அமெரிக்காவின் வெடிமருந்து கிடங்காக மாறிய தைவான்: சீனா குற்றச்சாட்டு

பீஜிங், சீனாவில் நடந்த உள்நாட்டு போரால் கடந்த 1949-ம் ஆண்டு தைவான் தனி நாடாக பிரிந்தது. ஆனால் தைவானை தங்களது நாட்டுடன் இணைக்க சீனா தீவிர முனைப்பு காட்டுகிறது. அதன்ஒருபகுதியாக தைவான் எல்லையில் அடிக்கடி போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் தைவானுடன் வேறு எந்த நாடுகளும் அதிகாரப்பூர்வ உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என சீனா எச்சரித்துள்ளது. ஆனால் அமெரிக்கா மட்டும் துவக்கம் முதலே தைவானுக்கு ஆதரவாக குரல்கொடுத்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் … Read more

39 killed in suicide attack in Pakistan | தற்கொலை படை தாக்குதல் பாக்.,கில் 39 பேர் உயிரிழப்பு

பெஷாவர்,-பாகிஸ்தானில் அரசியல் கட்சி கூட்டத் தில் தற்கொலை படையினர் நடத்திய தற்கொலை படை தாக்குதலில், 39 பேர் கொல்லப்பட்டனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் நான்காவது பெரிய மாகாணமான கைபர் பக்துன்குவாவில் பஜவுர் மாவட்டம் உள்ளது. இங்குள்ள கார் டெசில் பகுதியில், ஜே.யு.ஐ.எப்., எனப்படும் ஜாமியத் உலமா – இ – இஸ்லாம் பசல் கட்சி சார்பில் நேற்று பொதுக் கூட்டம் நடந்தது. அந்த கட்சியின் முக்கிய தலைவர்கள், ஆதரவாளர்கள் என, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கூட்டத்தில் … Read more

சீனாவில் புயலால் ரூ.493 கோடி சேதம்

பீஜிங், சீனாவின் பல மாகாணங்களில் டோக்சுரி புயல் தாக்கும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி அங்குள்ள புஜியான் மாகாண கடற்கரை அருகே புயல் கரையை கடந்தது. அப்போது பெய்த கனமழை காரணமாக அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த புயல் காரணமாக அங்கு 178 வீடுகள் பலத்த சேதமடைந்தன. சுமார் 6 ஆயிரம் எக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்தது. இதன்மூலம் அங்கு ரூ.493 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டு … Read more

Burnt musical instruments in Afghanistan | ஆப்கனில் எரிக்கப்பட்ட இசை கருவிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஹெராத்,-ஆப்கானிஸ்தானில், பறிமுதல் செய்யப்பட்ட இசைக் கருவிகள் மற்றும் உபகரணங்களை, தலிபான் அமைப்பினர் தீயிட்டு எரித்தனர். தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், 20 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து, 2021 ஆகஸ்டில் ஆட்சி அதிகாரத்தை, தலிபான் பயங்கரவாத அமைப்பினர் கைப்பற்றினர். இதையடுத்து, பெண்கள் தனியாக வெளியே செல்லவும், பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லவும், அழகு நிலையங்களில் பணிபுரியவும் தடை விதிக்கப்பட்டது. இதேபோல் இசை மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. … Read more

பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு

கராச்சி, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜார் மாவட்டத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சி கூட்டம் ஒன்று நடைபெற்றது. ஜே.யு.ஐ.எப். அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது அங்கே எதிர்பாராதவிதமாக திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த பயங்கர குண்டுவெடிப்பில் குறைந்தது 35 பேர் உயிரிழந்ததாகவும், 150 பேர் படுகாயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தசம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாவும், … Read more

The Bangladeshi capital is the battleground of opposition clashes with the police | போலீசாருடன் எதிர்க்கட்சியினர் மோதல் போர்க்களமான வங்கதேச தலைநகர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டாக்கா: ,-வங்கதேசத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டத்தை போலீசார் தடுத்தி நிறுத்தியபோது, இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நம் அண்டை நாடான வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி ஆட்சி நடக்கிறது. அடுத்த ஆண்டு இவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், பொதுத் தேர்தலுக்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், கடந்த 2018ல் நடந்த பொதுத்தேர்தலில், ஷேக் ஹசீனா, ஓட்டுப்பதிவில் மோசடி … Read more

பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு: 35 பேர் பலி.! 150 பேர் படுகாயம்

கராச்சி, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜார் மாவட்டத்தில் இன்று இஸ்லாமிய அரசியல் கட்சி கூட்டம் ஒன்று நடைபெற்றது. ஜே.யு.ஐ.எப். அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது அங்கே எதிர்பாராதவிதமாக திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர குண்டுவெடிப்பில் குறைந்தது 35 பேர் உயிரிழந்தனர் என்றும், 150 பேர் படுகாயமடைந்தனர் என்றும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்கள், பெஷாவர் மற்றும் டைமர்கெராவில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தார். மனித வெடிகுண்டு மூலம் … Read more

Russia closes airport after drone attack in Moscow | மாஸ்கோவில்் ட்ரோன் தாக்குதல் விமான நிலையத்தை மூடியது ரஷ்யா

மாஸ்கோ, ஜூலை 31- ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் ‘ட்ரோன்’ தாக்குதல் நடத்தியதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்கோ சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. ‘நேட்டோ’ எனப்படும் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பில் சேர, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா, ஓராண்டுக்கு மேலாக தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், உக்ரைனின் முக்கிய நகரங்களான கீவ், கெர்சன், மரியுபோல் … Read more

Mother, daughter file suit against airline for harassing drug passengers | தாய், மகளுக்கு போதை பயணி தொல்லை விமான நிறுவனத்திற்கு எதிராக வழக்கு

நியூயார்க்,-அமெரிக்காவில், விமானத்தில் பயணித்த தாய், மகளுக்கு குடிபோதையில் இருந்த சக பயணி பாலியல் தொந்தரவு அளித்தார். அந்த பயணி மீது நடவடிக்கை எடுக்காத விமான நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து, ஐரோப்பிய நாடான கிரீஸ் தலைநகர் ஏதென்சுக்கு, சமீபத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் சென்றது. இதில் ஒரு பெண், தன் 16 வயது மகளுடன் பயணித்தார். அவர்களுக்கு அருகே அமர்ந்திருந்த சக ஆண் பயணி ஒருவர் குடிபோதையில் இருந்ததுடன், அவர்களுக்கு … Read more

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 40 பேர் பலி, 200+ காயம் என தகவல்

பெஷாவர்: பாகிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் பஜுர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசியல் கட்சி மாநாட்டில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 40 பேர் பலி, 200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜமியத் உலமா இஸ்லாம்-ஃபஸ்ல் (JUI-F) என்ற கட்சி சார்பில் கார் தாலுகாவில் நடைபெற்ற இந்த மாநாட்டில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் அந்த காட்சியை சார்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல். மாநாடு நடைபெற்ற பகுதிக்குள் இந்த குண்டு … Read more