கிரீஸில் மீண்டும் பிரதமராகிறார் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ்..!

ஏதென்ஸ், ஐரோப்பிய நாடான கிரீசில் புதிய ஜனநாயக கட்சியின் தலைவரான கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவர் கடந்த 4 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வருகிறார். இவரது ஆட்சியின் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்பு விவகாரம், பிப்ரவரி மாதம் நடந்த மிகப்பெரிய ரெயில் விபத்து போன்றவற்றால் இவரது ஆட்சி விமர்சனத்துக்குள்ளானது. இதனால் பிரதமரின் செல்வாக்கை அறிந்து கொள்வதற்காக கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் இவரது அரசாங்கத்தின் … Read more

எகிப்தில் 1,000 ஆண்டுகள் பழமையான மசூதியை பார்வையிட்ட பிரதமர் மோடி

கெய்ரோ: எகிப்தில் 1,000 ஆண்டுகள் பழமையான மசூதியை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். அங்குள்ள இந்திய வீரர்களின் நினைவிடத்தில் அவர் மரியாதை செலுத்தினார். கடந்த 10, 11, 12-ம் நூற்றாண்டுகளில் எகிப்து நாட்டை பாஃதிமித் மன்னர் பரம்பரை ஆட்சி நடத்தி வந்தது. இந்த மன்னர் பரம்பரையின் ஆட்சிக் காலத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எகிப்து தலைநகர் கெய்ரோவில் அல்-ஹக்கீம் மசூதி கட்டப்பட்டது. போதிய பராமரிப்பு இன்றி இந்த மசூதி சிதிலமடைந்தது. கடந்த 1970-ம் ஆண்டு இந்தியாவை … Read more

Russia airstrike on Syria: 13 killed | சிரியா மீது ரஷ்யா தாக்குதல்: 13 பேர் பலி

சிரியா: வடமேற்கு சிரியாவில் ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். இது இந்த ஆண்டின் மிக மோசமான தாக்குதல் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சிரியா: வடமேற்கு சிரியாவில் ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். இது இந்த ஆண்டின் மிக மோசமான தாக்குதல் புதிய செய்திகளுக்கு தினமலர் … Read more

ஆப்கானிஸ்தானில் கட்டாய திருமணத்தில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு – தலீபான் உச்ச தலைவர் அறிக்கை

காபூல், ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அதுமுதல் அங்கு பெண்களின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கிடையே கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொதுவாழ்க்கையில் ஈடுபட அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த நாட்டின் உச்ச தலைவர் ஹிபதுல்லா அகுந்த்சாதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘தலீபான்கள் ஆட்சியில் கட்டாய திருமணம் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளில் இருந்து பெண்கள் காப்பாற்றப்பட்டு உள்ளனர். மேலும் அவர்கள் வசதியான … Read more

டைட்டானிக் கப்பலை பார்க்க ஆழ்கடலுக்கு சென்றபோது 5 உயிர்களை பறித்த ‘டைட்டன்’ நீர்மூழ்கியில் ஏகப்பட்ட குறைகள்

சென்னை: ஒரு வாரத்துக்கு முன்பு, வடக்கு அட்லான்டிக் பெருங்கடலின் ஆழத்தில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்தது. டைட்டன் என்று பெயரிடப்பட்ட ஆழ்கடல் நீர்மூழ்கி சுற்றுலா வாகனம், 5 நபர்களைக் கொண்ட குழுவை ஏற்றிச் சென்றது. டைட்டன், நூற்றாண்டு பழமையான டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளுக்கு அருகில் சென்ற பொழுது பேரழிவை சந்தித்தது. கனடா மற்றும் அமெரிக்க நாட்டை சேர்ந்த கடலோர கண்காணிப்பை மேற்கொள்ளும் கடற்படையின் கப்பல்களில் இருந்து, கடலுக்கு அடியில் தொலைவில் இருந்து இயக்கக் கூடிய வாகனத்தைக் கொண்டு … Read more

South African gold mine accident: 31 dead | தென் ஆப்பிரிக்க தங்கச்சுரங்க விபத்து: 31 பேர் பலி

வெல்காம் : தென் ஆப்பிரிக்காவின் ப்ரீஸ்டேட் மாகாணத்தில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 31 பேர் பலியாகினர். தென்ஆப்பிரிக்காவில் அழிந்து வரும் கனிம வளங்களை பாதுகாக்க சட்டவிரோதமாக செயல்படும் பல தங்கச் சுரங்கங்களை அந்நாட்டு அரசு மூடி வருகிறது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவின் ப்ரீஸ்டேட் மாகாணத்தில் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 31 தொழிலாளர்கள் இறந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். மே 18ல் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டி எடுத்துக் கொண்டிருந்தபோது இந்த வெடி … Read more

ரஷ்யாவில் கிளர்ச்சிப்படை அபாயம் நீங்கியது: வாக்னர் படைத் தலைவர் பெலாரஸில் தஞ்சம்

மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்துடன் இணைந்து, அந்த நாட்டின் தனியார் பாதுகாப்பு அமைப்பான வாக்னர் ஆயுதக் குழுவும் போரில் ஈடுபட்டது. போரின்போது, வாக்னர் தலைவர் ஈவ்ஜெனி பிரிகோஸினுக்கும், ரஷ்ய ராணுவ அமைச்சர் செர்கே ஷோய்கு, தளபதி வாலரி ஜெரசிமோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்தப் பின்னணியில், உக்ரைன் போருக்கான தலைமையகமாக விளங்கிய ரஷ்யாவின் ரோஸ்டோவ் நகரில் செயல்பட்ட ரஷ்ய ராணுவக் கட்டுப்பாட்டு மையத்தை வாக்னர் ஆயுதக் குழு நேற்று முன்தினம் கைப்பற்றியது. ‘‘ரஷ்ய … Read more

Path-changing addiction: Today is International Day Against Drug Abuse | பாதையை மாற்றும் போதை: இன்று சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்

போதைப்பொருள், சமூகத்தை முற்றிலும் அழிக்கும் ஒரு கொலைகாரனை போன்றது. அனைத்து வகையான நோய்களுக்கும் முன்னோடியாக இருப்பது போதைப்பொருள் பயன்பாடு. போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கு உலக நாடுகள் நடவடிக்கை எடுப்பது மற்றும் போதைபொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவது என்ற நோக்கத்துடன் ஆண்டுதோறும் ஜூன் 26ம் தேதி “சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலை தடுக்கும் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. போதைப்பொருட்களை பயன்படுத்துதல், போதைப்பொருட்களை கடத்துதல், போதை பொருள் விற்பனை ஆகியவற்றை ஒழிக்க கடுமையான சட்டங்கள் மூலம் அனைத்து … Read more

மனித குலத்துக்கு மிகச் சிறந்த சேவையாற்றுவதாக கவுரவம்: பிரதமர் மோடிக்கு எகிப்தின் உயரிய விருது

கெய்ரோ: எகிப்து நாட்டின் மிக உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் தி நைல்’ விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. அந்நாட்டு அதிபர் அப்தெல் ஃபத்தா அல் சிசி, இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார். எகிப்து அதிபரின் சிறப்பு அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் அந்த நாட்டு தலைநகர் கெய்ரோவுக்கு சென்றார். எகிப்து பிரதமர் முஸ்தபா மேட்போலி, விமான நிலையத்துக்கு வந்து வரவேற்றார். முதல் நாளில் … Read more

Nawaz Sharif acquitted in 37-year bribery case | 37 ஆண்டு கால லஞ்ச வழக்கு நவாஸ் ஷெரீப் விடுவிப்பு

லாகூர் : பாகிஸ்தானில், 37 ஆண்டுகளுக்கு முன் அரசு நிலத்தை லஞ்சமாக வழங்கியது தொடர்பான வழக்கில் இருந்து அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் விடுவிக்கப்பட்டார். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், 1986ல் அந்நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் முதல்வராக இருந்தார். லாகூர் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராகவும் இருந்த அவர், அரசுக்கு சொந்தமான 6.75 ஏக்கர் நிலத்தை, தன் அதிகாரத்தை பயன்படுத்தி குறைந்த விலைக்கு ஜாங் – ஜியோ ஊடக குழும … Read more