பிரேசிலில் விமான விபத்து – சுற்றுலா பயணிகள் 14 பேர் பலி

பிரேசிலா, தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று பிரேசில். அந்நாட்டின் அமேசான் மாகாணம் மனஸ் பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் 14 பேருடன் சிறிய ரக விமானம் பார்சிலோஸ் நோக்கி புறப்பட்டது. கனமழை பெய்துகொண்டிருந்த நிலையில் விமானம் பார்சிலோசில் தரையிறங்கியபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த சுற்றுலா பயணிகள் 14 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

நேபாளத்தின் பிரசித்திபெற்ற பசுபதிநாத் கோவிலில் புகைப்படம் எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்

அண்டை நாடான நேபாளத்தில் உலக பிரசித்தி பெற்ற பசுபதிநாத் கோவில் பாக்மதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவில் வளாகத்துக்குள் புகைப்படம், வீடியோ எடுப்பது ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதனை மீறி கோவிலுக்கு வரும் இளைஞர்கள் சிலர் ஆர்வமிகுதியில் புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். எனவே இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் இனிமேல் ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் … Read more

ஆசிய கோப்பை பைனல்: ‛டாஸ் வென்று இலங்கை அணி ‛பேட்டிங்| Asia Cup Final: Sri Lanka win the toss and bat

கொழும்பு: இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் பைனலில் ‛டாஸ்’ வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) இலங்கையில் நடக்கிறது. ‛சூப்பர்-4′ சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடித்த, இந்தியா, இலங்கை அணிகள் பைனலுக்கு முன்னேறின. இன்று (செப்.,17) கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடக்கும் பைனலில் இரு அணிகளும் மோதுகின்றன. ‛டாஸ்’ வென்ற இலங்கை அணி ‛பேட்டிங்’ தேர்வு செய்தது. பைனலில் வெற்றிப்பெற்று எட்டாவது முறையாக ஆசிய … Read more

துருக்கியில் அதிபரின் சிறப்பு ஆலோசகர்கள் 15 பேர் ராஜினாமா

துருக்கியில் 2014-ம் ஆண்டு முதல் அதிபர் தாயீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் கடந்த ஜூன் மாதம் நடந்த தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக அதிபராக பொறுப்பேற்றார். இதனையடுத்து அங்கு புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு மந்திரி பதவி வகிக்காத 90 சதவீதம் பேருக்கு இந்த முறை புதிதாக பொறுப்பு வழங்கப்பட்டது. இதனால் முந்தைய அமைச்சரவையில் இருந்த பலரும் தற்போது அதிபரின் சிறப்பு ஆலோசகர்களாக இருந்து வருகின்றனர். எனினும் அமைச்சரவையில் பதவி வழங்காததால் … Read more

பாகிஸ்தானில் திருமண கோஷ்டி சென்ற வேன் மீது லாரி மோதி மணமகன் உள்பட 9 பேர் பலி

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் பாபர்லோய் பகுதியில் இருந்து ஒரு மினிவேன் புறப்பட்டது. அதில் திருமண விழாவுக்காக மணமகன் வீட்டார் சென்று கொண்டிருந்தனர். கோட்கியில் உள்ள சுக்கூர்-முல்தான் நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறி எதிரே வேகமாக வந்த ஒரு லாரி மீது மோதியது. இந்த கோர விபத்தில் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த 6 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர … Read more

அமெரிக்காவில் விபத்தில் உயிரிழந்த இந்திய மாணவிக்கு பட்டம்; பல்கலைகழகம் முடிவு

சியாட்டில், அமெரிக்காவின் நார்த்ஈஸ்ட் பல்கலை கழகத்தில் படித்து வந்த மாணவி ஜானவி கண்டுலா (வயது 23). ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருந்து படிப்பதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரியில் தெரு ஒன்றை கடந்து செல்லும்போது, சியாட்டில் நகர போலீஸ் வாகனம் ஒன்று அவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இதில், அவர் உயிரிழந்து உள்ளார். இந்நிலையில், அந்த பல்கலை கழகத்தின் வேந்தர் கென்னத் ஹென்டர்சன் கூறும்போது, கண்டுலா மறைவை அடுத்து, அவருக்கு பட்டமளிக்க … Read more

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை ரூ.331 ஆக உயர்வு: டீசல் விலை ரூ.329

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் பெட்ரோல், டீசல் எரிபொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியின்போது அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவருடைய ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்நாட்டின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் ஆட்சி பொறுப்பேற்றார். இந்நிலையில் கடந்த மாதம் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதனிடையே பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு பெட்ரோல், டீசல் … Read more

பிரிட்டன் அரசு – டாடா ஸ்டீல் இடையே ரூ.12,800 கோடி மதிப்பில் ஒப்பந்தம்: உருக்கு துறையில் முக்கிய நாள் என ரிஷி சுனக் தகவல்

லண்டன்: பிரிட்டன் அரசு மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனம் இடையே 1.25 பில்லியன் பவுண்ட் (ரூ.12,800 கோடி) முதலீட்டு ஒப்பந்தம் நேற்று முன்தினம் கையெழுத்தானது. பிரிட்டனின் சவுத் வேல்ஸ் பிராந்தியத்தில் போர்ட் டால்போல்ட் பகுதியில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் உருக்கு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 8,000 பேர் பணியாற்றி வருகின்றனர். கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க அந்த ஆலையை நவீனப்படுத்த வேண்டிய சூழலில் டாடா ஸ்டீல் நிறுவனம் உள்ளது. இதற்காக அந்நிறுவனம் பிரிட்டன் அரசின் … Read more