உலக அரசியலில் இந்திய வம்சாவளி தலைவர்கள் கோலோச்சுகின்றனர்! | Leaders of Indian origin are competing in world politics!

சிங்கப்பூர்-உலகின் பல்வேறு நாடுகளில் இந்திய வம்சாவளியினர் அரசியலில் கோலோச்சுவதும், அதிபர், பிரதமர், அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பதவிகளிலும் இருப்பதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தப் பட்டியலில் நேற்று முன்தினம் இணைந்துள்ளார் சிங்கப்பூர் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னம். பல நாடுகளில் முக்கிய பதவிகளில் உள்ள இந்திய வம்சாவளி யினர் தொடர்பான பட்டியல் ஒன்று சமீபத்தில் தயாரிக்கப்பட்டது. இதன்படி, இந்திய வம்சாவளியினர் 200க்கும் மேற்பட்டோர், 15க்கும் மேற்பட்ட நாடுகளில் முக்கிய அரசியல் பதவிகளில் உள்ளனர். இதில், 60 … Read more

கடலில் மூழ்கிய கப்பல்களின் வரலாறு| கடலில் மூழ்கிய கப்பல்களின் வரலாறு

அட்லாண்டிக் கடலில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கி இருக்கும் டைட்டானிக் கப்பலை சமீபத்தில் பார்க்க சென்ற ‘டைடன்’ நீர்மூழ்கி வெடித்துச் சிதறி ஐந்து பேரும் பலியாகினர். உலக வரலாற்றில் டைட்டானிக் கப்பலை விட அதிக ஆழத்தில் சில கப்பல்கள் மூழ்கி உள்ளன. இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் – அமெரிக்காவின் நியூயார்க் புறப்பட்ட ‘டைட்டானிக்’ சொகுசு கப்பல் 1912 ஏப். 15ல் வட அட்லாண்டிக் கடலின் பனிப்பாறையில் மோதி உடைந்து கடலில் மூழ்கியது. இதில் 1500 பேர் பலியாகினர். இதன் … Read more

சிலி: பஸ் மீது ரெயில் மோதி கோர விபத்து – 7 பேர் பலி

சிடகாங், தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. இந்நாட்டின் கான்செப்சியொன் மாகாணம் சன் பெட்ரொ டி லா பாஹ நகரில் நேற்று இரவு 14 பயணிகளுடன் பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்நகரின் அருகே உள்ள ரெயில்வே தண்டவாள கிராசிங்கை பஸ் கடக்க முயற்சித்தது. அப்போது, வேகமாக வந்த ரெயில் பஸ் மீது மோதியது. மேலும், தண்டவாளத்தை கடக்க முயன்ற பஸ்சை வேகமாக வந்த ரெயில் சில மீட்டர்கள் தூரம் இழுத்து சென்றது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த … Read more

"நிலவின் மடியில்".. வேலையை முடித்துக் கொண்டு தூங்கச் சென்ற ரோவர்.. "Don't Disturb Me"

பெங்களூர்: நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி பல்வேறு ஆய்வுகளை செய்து பூமிக்கு அனுப்பிய ரோவர் கருவி, தனது வேலை முடிந்ததால் ஸ்லீப் மோடுக்கு (Sleep Mode) சென்றுவிட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. உலகில் வேறு எந்த நாடுகளும் செய்யாத சாதனையை கடந்த மாதம் 23-ம் தேதி இந்தியாவின் இஸ்ரோ செய்தது. இதுவரை எந்த வல்லரசு நாடுகளாலும் செல்ல முடியாத நிலவின் தென் துருவத்திற்கு சந்திரயான் 3 திட்டத்தின் கீழ் ரோவர் கருவியை வெற்றிகரமாக இறக்கினர் இஸ்ரோ விஞ்ஞானிகள். முதலில் விண்கலத்தில் … Read more

பிளாஸ்டிக் சர்ஜரியால் பக்கவிளைவு: நடிகை உயிரிழப்பு| Plastic surgery side effect: Actress dies

பியூனஸ்ஏர்ஸ்: பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை செய்து கொண்டதில் ஏற்பட்ட பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டிருந்த அர்ஜென்டினா நாட்டு நடிகை சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் நடந்துள்ளது. அர்ஜென்டினா நாட்டின் பிரபலமான நடிகையாகவும், டி.வி. ஷோக்களில் பங்கேற்றும் வந்தவர் சில்வைனா லுனா,42, கடந்த 2011ம் ஆண்டு தன் பின் அழகை பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை செய்து கொண்டார். நாளடைவில் ஏற்பட்ட பல்வேறு பக்கவிளைவுகள் காரணமாக சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. தொடர்ந்து உடல்உறுப்புகள் பாதிக்கப்பட்டன. கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த … Read more

நிலவின் மேற்பரப்பில் 'லூனா-25' விழுந்து 10 மீட்டர் அளவில் பள்ளம்: நாசா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்…!

வாஷிங்டன், நிலவின் தென் துருவ பகுதியை ஆராய சந்திரயான்-3 விண்கலத்தை இந்தியா அனுப்பியதற்கு போட்டியாக ரஷியா லூனா-25 விண்கலத்தை அனுப்பியது. சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்குவதற்கு முன்பாக லூனா-25 விண்கலத்தை தரையிறக்க ரஷிய விண்வெளி நிறுவனம் தீவிரமாக செயல்பட்டது. புவி மற்றும் நிலவின் சுற்றுவட்ட பாதைகளை அதிவேகமாக கடந்து சென்ற லூனா-25 விண்கலத்தை தரையிறக்குவதற்கு முந்தைய சுற்றுவட்டபாதைக்குள் கடந்த மாதம் 19-ம் தேதி நுழையும் போது கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்து நொறுங்கியது. இந்த லூனா-25 விண்கலம் … Read more

பிரதமர் மோடியை சந்திக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் – வெள்ளைமாளிகை

வாஷிங்டன், அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு ஜி20 என அழைக்கப்படுகிறது. இதனிடையே, ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு வரும் 9 மற்றும் 10ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தியா தலைமையில் நடைபெற உள்ள ஜி20 உச்சிமாநாட்டில் … Read more

உயிரோடு இருக்கிறாரா வாக்கனர் படை தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸின்… வீடியோவால் பரபரப்பு!

ரஷ்யாவின் தனியார் ராணுவ படையான வாக்னர் படையின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸின். உக்ரைன் மீதான போரில் வாக்னர் படை ரஷ்யாவுக்கு பக்கபலமாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் ரஷ்ய அரசுக்கும் வாக்னர் படை தலைவரான யெவ்ஜெனி பிரிகோஸினுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ரஷ்ய அரசு வாக்னர் படை தலைவர் பிரிகோஸின் மற்றும் அவரது குழுவினர் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்தது. இதனால் ஆத்திரமடைந்த பிரிகோஸின் தனது படையுடன் ரஷ்ய அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டார். தலைநகர் … Read more