வானத்தில் டாக்ஸி ஓட்டும் காலம் வந்தாச்சு! 2026 முதல் அமல்..எந்த ரூட்டில் பயணிக்கலாம்?

Dubai Air Taxi Test : துபாயில் முதன்முறையாக வான்வழி டாக்சி அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான டெஸ்ட், வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்து போட்டுவிட்டேன்: டொனால்ட் ட்ரம்ப்

வாஷிங்டன்: வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், பல்வேறு நாடுகளுக்கான இறக்குமதி வரியை கடுமையாக உயர்த்தினார். இதற்கு அனைத்து நாடுகளும் கடும் அதிருப்தி தெரிவித்தன. இதையடுத்து, பல்வேறு விதமான வரி விகிதங்களை மாற்றி 90 நாட்களுக்கு தற்காலிக அடிப்படை வரியாக 10%-ஐ நிர்ணயித்து ட்ரம்ப் உத்தரவிட்டார். இந்த காலக்கெடு முடிவடைவதற்குள் அமெரிக்கா உடன் … Read more

பிரதமர் மோடிக்கு அர்ஜென்டினாவில் பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு

பியூனோஸ் அயர்ஸ், பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன் ஒரு பகுதியாக கானா மற்றும் டிரினிடாட் அண்டு டுபாகோ ஆகிய 2 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட அவர் அந்த இரு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு 2 நாடுகளிலும் அந்நாடுகளின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிலையில், டிரினிடாட் அண்டு டுபாகோ நாட்டில் பிரதமர் மோடியின் பயணம் … Read more

அமெரிக்கா: தொடர் மழை, வெள்ளத்திற்கு 13 பேர் பலி

நியூயார்க், அமெரிக்காவின் தெற்கு-மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. குவாடலூப் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, நகரங்களுக்குள் புகுந்தது. இதில் பலர் சிக்கி கொண்டனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 13 பேர் வரை பலியானார்கள். இந்நிலையில், 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கோடை கால முகாமுக்கு சென்றுள்ளனர். அவர்களில், 20-க்கும் … Read more

பிரதமர் மோடிக்கு அர்ஜென்டினாவில் உற்சாக வரவேற்பு

பியூனஸ் அயர்ஸ்: இரண்டு நாள் பயணமாக அர்ஜென்டினா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்குள்ள இந்தியர்கள் தேசியக் கொடியுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், அரசு சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்திய நேரப்படி இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி பியூனஸ் அயர்ஸ் சென்றடைந்தார். பிரதமரை வரவேற்க திரண்டிருந்த இந்தியர்கள், இந்திய தேசிய கொடிகளை கைகளில் ஏந்தியும், பாரம்பரிய நடனமாடியும் அவரை வரவேற்றனர். தனது அர்ஜென்டினா வருகை குறித்து எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்ட பிரதமர் மோடி, … Read more

விண்வெளியில் பூமியை 113 முறை சுற்றி வர திட்டம்: ஷுபன்ஷு சுக்லா 50 லட்சம் கி.மீ. பயணம்

புதுடெல்லி: விண்வெளியில் 50 லட்சம் கி.மீ. தூரத்துக்கு இந்திய விண்வெளி வீரரும், கேப்டனுமான ஷுபன்ஷு சுக்லா பயணம் செய்துள்ளார். அமெரிக்காவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் கடந்த மாதம் 25-ம் தேதி பால்கன் 9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏவப்பட்டது. இதில் 14 நாட்கள் அறிவியல் பயணத்துக்காக, இந்திய விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர். அங்கு பயிர்களை விளைவிப்பது … Read more

‘பிஹார் மாநிலத்தின் மகள்’ – டிரினிடாட் பிரதமர் கம்லாவுக்கு மோடி பாராட்டு

போர்ட் ஆப் ஸ்பெயின்: டிரினி​டாட் பிரதமர் கம்லா பெர்​ஷத், பிஹார் மாநிலத்​தின் மகள் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்​டி​யுள்​ளார். பிரேசிலில் பிரிக்ஸ் மாநாடு நடை​பெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்​கேற்​கிறார். இதை முன்​னிட்டு கானா, டிரினி​டாட் அண்ட் டொபாகோ, அர்​ஜென்​டி​னா, நமீபியா ஆகிய 4 நாடு​களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்​கட்​ட​மாக கானா நாட்​டுக்கு கடந்த 2,3-ம் தேதிகளில் சுற்​றுப் பயணம் செய்​தார். கானா பயணத்தை முடித்​துக் கொண்டு டிரினி​டாட் அண்ட் டொபாகோ நாட்​டுக்கு பிரதமர் மோடி … Read more

புதிய தலாய் லாமா தேர்வு செய்யப்படுவது எப்படி? – ஒரு சுருக்கமான தெளிவுப் பார்வை

பவுத்த மதத் தலைவர் என்றவுடன் சாமானிய இந்தியர்களின் மனங்களில் சட்டென நினைவுக்கு வருபவராக திபெத்திய பவுத்த மதத் தலைவரான தலாய் லாமா இருக்கிறார். தீவிர சீன எதிர்ப்பாளரான அவர், இந்தியாவின் தர்மாசாலாவில் தஞ்சமடைந்திலிருந்தே எழுப்பும் திபெத் விடுதலைக்கான குரல் உலகெங்கும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆன்மிகம், அரசியல் என்று சமமாகப் பேசும் அவரது வீச்சு, அவர் மீதான ஊடக வெளிச்சம் எப்போதும் குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளும். அவரது ஆன்மிக சொற்பொழிவுகளைக் கேட்பதற்காக மட்டுமே பல்துறை பிரபலங்களும் தர்மசாலாவுக்கு … Read more

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்

வாஷிங்டன், உக்ரைன் -ரஷியா இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே, அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷியா உடன்படவில்லை என்றால் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்தது. இதனிடையே ரஷியாவிடம் இருந்து இந்தியா பெருமளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 500 சதவீதம் வரி … Read more

‘மகா கும்பமேளா புனிதநீர், ராமர் கோயில் நினைவுச் சின்னம்’ – டிரினிடாட் and டொபாகோ பிரதமருக்கு மோடி பரிசு

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: டிரினிடாட்&டொபாகோ நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசருக்கு மகாகும்பமேளாவின் புனித நீரையும், ராமர் கோயிலின் மாதிரி நினைவுச் சின்னத்தையும் பரிசாக வழங்கினார். அரசுமுறை பயணமாக டிரினிடாட் & டொபாகோ நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடியை, பியார்கோ சர்வதேச விமான நிலையத்தில் அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பிரதமர் நரேந்திர மோடி டிரினிடாட் & டொபாகோ நாட்டுக்கு … Read more