இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து 21-ம் நூற்றாண்டை சிறந்ததாக மாற்றும் – இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் பிரதமர் உறுதி
வாஷிங்டன்: இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து 21-ம் நூற்றாண்டை, மிகச் சிறந்த நூற்றாண்டாக மாற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்திய வம்சாவளியினரின் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவில் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது. உலக ஜனநாயகத்தின் தாயாக இந்தியா விளங்குகிறது. நவீன ஜனநாயகத்தின் பாதுகாவலனாக அமெரிக்கா செயல்படுகிறது. இரு நாடுகளும் இணைந்து கொள்கைகள், ஒப்பந்தங்களை மட்டும் உருவாக்கவில்லை. மக்களின் வாழ்க்கையை வளமாக்குகிறோம். … Read more