விகடன்
திருப்பரங்குன்றம் : `அயோத்தி, மணிப்பூர்… சங்பரிவாரின் வழக்கமான வழிமுறையே!’ – க.கனகராஜ் | களம் 1
எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான், `களம்’ இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது ’ திருப்பரங்குன்றம் விவகாரம். பல்துறைகளை சார்ந்த பல்வேறு ஆளுமைகள் இந்த சர்ச்சை குறித்து விரிவாக தங்கள் கருத்துகளை முன்வைக்க உள்ளார்கள். (பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல – ஆசிரியர்) மாநில … Read more
திருப்பரங்குன்றம்: "மற்ற நாட்களில் தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை" – கோவில் நிர்வாகத்துக்கு கடிதம்
திருப்பரங்குன்ற மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை திருநாளன்று, வழக்கம்போல கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டுவந்த கோவிலுக்கு மேலே இருக்கும் மலையில் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்த ஆண்டு இந்து அமைப்புகள் மலை உச்சியில், சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தீபத்தூணில் மகா தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்து அனுமதி பெற்றிருந்தனர். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும் உத்தரவிட்டிருந்தார். கார்த்திகை … Read more
“இந்த ஆடையை உங்க மனைவிகிட்ட கொடுங்க, அவங்களுக்கு தெரியும்'' – சர்ச்சையை கிளப்பிய ஆடை நிறுவனம்
சீனாவைச் சேர்ந்த பிரபல ஆண்கள் ஆடை நிறுவனம் ஒன்று, தங்கள் தயாரிப்பில் இடம்பெற்ற வாசகத்திற்காக கடும் விமர்சனத்திற்குப் பாயப்பட்டுள்ளது. “துணி துவைப்பது பெண்களுக்கான வேலை” என்ற தொனியில் அந்த நிறுவனம் கூறிய வாசகம், இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சீனாவின் ஜியாங்சு மாகாணத்தை மையமாகக் கொண்டு செயல்படும் ‘கு ஜுவோ காங் ஜெங்’ (Gu Zhuo Kang Zheng) என்ற ஆடை நிறுவனம், ஆண்கள் அணியும் ஆடைகளை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் விற்பனை செய்து … Read more
அங்கம்மாள் விமர்சனம்: உள்ளூர் கதையை உலக சினிமாவாக முன்னிறுத்தும் இயல்பான படைப்பு!
தனது குக்கிராமத்தின் முதல் டாக்டரான பவளமுத்து (சரண்), நகரத்தில் வசிக்கும் வசதியான வீட்டுப் பெண்ணான ஜாஸ்மினை (முல்லையரசி) காதலிக்கிறான். ஊரிலிருக்கும் அவனது அம்மா அங்கம்மாள் (கீதா கைலாசம்) வாழ்நாள் முழுவதும் ரவிக்கை போட்டதே இல்லை. இந்நிலையில் திருமணம் பேச ஜாஸ்மின் வீட்டார் அவர்கள் வீட்டிற்கு வரும் நாள் நெருங்குகிறது. இதனால் ‘இப்படியொரு அம்மாவைப் பார்த்தால் என்ன சொல்வார்கள்?’ எனப் பவளமுத்து தயங்க, அவனது அண்ணி சாரதாவுடன் சேர்ந்து அங்கம்மாளின் மனதை மாற்ற திட்டம் தீட்டுகிறார்கள். யார் இந்த … Read more
'10 ஆண்டுகளில் 106 வழக்குகள் மட்டுமே' – லஞ்ச ஒழிப்புத்துறை குறித்த RTI; வெளியான அதிர்ச்சி தகவல்
விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல்துறையினரால் சுமார் 10 ஆண்டுகளில் வெறும் 106 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை (ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை) என்பது தமிழ்நாடு அரசின் மனிதவள மேலாண்மைத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதைத் தடுத்திடவும், ஊழலில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து வழக்குப் பதிவு செய்து சட்டத்தின் முன் நிறுத்தி … Read more
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி, எங்கே தவறு… என்ன செய்ய வேண்டும்?
‘சாண் ஏறினால் முழம் சறுக்கும்’ என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இப்போது, இந்தியாவின் பொருளாதார நிலை கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்கிறது. ‘உலகிலேயே வேகமாக வளர்ந்துவரும் நாடு’, ‘சீனாவுக்கு மாற்றாக உலகின் உற்பத்தி மையமாகவும், முதலீட்டு மையமாகவும் மாறும் நாடு’, ‘விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகும்’ என்றெல்லாம் இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றி பாசிட்டிவான செய்திகள் வந்தவண்ணம் இருந்த நிலையில், அதிருப்தியான ஓர் அணுகுண்டு வந்து விழுந்திருக்கிறது. கடந்த வாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு … Read more
ஈரோடு: மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு – விசாரணையில் வனத்துறை; நடந்தது என்ன?
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே பர்கூர் கிழக்கு மலையில் உள்ள ஈரட்டி, கடை ஈரட்டி, ஒந்தனை உள்ளிட்ட வனப் பகுதிகளில் யானைகள், காட்டுப் பன்றி, சிறுத்தை என வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. இரவு நேரத்தில் உணவுதேடி வனத்திலிருந்து வெளியேறும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் விவசாய நிலத்தில் பயிரிட்டுள்ள மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு மற்றும் தென்னமரங்களை சேதப்படுத்தி சாப்பிட்டு வந்தன. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வனத்துறையினரிடம் புகார் கூறியதால், விவசாய நிலத்துக்குள் நுழையும் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு … Read more
திருப்பரங்குன்றம்: “நீதிமன்ற உத்தரவை இந்து விரோத திமுக அரசு செயல்படுத்த வேண்டும்" – அண்ணாமலை
வருடந்தோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், இந்து தமிழர் கட்சியின் ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்” என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டதன்படி மலை உச்சியில் தீபம் ஏற்றப்படவில்லை. இதனால், அப்பகுதியில் பா.ஜ.க, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவே நேற்றிரவு பதட்டம் ஏற்றப்பட்டது. … Read more