விழிப்புலனற்றோரின் படைப்புகளை உள்ளடக்கிய 'கடதுராவ' கௌரவ பிரதமருக்கு வழங்கிவைப்பு

சர்வதேச வெள்ளை பிரம்பு தினத்தை முன்னிட்டு விழிப்புலனற்ற நபர்களின் படைப்புகளை உள்ளடக்கிய ‘கடதுராவ’ நூல் வெளியீடு இன்று (15) முற்பகல் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. விழிப்புலனற்றோர் புனர்வாழ்வு நம்பிக்கை நிதியத்தின் வெளியீடாக வெளியிடப்படும் இந்நூல் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே அவர்களினால் கௌரவ பிரதமருக்கு வழங்கப்பட்டது. சர்வதேச வெள்ளை பிரம்பு … Read more விழிப்புலனற்றோரின் படைப்புகளை உள்ளடக்கிய 'கடதுராவ' கௌரவ பிரதமருக்கு வழங்கிவைப்பு

கிழக்கு மாகாண பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு- உளர்ச்சார்பு பரீட்சை எதிர்வரும் 30ம் திகதி

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3-i(இ) தரத்திற்கு மாவட்ட ரீதியாக உயர் தேசிய டிப்ளோமாதாரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சையின் உளர்ச்சார்பு பாடத்தின் பரீட்சை எதிர்வரும் 30ம் திகதி நடைபெறவுள்ளதாக, மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எம்.வை. சலீம் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 தொற்று பரவல் காரணமாக உளர்ச்சார்பு பாடத்தின் மீள் பரீட்சை கலவரையரையன்றி பிற்போடப்பட்டிருந்தது. தற்போதுஇப் பரீட்சையை நடத்துவதற்கான அனுமதி அட்டைகள் … Read more கிழக்கு மாகாண பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு- உளர்ச்சார்பு பரீட்சை எதிர்வரும் 30ம் திகதி

வலை உற்பத்தி தொழிற்சாலை செயற்பாடுகள் மேலும் வினைத்திறனுடன் …

வலை உற்பத்தி தொழிற்சாலை செயற்பாடுகள் மேலும் வினைத்திறனுடன் – கடற்றொழில் அமைச்சர் வடகடல் நிறுவனத்தினால் லுணுவில, வீரவல மற்றும் குருநகர் ஆகிய இடங்களில் செயற்படுத்தப்படுகின்ற வலை உற்பத்தி தொழிற்சாலை செயற்பாடுகளை மேலும் வினைத் திறனுடன் முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. வலை உற்பத்தி தொழிற்சாலையில் இனங்காணப்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்ட நிலையில், அவற்றை தீர்ப்பது தொடர்பான ஆலோசனைகளும் கடற்றொழில் அமைச்சரினால் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன. கடற்றொழில் அமைச்சின் செயலாளர், … Read more வலை உற்பத்தி தொழிற்சாலை செயற்பாடுகள் மேலும் வினைத்திறனுடன் …

ஏறாவூர் பகுதியில் 400 ஏக்கர் பரப்பில் புதிய விசேட துணி உற்பத்தி வலயத்துக்கு அரசாங்க நிதி குழு அனுமதி

இந்நாட்டுக்கு பொருளாதார மற்றும் சமூக நன்மைகளை கொண்டுவரக்கூடிய 400 ஏக்கர் பரப்பில் புதிய விசேட துணி உற்பத்தி வலயத்தை அமைக்க கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாபா தலைமையில் கடந்த 11 ஆம் திகதி முற்பகல் இடம்பெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.   2008 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு துணி உற்பத்தியாளர்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள … Read more ஏறாவூர் பகுதியில் 400 ஏக்கர் பரப்பில் புதிய விசேட துணி உற்பத்தி வலயத்துக்கு அரசாங்க நிதி குழு அனுமதி

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன

தற்போது நடைமுறையில் இருக்கும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை, இம்மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை வரை கடுமையாகக் கடைபிடிக்கத் தீர்மானிக்கப்பட்டது. இம்மாதம் 19 மற்றும் 20ஆம் திகதிகள் விடுமுறை தினங்களாக அமையப்பெற்று நீண்ட விடுமுறையுடன் கூடிய வார இறுதி அமையப்பெறவுள்ளமையால், அனைத்து மாகாண எல்லைகளிலும் போக்குவரத்து நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், பாதுகாப்புத் துறையினருக்குப் பணிப்புரை விடுத்தார். இன்று (15) முற்பகல், வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கொவிட் ஒழிப்புச் … Read more மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன

மனித உரிமைகள் பேரவைக்கு இந்தியா மீண்டும் தலைமை தாங்கும்

ஐக்‍கிய நாடுகள் அமைப்பின் அங்கமாக விளங்கும் மனித உரிமைகள் பேரவைக்கு சுழற்சி முறையில் ஒவ்வொரு நாடும் மூன்று ஆண்டுகளுக்கு தலைமை வகிக்கும். தற்போது பதவி வகிக்கும் இந்தியாவின் பதவிக்காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் ,31ஆம் திகதி  முடிவடைகிறது. இந்நிலையில், 2022 – 24ம் ஆண்டிற்கான ஐ.நா., மனித உரிமைகள் பேரவைக்கு ஐ.நா., பொதுசபையில் நேற்று (அக்., 14) வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், இந்தியா பல்வேறு நாடுகளின் பெரும் ஆதரவுடன் மீண்டும் 6வது முறையாக தேர்ந்தெடுக்‍கப்பட்டு உள்ளது. ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர … Read more மனித உரிமைகள் பேரவைக்கு இந்தியா மீண்டும் தலைமை தாங்கும்

வெளிநாட்டு சொத்து இருப்புக்கள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் விளக்கம்

நாட்டின் அந்நிய செலவாணி இருப்பு நிலை தொடர்பில் முன்னெடுக்கப்படும் தவறான கருத்துக்களால் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. நெருக்கடியான இந்த காலப்பகுதியில் இது கவலைக்குறிதாக இருந்த போதிலும் மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நிதி நடவடிக்கையின் மூலம் அந்நிய செலாவணி இருப்பில் முன்னேற்றம் ஏற்படும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நம்பிக்கை வெளியிட்டார். இலங்கை மத்திய வங்கியில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இவ்வாறு குறிப்பிட்டார். … Read more வெளிநாட்டு சொத்து இருப்புக்கள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் விளக்கம்

பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி: வேலைத்திட்டம் இன்றுகொழும்பில் ஆரம்பம்

18 மற்றும் 19 வயது பிரிவைக்கொண்ட பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றும் நடவடிக்கை பாடசாலைகளில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகும். கல்வி மற்றும் சுகாதார அமைச்சு இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றது. அதன் அடிப்படையில், கொழும்பு மாவட்டத்தில் பரீட்சார்த்தமாக இந்த வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாவதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் எல்.எம்.டீ.தர்மசேன தெரிவித்துள்ளார். கொழும்பு, ஹோமாகம, ஸ்ரீஜயவர்த்தனபுர, பிலியந்தல ஆகிய கல்வி வலயங்களில் தடுப்பூசி ஏற்றும் பணி இடம்பெறவுள்ளது.

பொதுவான வானிலை முன்னறிவிப்பு

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2021 ஒக்டோபர்15ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2021 ஒக்டோபர் 15ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் … Read more பொதுவான வானிலை முன்னறிவிப்பு