியா யானையை போன்றது ” – கனடா நிலை குறித்து அமெரிக்கா கருத்து| India is like an elephant; Canada is like an ant: Former Pentagon official comments

வாஷிங்டன்: தற்போதைய சூழலில் இந்தியாவிற்கு எதிரான பிரச்னையில் கனடா ஈடுபடுவது என்பது யானைக்கு எதிராக எறும்பு போருக்கு செல்வதை போன்றது என அமெரிக்காவின் பென்டகனைச் சேர்ந்த முன்னாள் அதிகாரி கூறியுள்ளார். பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் என்பவர் கூறியதாவது: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் இந்தியாவை விட கனடாவுக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி உள்ளது. இரு நண்பர்களில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற நெருக்கடி அமெரிக்காவுக்கு வராது என கருதுகிறேன். ஆனால், கனடா … Read more

ஐ.நா. பொது சபையில் காஷ்மீர் விவகாரங்களை எழுப்பிய பாகிஸ்தான்: இந்தியா கடும் கண்டனம்

நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபையின் 78-வது கூட்டத்தொடரின்போது, பாகிஸ்தானின் பிரதமரான (பொறுப்பு) அன்வாரூல் ஹக் காக்கர் பேசும்போது, இந்தியா உள்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதி மற்றும் ஆக்கப்பூர்வ தொடர்புகளையே விரும்புகிறது. பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையே அமைதி ஏற்பட காஷ்மீர் விவகாரம் முக்கியம் என்று பேசினார். காஷ்மீர் விவகாரங்களை பற்றி ஐ.நா. பொது சபையில் எழுப்பியதற்காக, பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில் ஐ.நா. பொது சபையின் … Read more

''பாகிஸ்தானின் பொருளாதார மாடல் தோல்வி அடைந்துவிட்டது'' – உலக வங்கி

வாஷிங்டன்: பாகிஸ்தானின் பொருளாதார மாடல் தோல்வி அடைந்துவிட்டதாகவும், கடந்த ஓராண்டில் மட்டும் 1.25 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே சென்றுவிட்டதாகவும் உலக வங்கி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானுக்கான உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் டோபியாஸ் ஹக் கூறியது: “கடந்த ஒரு நிதி ஆண்டில், பாகிஸ்தானில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 34.2 சதவீதமாக இருந்த வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை தற்போது 39.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. … Read more

தமிழ்ப் பத்திரிகை உலகின் வெப் ஆப்செட் அச்சு இயந்திர முன்னோடி தினமலர் | Dinamalar, the web offset printing press pioneer of the Tamil press world

தினமலர் நாளிதழின் சென்னைப் பதிப்பு நிகழ்த்திய முதல் முயற்சியே புரட்சிகரமாக அமைந்தது. சென்னையில் இருந்து வெளியான அனைத்துத் தமிழ் நாளிதழ்களும் ரோட்டரி மிஷினிலேயே அச்சடித்து வெளியாகின. எனவே அந்தப் பத்திரிகைகளில் படங்களும், எழுத்துக்களும் மங்கலாகவே இருந்தது. “இந்தக் குறையை தினமலர் சென்னைப் பதிப்பில் நீக்கிவிட வேண்டும். வாசகர்களுக்குத் தெளிவான அச்சுடன் கூடிய பத்திரிக்கையை வழங்க வேண்டும்” என்று தினமலர் நிர்வாகத்தினர் தீர்மானித்தனர். ‘பந்து’ அச்சு இயந்திரத்தை வாங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. விஷ்வ பந்து குப்தா என்ற காங்கிரஸ் … Read more

இந்தியா, கனடா… யாரை அமெரிக்கா ஆதரிக்கும்? – யுஎஸ் ராணுவ முன்னாள் அதிகாரி கருத்து

வாஷிங்டன்: காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை விவகாரத்தில் அமெரிக்கா யாருக்கு ஆதரவு தெரிவிக்கும் என்பது பற்றி அந்நாட்டு ராணுவத் தலைமையகமான பென்டகனின் முன்னாள் அதிகாரி சொன்ன கருத்து கவனம் பெற்றுள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கு காரணமாக இந்தியா – கனடா இடையே மோதல் வலுத்துள்ள நிலையில், அவருடைய கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது. ‘யானையுடன் எறும்பு மோதுவது போல் இந்தியாவுடன் கனடா மோதுகிறது’ என்று அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மைக்கேல் ரூபின் என்ற … Read more

காலிஸ்தான் பயங்கரவாதி கொலை குறித்த தகவல் இந்தியாவிடம் பகிர்வு: கனடா பிரதமர்| Intelligence On Terrorists Murder Shared With India Weeks Ago: Trudeau

ஒட்டாவா: ‛‛ கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில், இந்திய ஏஜென்ட்கள் பங்கு இருப்பது குறித்த தகவல்களை, கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்திய அரசிடம் பகிர்ந்து கொண்டோம்” என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். ஒட்டாவா நகரில் ஜஸ்டின் ட்ரூடோ நிருபர்களிடம் கூறியதாவது: நிஜ்ஜார் கொலையில், இந்திய ஏஜென்ட்களுக்கு உள்ள தொடர்பு குறித்த ஆதாரங்களை இந்திய அரசுடன் பல வாரங்களுக்கு முன்பே பகிர்ந்து கொண்டோம். திங்கட்கிழமை வெளிப்படையாக … Read more

காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை குறித்த தகவல்களைப் பல வாரங்களுக்கு முன்னரே இந்தியாவிடம் பகிர்ந்தோம் – கனடா பிரதமர்

ஒட்டாவா: காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக பல வாரங்களுக்கு முன்னரே இந்தியாவிடம் பகிர்ந்துவிட்டோம் என்று கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடாவைச் சேர்ந்த சீக்கியத் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் 18-ம் தேதி கனடாவில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், கனடாவில் உள்ள இந்திய … Read more

பாகிஸ்தான் தேர்தல் தேதியை அறிவிக்க வலியுறுத்தல்| Pakistan: Parties urge to announce election date

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் பொதுத்தேர்தல் நடக்கும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பார்லி., கலைக்கப்பட்டு 90 நாட்களில் தேர்தல் நடத்த சாத்தியம் இல்லை என்பதால் ஜனவரி மாதம் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் பொதுத் தேர்தலின் சரியான தேதியை அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் அந்த நாட்டு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் கடைசி … Read more