Bus Overturns Accident: 18 killed | பஸ் கவிழ்ந்து விபத்து: 18 பேர் உயிரிழப்பு

மெக்சிகோ சிட்டி: மேற்கு மெக்சிகோவில் பயணிகள் பஸ் ஒன்று அமெரிக்க எல்லையில் உள்ள டிஜுவானா நகருக்குச் சென்று கொண்டு இருந்தது. பஸ்சில் 42 பயணிகள் இருந்தனர். நெடுஞ்சாலையில் பர்ரான்கா பிளாங்கா அருகே சென்று கொண்டு இருந்தபோது பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. சம்பவ இடத்திலேயே 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 20பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மெக்சிகோ சிட்டி: மேற்கு மெக்சிகோவில் பயணிகள் பஸ் ஒன்று அமெரிக்க எல்லையில் உள்ள டிஜுவானா நகருக்குச் சென்று கொண்டு இருந்தது. … Read more

டொனால்ட் டிரம்ப் குற்றமற்றவர், ஆகஸ்ட் 28ஆம் தேதி அடுத்த விசாரணை – நீதிமன்றம் அதிரடி

வாஷிங்டன், 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக எழுந்த புகார் குறித்து ஆய்வு செய்த நீதிபதிகள் குழு, டிரம்ப் மீது வழக்கு தொடுக்க அனுமதி அளித்தது. அதன்பேரில் நாட்டை ஏமாற்ற முயன்றது, அதிகாரிகளின் நடவடிக்கைக்கு இடையூறு செய்ய முயன்றது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்வதை நிறுத்துவதற்கு டிரம்ப் சதி செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு டிரம்புக்கு வாஷிங்டன் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இது … Read more

கூகுள் கொண்டாடும் ஆளுமை… யார் இந்த அல்டினா ஷினாசி? 

அல்டினா ஷினாசி (Altina Schinasi). இவருடைய 116-வது பிறந்தநாளுக்காக இன்று கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த அல்டினா ஷினாசி சிற்பி, ஓவியர், திரைப்படத் தயாரிப்பாளர், தொழிலதிபர், டிசைனர் என்ற பன்முகத் திறமைகளைக் கொண்டவர். பெண்கள் விரும்பி அணியும் கேட்-ஐ கண்ணாடியை வடிவமைத்தவர். இது தவிர ஏராளமான ஆவணப் படங்களையும், பல்வேறு கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தியவர் அல்டினா. மேலும் புகழ்பெற்ற ஓவியர்களான சல்வடோர் டாலி மற்றும் ஜார்ஜ் க்ரோஸ் ஆகியோரிடம் பயிற்சி பெற்றவர். பாரிஸில் … Read more

China plans to limit smartphone usage by children to two hours | அலைபேசி பயன்படுத்த சீன குழந்தைகளுக்கு கட்டுப்பாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: சீனாவில் 16 – 18 வயது வரையிலான சிறுவர் – சிறுமியர் நாள் ஒன்றுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே ‘ஸ்மார்ட்போன்’களை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கும் வரைவு வழிகாட்டுதல்களை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. உலகம் முழுதும் 18 வயதுக்கு குறைவான குழந்தைகள் ‘ஸ்மார்ட் போன்’களை பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் கிடைக்கும் ‘ஆன்லைன்’ விளையாட்டுக்கள் ‘ஷார்ட் வீடியோ’ எனப்படும் குறுங்காணொளிகள் குழந்தைகளை அடிமையாக்கி வருகின்றன. இது … Read more

"இனி வெயில் அடித்தாலும் கவலை இல்லை".. உலக கவனத்தை ஈர்த்த ஜப்பான்

டோக்கியோ, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோடைக்காலம் மோசமான வெப்பநிலையை உமிழ்கிறது. 35 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெயில் பதிவாக. வெப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழியை தேடி திரிகிறார்கள். அப்படி வாடி வதங்குபவர்களுக்கு வரபிரசாதமாக வந்திருக்கிறது மினி ஃபேன். ஏதோ நம்ம ஊரில் சிறார்கள் விளையாடும் கிலுகிலுப்பை போல் காட்சியளிக்கும் மினி பேனை வைத்துக் கொண்டே சாலையில் நடக்கிறார்கள்… எப்பா வெயில் தாங்க முடியவில்லை என வேதனை தெரிவிக்கும் டோக்கியோ வாசிகள், இப்போது எல்லாம் மினி பேனும், தண்ணீர் … Read more

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தவருக்கு உபசரிப்பு: ஒரே நாளில் சர்வதேச கவனம் பெற்ற மூதாட்டி

ப்ரூன்ஸ்விக்: தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கத்தியைக் காட்டி மிரட்டியவரின் பசியை போக்கிய அமெரிக்க மூதாட்டி குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் மெய்ன் மாகாணத்தில் உள்ள ப்ரூன்ஸ்விக் நகரத்தைச் சேர்ந்தவர் மார்ஜோரி பெர்கின்ஸ். 87 வயது மூதாட்டியான பெர்கின்ஸ் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த ஜூலை 26 அன்று பெர்கின்ஸ் தனது வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவு 2 மணியளவில் இளைஞர் ஒருவர் பெர்கின்ஸின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். … Read more

இலங்கையில் உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாய் செல்லுபடியாகாது

கொழும்பு, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கடந்த மாதம் தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, இலங்கையில் இந்திய ரூபாயை பொது பணமாக பயன்படுத்த தயாராக இருப்பதாக கூறியிருந்தார். அதன்பிறகு அரசு முறை பயணமாக இந்திய வந்த ரணில் விக்ரமசிங்கே பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த பயணத்தின்போது இருநாடுகளுக்கு இடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனிடையே ரணில் விக்ரமசிங்கேவின் இந்திய பயணத்துக்கு பிறகு, இலங்கையில் அமெரிக்க டாலர், சீனாவின் யென் ஆகியவற்றை போல இந்திய … Read more

ரஷியாவில் இருந்து முதன்முறையாக நிலவின் தென்துருவத்துக்கு செல்லும் லூனா-25

லூனா-24 என்பது சோவியத் ரஷியாவின் விண்வெளி ஆய்வு மையத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டமாகும். இது கடந்த 1976-ம் ஆண்டு நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது. பின்னர் வெற்றிகரமாக நிலவில் இருந்து 176 கிராம் மண்ணுடன் அதன் காப்ஸ்யூல் பூமிக்கு திரும்பியது. இந்தநிலையில் லூனா-25 என்ற பெயரில் நிலவுக்கு மற்றொரு தானியங்கி நிலையத்தை வருகிற 11-ந் தேதி ரஷியா சோயுஸ் 2.1 பி என்ற ராக்கெட் மூலம் அனுப்ப உள்ளது. இந்த திட்டம் வெற்றி பெறும்போது நிலவின் … Read more

மெக்சிகோவில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பஸ் மீது ரெயில் மோதலில் 7 பேர் பலி

தொழிற்சாலை பணியாளர்கள் வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் குவெரேடாரோ மாகாணத்தில் பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் அங்குள்ள தொழிற்சாலை பணியாளர்கள் பலர் வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எல் மார்க்ஸ்வெஸ் நகரில் உள்ள ரெயில் தண்டவாளம் அருகே பஸ் சென்றது. அதேசமயம் அந்த தண்டவாளத்திலும் ரெயில் வந்து கொண்டிருந்தது. பஸ் தூக்கி வீசப்பட்டது ஆனால் தண்டவாளம் அருகே சிக்னல், கேட் எதுவும் இல்லாததால் அந்த ரெயில் வந்தது பஸ் டிரைவருக்கு தெரியவில்லை. எனவே … Read more