உலக செய்திகள்
ஆஸ்திரேலியா-அமெரிக்கா கூட்டுப்போர் பயிற்சியில் ஆஸ்திரேலியாவின் ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து 4 பேர் மாயம்
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தை மையமாக கொண்டு ஆஸ்திரேலியா-அமெரிக்கா இடையே 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட்டுப்போர் பயிற்சி நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு நடைபெற்ற பயிற்சியில் 13 நாடுகளில் இருந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பங்கேற்றனர். இந்தநிலையில் லிண்ட்மேன் என்ற தீவு அருகே சென்றபோது ஆஸ்திரேலியாவின் எம்.ஆர்.எச். தைவான் என்ற ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்தது. இதனையடுத்து அந்த ஹெலிகாப்டரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இதில் அங்குள்ள டெண்ட் தீவு அருகே ஹெலிகாப்டரின் சிதைந்த … Read more
ராணுவத்தை மேம்படுத்த தைவானுக்கு அமெரிக்கா உதவி
சீனா-தைவான் இடையே கடந்த சில மாதங்களாகவே போர்ப்பதற்றம் நிலவி வருகிறது. தைவானை இன்னும் தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என கூறி வரும் சீனா அவ்வப்போது அதன் எல்லையில் போர் விமானங்களை பறக்க விடுகிறது. மேலும் தைவானுடன் மற்ற நாடுகள் தூதரக உறவு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரித்துள்ளது. ஆனால் துவக்கம் முதலே தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் தைவானுக்கு ராணுவ உதவியாக சுமார் ரூ.2 ஆயிரம் கோடி வழங்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ … Read more
ஆப்கானிஸ்தானில் 3 கோடி மக்களுக்கு உதவி தேவை – சர்வதேச அமைப்பு யுனிசெஃப் தகவல்
நியூயார்க்: ஆப்கானிஸ்தானில் அரசியல் சூழல் காரணமாக பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வருகிறது. வெள்ளம், பஞ்சம் காரணமாக ஆப்கன் மக்கள் நெருக்கடியில் உள்ளனர். 64 சதவீத குடும்பங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தற்போது 1.5 கோடி மக்கள் உணவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். 3 கோடி மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது. பெண்கள் பல்கலைக்கழகங்களுக்குச் செல்லவும் பூங்கா, ஜிம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லவும் அனுமதி இல்லை. அரசு … Read more
பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற இந்தியாவின் ஆதரவு தேவை – பலுசிஸ்தான்
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய மாகாணம் பலுசிஸ்தான். இங்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற அமைப்பினர், மக்கள் தனிநாடு கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் நாடு கடந்த பலுசிஸ்தான் அரசின் முதல்-மந்திரியும், மூத்த பெண் அரசியல்வாதியுமான நெய்லா குவாட்ரி பாகிஸ்தானிடம் இருந்து பலுசிஸ்தானின் விடுதலைக்கு ஆதரவு திரட்ட உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக அவர் இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று முன்தினம் உத்தரகாண்டின் ஹரித்வார் நகரில் … Read more
தாய்லாந்து: பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து – 9 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்
பாங்காங், சனிக்கிழமையன்று தாய்லாந்தில் பட்டாசுக் கிடங்கில் வெடித்ததில் 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தெற்கு மாகாணமான நாராதிவாட்டில் உள்ள சுங்கை கோலோக் நகரில் ஏற்பட்ட வெடிவிபத்து கட்டிடத்தின் கட்டுமான பணியின் போது வெல்டிங் செய்ததால் ஏற்பட்டதாக கருதப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக நாராதிவாட் கவர்னர் சனன் பொங்கக்சோர்ன் கூறுகையில், “சுங்கை கோலோக்கில் பட்டாசுகளை சேமித்து வைத்திருந்த ஒரு கிடங்கு இன்று மதியம் வெடித்தது, இந்த … Read more
Friend is my life friend: Today is World Friends Day | நண்பனே எனது உயிர் நண்பனே: இன்று உலக நண்பர்கள் தினம்
‘உன் நண்பன் யார் என்று சொல் நீ யாரென்று சொல்கிறேன்’ என கூறுவர். அனைவருக்கும் இருக்கும் ஒரே உறவு நண்பர்கள். மற்ற உறவுகள் இயற்கையாக வருவது. நண்பர்கள் மட்டுமே நாம் தேர்வு செய்யக்கூடியது. அனைவரது வாழ்க்கையிலும் நண்பர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பல வேறுபாடுகளை கடந்தது நட்பு மட்டுமே. சொத்துகளை அதிகம் சேர்ப்பதை விட நண்பர்களை அதிகம் சேர்ப்பது முக்கியம். நண்பர்கள் தினம் பல நாடுகளில் பல்வேறு தேதிகளில் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.நா., சார்பில் ஜூலை 30ல் உலக … Read more
நைஜர் ராணுவ ஆட்சிக்கு ஒத்துழைப்பு கிடையாது – அமெரிக்கா
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் அதிபர் முகமது பாசும் தலைமையிலான ஆட்சி நடந்து வந்தது. ஆனால் அந்த நாட்டின் ராணுவம் அவரை சிறைபிடித்து ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பின்னர் நைஜரில் ராணுவ ஆட்சியை கொண்டு வந்ததாக அரசு தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தனர். ராணுவத்தின் இந்த செயலுக்கு ஐ.நா. சபை மற்றும் சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன. இந்தநிலையில் ராணுவத்தின் இந்த நடவடிக்கைகள் மூலம் அங்கு ஸ்திரத்தன்மை குறைந்து பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே நைஜர் … Read more
Sikh police denied permission to grow beards in US | சீக்கிய போலீஸ் தாடி வளர்க்க அமெரிக்காவில் அனுமதி மறுப்பு
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்,-அமெரிக்காவில் சீக்கிய போலீஸ்காரர் ஒருவர் அரை அங்குலம் அதிகமாக தாடி வளர்க்க அந்நாட்டு காவல் துறை அனுமதிக்க வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்காவில் போலீசாரும், ராணுவத்தினர் போல் தோற்றம் தரும் விதத்தில் இருக்கும்படி அந்நாட்டில் சட்டங்கள் இருந்தன. இவற்றை மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், நாளடைவில் இந்த சட்டங்கள் தளர்த்தப்பட்டன. இந்நிலையில், இங்கு நியூயார்க்கில் போலீஸ் அதிகாரியாக பணிபுரியும் சரண்ஜோத் டிவானா … Read more