உலக செய்திகள்
பாகிஸ்தானில் வரும் ஜனவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு
இஸ்லமாபாத், பாகிஸ்தானில் வரும் ஜனவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அந்த நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் கலைக்கப்பட்டது.தற்போது பாகிஸ்தானில் காபந்து பிரதமராக எம்பி அன்வர்-உல்-ஹக் கக்கர் உள்ளார். இந்த நிலையில் , பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்டோபர் மாதம் தேர்தல் முதலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜனவரி மாதம் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தினத்தந்தி Related Tags : பாகிஸ்தான் பொதுத்தேர்தல்
பாகிஸ்தான்: வங்கியில் செலுத்த வைத்திருந்த ரூ.1.71 கோடி பணத்துடன் வேன் ஓட்டுநர் தப்பியோட்டம்
கராச்சி, பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் கொராங்கி பகுதியில் அவாமி காலனி என்ற இடத்தில் தொழில்பேட்டை பகுதியில் வங்கி ஒன்றில் செலுத்துவதற்காக வேன் ஒன்றில் பணம் கொண்டு செல்லப்பட்டது. அந்த வேனில் ரூ.1.71 கோடி (60 மில்லியன் பாகிஸ்தான் கரன்சி) பணம் இருந்துள்ளது. இந்த நிலையில், வேன் ஓட்டுநர் அந்த பணம் எல்லாவற்றையும் எடுத்து கொண்டு வேனை விட்டு விட்டு தப்பியோடி விட்டார். இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதில், எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. … Read more
காலிஸ்தான் விவகாரம்; இந்திய ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்த்த ஜஸ்டின் ட்ரூடோ!
ஜெனிவா, கனடாவில் காலீஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜர் கடந்த ஜூன் மாதம் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய அரசின் உளவாளிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இந்த விவகாரத்தில் கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த உயர் அதிகாரி பவன்குமார்ராய் என்பவரை கனடா அரசு நாட்டைவிட்டு வெளியேற்றியது. கனடா அரசின் இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இது … Read more
பேச்சு சுதந்திரம் பெயரில் வெறுப்பு குற்றங்கள்: கனடா ஆளுங்கட்சி எம்.பி., வேதனை| Hate crime allowed in name of…: Indo-Canadian MP slams party leader Trudeau
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஒட்டாவா: ‛‛ கனடாவில் பேச்சு சுதந்திரம் என்ற பெயரில், ஹிந்துக்களை குறி வைத்து வெறுப்பு குற்றங்கள் நடக்கிறது ” என அந்நாட்டு ஆளுங்கட்சி எம்.பி.,யான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சந்திரா ஆர்யா கூறியுள்ளார். கனடாவை ஆளும் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சியை சேர்ந்த சந்திரா ஆர்யா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த சில நாட்களுக்கு முன்பு காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களும், சீக்கியர்களுக்கான நீதி என்ற அமைப்பை சேர்ந்தவர்களும், … Read more
கனடாவில் மற்றொரு காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டு கொலை
டொரண்டோ, கனடாவில் குரு நானக் சீக்கிய குருத்வாராவின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்தியா மற்றும் கனடாவுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனால், இரு நாடுகளும் அந்தந்த நாடுகளின் தூதர்களை வெளியேறும்படி உத்தரவிட்டு உள்ளது. இந்நிலையில், கனடாவில் மற்றொரு காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டு உள்ளார். 2 கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் சுக்தூல் சிங் என்ற காலிஸ்தான் பயங்கரவாதி கொல்லப்பட்டார். அவர், 2017-ம் ஆண்டு கனடாவுக்கு போலி … Read more
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்த இங்கிலாந்து
நியூயார்க், இங்கிலாந்து நாட்டின் வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளெவர்லி ஐ.நா.வின் வெளிநாட்டு உறவுகளுக்கான கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என கூறினார். அவர் தொடக்க உரையாக பேசும்போது, உலகம் நமக்கு முன் வைத்துள்ள சவால்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. ஆனால், நேர்மறையான வளர்ச்சி காண்பதற்கான வாய்ப்பும் நம்மிடம் உள்ளது. நீடித்த வளர்ச்சி இலக்குகளை நாம் மீண்டும் அடைவதற்கான வாய்ப்பும் நமக்கு உள்ளது. இதற்கு பொருள் என்னவெனில், நம்முடைய … Read more
பணக்காரர்களுக்கு அதிக வரி விதிப்பீர்: பாகிஸ்தான் பிரதமரிடம் ஐஎம்எஃப் வலியுறுத்தல்
நியூயார்க்: வசதி படைத்தவர்களுக்கு அதிக வரியை விதிக்குமாறு பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் அன்வாரூல் ஹக் காகரிடம், சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) வலியுறுத்தியுள்ளது. ஐநா தலைமையகத்தில் நடைபெறும் பருவநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றுள்ள பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் அன்வாரூல் ஹக் காகர், முன்னதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவாவை சந்தித்தார். அப்போது, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிபந்தனைகளால் ஆட்சி செய்வதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து அவர், கிறிஸ்டியானா ஜார்ஜியாவுக்கு … Read more
அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசு கட்சி வேட்பாளர் கருத்து கணிப்பு: 2வது இடத்தில் இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி| Vivek Ramaswamy Now 2nd In Race For US President Candidate Pick, Trump 1st
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்காவில் 2024ம் ஆண்டு இறுதியில் நடக்க உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் குடியரசு கட்சியின் வேட்பாளர் குறித்து, நடந்த கருத்து கணிப்பில், இரண்டாவது இடத்தை இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமியும், முதல் இடத்தை அமெரிக்கா முன்னாள் அதிபர் டிரம்பும் பிடித்துள்ளனர். சமீப காலமாக விவேக் ராமசாமிக்கு குடியரசு கட்சியினரிடையே ஆதரவு உச்சம் தொட்டும் வருகிறது. அமெரிக்காவில் அடுத்தாண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலுக்காக ஜனநாயக கட்சி சார்பில், … Read more