டோக்கியோ ஒலிம்பிக்: ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சவுரவ் சவுத்ரி இறுதிச்சுற்றுக்கு தகுதி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சவுரவ் சவுத்ரி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். துப்பாக்கிச் சுடுதலில் 586 புள்ளிகளுடன் இந்திய வீரர் சவுரவ் சவுத்ரி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

இந்தியாவில் மேலும் 35 ஆயிரம் பேர் கோவிட்டிலிருந்து மீண்டனர்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில், கோவிட் பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:இந்தியாவில் நேற்றைய கோவிட் பாதிப்பு: 39,097நேற்று நலமடைந்தவர்கள்: 35,087நேற்றைய மரணம்: 546இதன் மூலம் மொத்த பாதிப்பு: 3,13,32,159மொத்த நலமடைந்தவர்கள்:3,05,03,166சிகிச்சையில் உள்ளவர்கள்: 4,08,977மொத்த பலி: 4,20,016போடப்பட்ட தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை : 42,78,82,261 இதன் மூலம்,குணமடைந்தவர்களின் விகிதம்- 97.35 சதவீதம்சிகிச்சையில் உள்ளோரின் விகிதம் – 1.31 சதவீதம்தினசரி பாதிக்கப்படுவோரின் விகிதம்- 2.40 சதவீதம் ஆகும். இது தொடர்ந்து 33 வது நாளாக 3 … Read more இந்தியாவில் மேலும் 35 ஆயிரம் பேர் கோவிட்டிலிருந்து மீண்டனர்| Dinamalar

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டங்கள் குறைப்பு

புதுடெல்லி, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில், சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 2020-21 ஆம் கல்வியாண்டிற்கான பாடத்திட்டங்கள் இரண்டு பருவங்களாக பிரித்து செயல்படுத்தப்படும் என சி.பி.எஸ்.சி. தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.  இதையடுத்து தற்போது சி.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நடப்பு கல்வியாண்டிற்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டங்கள் ஏற்கனவே இரண்டு பருவங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண்களும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன.  அதன்படி … Read more சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டங்கள் குறைப்பு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்: ஜூன் காலாண்டு லாபம் அளவீடு 7.25% சரிவு..!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் ஆக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜூன் காலாண்டில் லாபத்தில் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லாபத்தில் 7 சதவீத சரிவைப் பதிவு செய்துள்ளது. முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் காலாண்டு முடிவுகளை இரவு நேரத்தில் வெளியிட்ட காரணத்தால் மும்பை பங்குச்சந்தையில் இதன் தாக்கம் தெரியவில்லை. ஆனால் திங்கட்கிழமை காலாண்டு முடிவுகளின் தாக்கம் கட்டாயம் எதிரொலிக்கும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் லாப அளவீடு சரிய என்ன காரணம்..? முதலீட்டாளர்கள் … Read more ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்: ஜூன் காலாண்டு லாபம் அளவீடு 7.25% சரிவு..!

வட மாநிலங்களில் கனமழை; சென்னை ரயில்கள் ரத்து! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ள சூழலில் சென்னையிலிருந்து செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முன்பதிவின்படி கூடிய சிறப்பு ரயில்கள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. கொரோனா தளர்வுகளை பொறுத்து சமீபமாக சென்னையிலிருந்து வட மாநிலங்களுக்கும் ரயில் சேவை தொடங்கியது. இந்நிலையில் தற்போது பீகார், அசாம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் … Read more வட மாநிலங்களில் கனமழை; சென்னை ரயில்கள் ரத்து! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

மேட்டூர் அணை நிலவரம்

  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6841 கன அடியாக சரிந்துள்ளது.  மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை 73.07அடியிலிருந்து 72.55 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8,020 கன அடியிலிருந்து 6,841 கன அடியாக சரிந்துள்ளது.  அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 34.93 டி.எம்.சியாக இருந்தது. Source link

ஏய் கிளம்பு.. இது என் ஊரு.. போலீசை நடு ரோட்டில் வச்சு செய்த ரவுடி.. அதிரவைக்கும் காட்சி.

சென்னை நொளம்பூர் பகுதியில் கட்டிட உரிமையாளரிடம் மாமுல் கேட்டு தொல்லை கொடுத்த நபரை விசாரிக்கச் சென்ற போலீஸ்க்கு அந்த நபர் தரக்குறைவாகப்  பேசி மிரட்டல் விடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. போலீசையே மிரட்டும் அந்த நபருக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என சமூக வலைதளத்தில் பலரும் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ரவுடிகளின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் அப்பாவி மக்களை மிரட்டி … Read more ஏய் கிளம்பு.. இது என் ஊரு.. போலீசை நடு ரோட்டில் வச்சு செய்த ரவுடி.. அதிரவைக்கும் காட்சி.

சரத் கமல் – மனிகா பத்ரா அதிர்ச்சி தோல்வி… டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் போட்டியில் ஏமாற்றம்!

டோக்கியோ ஒலிம்பிக்கில் கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் ஒரே போட்டியாளர்களான சரத் கமல் – மனிகா பத்ரா இணை அதிர்ச்சி தோல்வியடைந்திருக்கிறது. முதல் சுற்றுப்போட்டியில் மனிகா – சரத் இணை சைனீஸ் தாய்பேவைச் சேர்ந்த லின் யுன் ஜு – செங் ஐ சிங் வீரர்களுடன் மோதியது. உலக ரேங்கிங்கில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்த சைனீஸ் தாய்பே இணை இந்திய இணையை 4-0 என தோற்கடித்தது. சரத் – மனிகா 4 கேம்களிலுமே இந்திய இணை … Read more சரத் கமல் – மனிகா பத்ரா அதிர்ச்சி தோல்வி… டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் போட்டியில் ஏமாற்றம்!

டோக்கியோ ஒலிம்பிக் 2020: துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியர்களை ஏமாற்றிய இளவேனில் வாலறிவன், அபுர்வி…

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் மற்றும் அபுர்வி சந்தேலா ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாத நிலையில் உள்ளனர். இதனால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்யோவில் கொரோனா அச்சுறுத்தலக்கு  இடையே ஒலிம்பிக் தொடர் தொடங்கி உள்ளது.  திட்டமிட்டபடி நேற்று (ஜூலை 23) மாலை 4.30 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் ஒலிம்பிக் … Read more டோக்கியோ ஒலிம்பிக் 2020: துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியர்களை ஏமாற்றிய இளவேனில் வாலறிவன், அபுர்வி…

ஆண்கள் ஹாக்கி- இந்தியா முதல் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியது

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இன்று காலை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 6-வது நிமிடத்தில் நியூசிலாந்து முதல் கோலை அடித்து இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. ஆனால், இந்திய வீரர் ருபிந்தர் பால் சிங் 10-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தார். இதனால் முதல் கால் பகுதி ஆட்டம் 1-1 என சமநிலை பெற்றது. 2-வது கால் பகுதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் … Read more ஆண்கள் ஹாக்கி- இந்தியா முதல் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியது