அமெரிக்காவில் ஸ்பெல்லிங் பீ போட்டி.. கடினமான வார்த்தைகளை மிகச்சரியாக உச்சரித்த இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி..!

அமெரிக்காவின் பிரபலமான ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 14 வயது மாணவன் வெற்றி பெற்றுள்ளார். ஆங்கில மொழி உச்சரிப்பை ஊக்குவிக்கும் வகையில் ஸ்கிரிப்ஸ் என்ற அமைப்பு ஆண்டுதோறும் கடினமான வார்த்தைகளை மிகச்சரியாக உச்சரிப்பவர்களுக்கு பரிசு வழங்கி வருகிறது. நடப்பாண்டிற்கான போட்டியில் புளோரிடாவின் லார்கோவில் வசித்து வரும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தேவ் ஷா இறுதி சுற்றில் சாம்மோபைல்  என்ற வார்த்தையை சரியாக உச்சரித்து வெற்றி பெற்றார். 200 போட்டியாளர்களை எதிர்கொண்டு வெற்றி பெற்ற 8ம் … Read more

அமெரிக்கா | பிறந்த 3 நாட்களில் நகர்ந்த குழந்தை: வைரல் வீடியோ

நியூயார்க்: பிறந்து 3 நாட்களிலே குழந்தை ஒன்று தலையை தூக்கிய நிலையில் நகர்கின்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்வு அமெரிக்காவில் நடந்துள்ளது. பெனிசில்வேனியா சேர்ந்தவர் சமந்தா எலிசபெத். இவருக்கு பிப்ரவரி மாதம் நைலா என்ற குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தை பிறந்த மூன்று நாட்களில் குப்புறப் படுத்து தலையை தூக்கி நகரத் தொடங்கியிருக்கிறது. இதனை சற்றும் எதிர்பாராத சமந்தா தனது போனில் அதனை வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகியது. … Read more

தனிமை மற்றும் சமூக தனிமைப்படுத்தலை சமாளிக்க சட்டத்தை இயற்றிய ஜப்பான்

Social isolation: சமூக தனிமை மற்றும் தனிமையில் இருக்கும் மக்களை ஆதரிப்பதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் மசோதாவை சட்டமாக்கியது ஜப்பான்

பாகிஸ்தான் பணவீக்கம் 38% ஆக அதிகரிப்பு: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயர்வு

இஸ்லமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் நுகர்வோர் விலை குறியீட்டு பட்டியல் 38 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. அதன் காரணமாக அந்த நாட்டில் உணவுப் பொருட்களின் விலை, வீட்டு வாடகை, மின்சாரம், எரிவாயு மற்றும் போக்குவரத்து சார்ந்த கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரலில் அந்த நாட்டின் பணவீக்கம் 36.4 சதவீதமாக இருந்தது. இந்தச் சூழலில் ஒரே மாதத்தில் 1.6 சதவீதம் இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதன் காரணமாக கடந்த … Read more

சிங்கப்பூரில் தனியார் நிறுவனம் நடத்திய போட்டியில் ரூ.12 லட்சம் பரிசு வென்ற தமிழர்

சிங்கப்பூர், சிங்கப்பூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் நிறுவனம் ஒன்று தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை உற்சாகப்படுத்த விரும்பியது. அதன்படி இரவு உணவுடன் கூடிய கலைநிகழ்ச்சி ஒன்றை அது ஏற்பாடு செய்தது. அதில் டெலிவிஷன் தொடர் பாணியில் ஒரு விளையாட்டு அரங்கை தயார் செய்து ஊழியர்களை கலந்து கொள்ள ஏற்பாடு செய்தது. அதில் பணமூட்டை அடங்கிய ராட்சத பலூனை அரங்கின் நடுவே கட்டி தொங்கவிடப்பட்டது. சக ஊழியர்களுடன் போட்டியிட்டு யார் அந்த பலூனை பறிக்கிறார்களோ அவர்கள் வெற்றியாளர் என … Read more

அகாடமி பட்டமளிப்பு விழாவில் தவறி விழுந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

கொலோராடோ, அமெரிக்க வரலாற்றில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மிக வயதான அதிபாராக ஜோ பைடன் இருந்து வருகிறார். இந்நிலையில் கொலராடோவில் உள்ள அமெரிக்க விமானப்படை அகாடமியின் பட்டமளிப்பு விழாவில் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்ச்சியில் அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார். அப்போது விழா மேடையின் அருகே தடுமாறி விழுந்த ஜோ பைடன் கீழே விழுந்தார். பின்னர் துரிதமாக செயல்பட்ட விமானப்படை அதிகாரிகள் அவருக்கு உதவினர். பின்னர், அதிகாரிகளின் உதவி ஏதுமின்றி, அவர் நடந்து சென்று தமது இருக்கையில் … Read more

கோடீஸ்வரர் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் எலான் மஸ்க்

வாஷிங்டன்: உலக கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க்கை கடந்த டிசம்பரில் முதல் முறையாக எல்விஎம்எச் நிறுவன அதிபர் அர்னால்ட் பின்னுக்குத் தள்ளினார். இந்நிலையில், சீனாவில் பொருளாதார மந்த நிலை அறிகுறியால் எல்விஎம்எச் பிராண்டு விற்பனை சரிவை எதிர்கொண்டது. அதனால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் எல்விஎம்எச் பங்கின் விலை 10 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தது. அர்னால்டின் நிகர சொத்து மதிப்பு ஒரே நாளில் 11 பில்லியன் டாலர் அளவுக்கு சரிவடைந்ததையடுத்து அவர் பட்டியலில் முதலிடத்தில் … Read more

ஊழல் குற்றச்சாட்டில் பிரேசில் முன்னாள் அதிபருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை

பிரேசிலியா, பிரேசில் நாட்டில் 1990 முதல் 1992 வரை அதிபராக இருந்தவர் பெர்னாண்டோ காலர் டி மெல்லோ (வயது 73). இவர் அங்கு ராணுவ ஆட்சி நடந்த 1964-1985 காலகட்டத்துக்கு பின்னர் ஜனநாயக முறையில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் ஆவார். இவர் ஒரு துணிச்சலான அரசியல்வாதியாக இருந்தார். ஆனால் பதவியேற்ற 2 ஆண்டுகளிலேயே அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்க முயன்றதால் இவரது செயல்பாடுகள் மீது மக்கள் அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக அரசு நடத்தும் எண்ணெய் நிறுவனமான பெட்ரோப்ராசின் … Read more

கனடாவில் சுற்றுலா சென்றபோது நடைபாதை இடிந்து விழுந்து விபத்து: 18 மாணவர்கள் படுகாயம்

ஒட்டாவா, கனடாவின் வின்னிபெக் மாகாணம் செயின்ட் போனிபேஸ் பகுதியில் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இதில் படிக்கும் மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்ல பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்தது. அதன்படி அங்குள்ள சுற்றுலாதலங்களில் ஒன்றான ஜிப்ரால்டர் கோட்டைக்கு மாணவர்கள் சென்றனர். அங்குள்ள 5 மீட்டர் உயர நடைபாதையில் ஏறி கோட்டையின் அழகை மாணவர்கள் ரசித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த நடைபாதை இடிந்து விழுந்தது. இதனையடுத்து மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் … Read more

ஆஸ்திரேலியாவில் 3 வயது குழந்தையை குத்திக்கொன்ற தந்தை

சிட்னி, ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. மர்மநபர் ஒருவர் திடீரென அந்த குடியிருப்புக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது 3 வயது ஆண் குழந்தை ஒன்று ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அதன் அருகில் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் காயங்களுடன் உயிருக்கு போராடி வந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி … Read more