ரஷ்யா-வாக்னர் குழு இடையே சமரசம் – பதற்றம் தணிந்ததால் உக்ரைன் புறப்பட்ட ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர்

மாஸ்கோ: கலகத்தில் ஈடுபட முயன்ற ரஷ்யாவின் வாக்னர் படையுடன் உடன்பாடு ஏற்பட்டதால் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கே ஷோய்கு உக்ரைன் விரைந்திருக்கிறார். வாக்னர் குழுவின் மோதலுக்குப் பிறகு உக்ரைனுக்கு செர்கே மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். இப்பயணத்தில் உக்ரைனில் உள்ள ரஷ்ய ராணுவத்துடன் கடந்த வார நிலவரம் குறித்தும் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மோதலில் ஈடுபட்ட வாக்னர் குழு குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் அமெரிக்க அதிபர் … Read more

'டைட்டானிக்' மூழ்கிய கடல்பகுதியில் ஏதோ இருக்கிறது – டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன்

கடலுக்குள் உடைந்து கிடக்கும் டைட்டானிக் கப்பலின் சிதிலங்களை பார்க்க டைட்டன் என்ற மினி நீர்மூழ்கி கப்பலில் சென்ற கோடீஸ்வரர்கள் 5 பேர் கப்பல் வெடித்து பலியான சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து டைட்டானிக் படம் எடுத்து புகழ்பெற்ற ஹாலிவுட் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் கருத்து தெரிவித்து உள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில். “டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்திலேயே இந்த விபத்து நடந்து இருப்பது என்னை ஆச்சரியப்படுத்தி உள்ளது. ஏற்கனவே நான் … Read more

'ஆற்றலை மடைமாற்றுங்கள் ஒபாமா' – இந்தியா மீதான விமர்சனத்துக்கு அமெரிக்க மதச் சுதந்திர ஆணைய முன்னாள் தலைவர் பதிலடி

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபமா, இந்தியா பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் எப்படி இருக்கிறது என்பதை விமர்சிப்பதற்குப் பதிலாக அந்த ஆற்றலை இந்தியாவைப் பாராட்டுவதற்காக மடைமாற்றலாம் என்று கூறியிருக்கிறார் சர்வதேச மதச் சுதந்திரங்களுக்கான அமெரிக்க ஆணையத்தின் (USCIRF) முன்னாள் தலைவர் ஜானி மூர். முன்னதாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, “இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரின் பாதுகாப்பு பிரச்சினை குறித்து பிரதமர் மோடியுடன் ஜோ பைடன் பேச வேண்டும். மோடியுடன் நான் பேசியிருந்தால், இதுகுறித்து விவாதித்திருப்பேன்” … Read more

அதிபர் ஜோ பைடன் – உக்ரைன் அதிபர் பேச்சு

வாஷிங்டன், உக்ரைன் மீது ரஷியா தனது ராணுவ நடவடிக்கைகளை தொடங்கி ஒரு வருடத்தை தாண்டி உள்ளது. ரஷியாவின் தாக்குதலுக்கு மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டே செல்கிறது. இதற்கிடையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், எவ்ஜெனி புரிகோசின் தலைமையிலான வாக்னர் எனப்படும் தனியார் ராணுவ அமைப்பு ரஷியாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் ராணுவ கட்டுப்பட்டு மையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், மாஸ்கோ … Read more

President Biden – Mobile phone conversation with the President of Ukraine | அமெரிக்க அதிபர் பைடன் – ஜெலன்ஸ்கி பேச்சு

வாஷிங்டன்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மொபைல் போனில்பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அப்போது, ரஷ்யாவில் ஏற்பட்ட உள்நாட்டு கிளர்ச்சி குறித்தும், உக்ரைனின் தற்போதைய எதிர் தாக்குதல் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. வாஷிங்டன்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மொபைல் போனில்பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அப்போது, ரஷ்யாவில் ஏற்பட்ட உள்நாட்டு கிளர்ச்சி குறித்தும், புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் … Read more

கிரீஸில் மீண்டும் பிரதமராகிறார் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ்..!

ஏதென்ஸ், ஐரோப்பிய நாடான கிரீசில் புதிய ஜனநாயக கட்சியின் தலைவரான கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவர் கடந்த 4 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வருகிறார். இவரது ஆட்சியின் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்பு விவகாரம், பிப்ரவரி மாதம் நடந்த மிகப்பெரிய ரெயில் விபத்து போன்றவற்றால் இவரது ஆட்சி விமர்சனத்துக்குள்ளானது. இதனால் பிரதமரின் செல்வாக்கை அறிந்து கொள்வதற்காக கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் இவரது அரசாங்கத்தின் … Read more

எகிப்தில் 1,000 ஆண்டுகள் பழமையான மசூதியை பார்வையிட்ட பிரதமர் மோடி

கெய்ரோ: எகிப்தில் 1,000 ஆண்டுகள் பழமையான மசூதியை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். அங்குள்ள இந்திய வீரர்களின் நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்தினார். கடந்த 10, 11, 12-ம் நூற்றாண்டுகளில் எகிப்து நாட்டை பாஃதிமித் மன்னர் பரம்பரை ஆட்சி நடத்தி வந்தது. இந்த மன்னர் பரம்பரையின் ஆட்சிக் காலத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எகிப்து தலைநகர் கெய்ரோவில் அல்-ஹக்கீம் மசூதி கட்டப்பட்டது. போதிய பராமரிப்பு இன்றி இந்த மசூதி சிதிலமடைந்தது. கடந்த 1970-ம் ஆண்டு இந்தியாவை … Read more

Russia airstrike on Syria: 13 killed | சிரியா மீது ரஷ்யா தாக்குதல்: 13 பேர் பலி

சிரியா: வடமேற்கு சிரியாவில் ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். இது இந்த ஆண்டின் மிக மோசமான தாக்குதல் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சிரியா: வடமேற்கு சிரியாவில் ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். இது இந்த ஆண்டின் மிக மோசமான தாக்குதல் புதிய செய்திகளுக்கு தினமலர் … Read more

ஆப்கானிஸ்தானில் கட்டாய திருமணத்தில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு – தலீபான் உச்ச தலைவர் அறிக்கை

காபூல், ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அதுமுதல் அங்கு பெண்களின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கிடையே கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொதுவாழ்க்கையில் ஈடுபட அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த நாட்டின் உச்ச தலைவர் ஹிபதுல்லா அகுந்த்சாதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘தலீபான்கள் ஆட்சியில் கட்டாய திருமணம் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளில் இருந்து பெண்கள் காப்பாற்றப்பட்டு உள்ளனர். மேலும் அவர்கள் வசதியான … Read more

டைட்டானிக் கப்பலை பார்க்க ஆழ்கடலுக்கு சென்றபோது 5 உயிர்களை பறித்த ‘டைட்டன்’ நீர்மூழ்கியில் ஏகப்பட்ட குறைகள்

சென்னை: ஒரு வாரத்துக்கு முன்பு, வடக்கு அட்லான்டிக் பெருங்கடலின் ஆழத்தில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்தது. டைட்டன் என்று பெயரிடப்பட்ட ஆழ்கடல் நீர்மூழ்கி சுற்றுலா வாகனம், 5 நபர்களைக் கொண்ட குழுவை ஏற்றிச் சென்றது. டைட்டன், நூற்றாண்டு பழமையான டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளுக்கு அருகில் சென்ற பொழுது பேரழிவை சந்தித்தது. கனடா மற்றும் அமெரிக்க நாட்டை சேர்ந்த கடலோர கண்காணிப்பை மேற்கொள்ளும் கடற்படையின் கப்பல்களில் இருந்து, கடலுக்கு அடியில் தொலைவில் இருந்து இயக்கக் கூடிய வாகனத்தைக் கொண்டு … Read more