200 ரயில்வே ஸ்டேஷன்களை நவீனமயமாக்க திட்டம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அவுரங்காபாத் :நாடு முழுதும், 200 ரயில்வே ஸ்டேஷன்கள் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் நவீனமயமாக்கும் பணிகள் துவங்கியுள்ளதாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.மஹாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாதில் புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பெட்டிகள் பராமரிப்பு தொழிற்சாலையை திறந்து வைத்து, ரயில்வே அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:இந்திய ரயில்வே துறையை நவீன தொழில்நுட்ப வசதிக்கு ஏற்ப மாற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடு முழுதும், 200க்கும் மேற்பட்ட … Read more

“நித்தியானந்தா என நினைத்து எனது ஆசிரமத்தை இடித்துவிட்டனர்!" – பல்லடம் சாமியார் போலீஸில் புகார்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் காவல் நிலையத்துக்கு திங்கள்கிழமை மாலை, காரில் வந்தவரைப் பார்த்து போலீஸ் மட்டுமின்றி அங்கிருந்த பொதுமக்களுக்கும் வியப்பு கலந்த ஆச்சர்யம் ஏற்பட்டது. காரணம் வந்தவரின் நடை, உடை, பாவனை அச்சு அசலாக நித்தியானந்தாவைப் போல் இருந்ததுதான் கோவை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரானந்தா. இவர் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆன்மிகப் பணி மேற்கொண்டு வருகிறார். காவல் நிலையம் பல்லடத்தில் தனது ஆன்மிகப் பணியை விரிவுபடுத்த ஏதுவாக காரணம்பேட்டை அருகே செல்வகுமார் என்பவருக்குச் … Read more

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டி: விராட் கோலிக்கு ஓய்வு

மும்பை:தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் விராட் கோலிக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரு டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்து வருகிறது.

குளிர்பானத்தில் ஆசிட் கலந்துகொடுத்த சக மாணவன்? – சிகிச்சையில் 6-ம் வகுப்பு சிறுவன்; என்ன நடந்தது?

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகேவுள்ள மெதுக்கும்மல் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன் அதங்கோடு பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 24-ம் தேதி பள்ளியில் காலாண்டு தேர்வு முடிந்து வெளியே வந்துள்ளான். அந்த சமயத்தில் பள்ளி வளாகத்தில் வைத்து இந்தச் சிறுவனுக்கு மற்றொரு மாணவன் குளிர்பானம் குடிக்க கொடுத்துள்ளான். அதை குடிக்கும்போது சிறுவனுக்கு நெஞ்செரிச்சல் இருந்ததாகக் கூறப்படுகிறது. சிறிது குடித்த உடனே விளையாடிக்கொண்டிருந்த மற்றொரு சிறுவன் இவன்மீது மோதியதில் … Read more

பெண் மருத்துவரை மேற்படிப்பிற்கான கலந்தாய்வில் அனுமதிக்குமாறு மத்திய மருத்துவ சேர்க்கை குழுவிற்கு ஐகோர்ட் ஆணை

சென்னை: பெண் மருத்துவரை மேற்படிப்பிற்கான கலந்தாய்வில் அனுமதிக்குமாறு மத்திய மருத்துவ சேர்க்கை குழுவிற்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தவரை மணமுடித்தால், பிறப்பிடம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்று மறுக்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. புதுச்சேரி மருத்துவர் ஹேமா, மேற்படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்காக பிறப்பிடம், ஓ.பி.சி. சான்று கோரி விண்ணப்பித்தார். திருக்கோவிலூரை சேர்ந்தவரை மணந்து கொண்டதால், பிறப்பிட சான்று, ஓ.பி.சி. சான்று வழங்க மறுத்து தாசில்தார் உத்தரவிட்டார். புதுச்சேரி தாசில்தாரர்உத்தரவுக்கு எதிராக ஹேமா தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வறுமை, வேலையின்மையை சரி செய்ய வேண்டும்: ஆர்எஸ்எஸ் பொதுச்செயலர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நாட்டில் வறுமை, வேலையின்மை என்பது நாட்டின் முக்கிய பிரச்னைகள் என்றும் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே கூறியுள்ளார். ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளில் நாடு பல்வேறு துறைகளில் முன்னேறி உள்ளது. இருப்பினும், சில துறைகளில் நாம் சிக்கல்களை எதிர்கொண்டு வருவது உண்மைதான். வறுமை என்பது … Read more

"சொல்லிலும் செயலிலும் கவனம்… நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன்!"- திமுக-வினருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே, திமுக அமைச்சர்கள் ஆங்காங்கே பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைராலகிவருகின்றன. அதிலும் அமைச்சர் பொன்முடி, ஒருவிழாவில் அரசுப் பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணம் செய்வதை, `ஓசி’ எனக் குறிப்பிட்டுப் பேசியது அரசியல் தலைவர்கள் பலராலும் விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின், திமுக-வில் நடைபெறவிருக்கும் உட்கட்சித் தேர்தல் குறித்து தொண்டர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், திமுக அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அறிவுரையோடு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். பொன்முடி, ஸ்டாலின் அந்தக் … Read more

6 மாதங்களில் ரூ.66,161 கோடி வணிக வரி வசூலித்து, வணிக வரித்துறை மற்றும் பதிவுத்துறை சாதனை

சென்னை: 6 மாதங்களில் ரூ.66,161 கோடி வணிக வரி வசூலித்து, வணிக வரி மற்றும் பதிவுத்துறை சாதனை படைத்துள்ளது. கடந்த ஏப்.1-ம் தேதி முதல் செப்.30-ம் தேதி வரை ரூ.66,161 கோடி வரி வருவாய் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இதே நாள் வரை வசூலிக்கப்பட்ட ரூ.47,873 கோடியை விட ரூ.18,288 கோடி அதிகமாகும். வணிக வரி இந்திய மாநிலங்களில் 4-ம் இடத்தை பெற்றுள்ளது.

பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் நலம் விசாரிப்பு| Dinamalar

புதுடில்லி: உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ், 82, உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி: முலாயம் சிங்கின் உடல்நிலை குறித்து அவரது மகன் அகிலேஷிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். மேலும் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்யவும், தயாராக உள்ளதாக கூறியுள்ளார். யோகி ஆதித்யநாத்: உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் அகிலேஷிடம் பேசி, மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களை அழைத்து, முலாயம் சிங்கிற்க்கு சிறந்த சிகிச்சை … Read more

Mad Company விமர்சனம்: பிரிந்த உறவுகளுக்கான நாடகம் – வெப் சீரிஸ் களத்தில் ஜெயித்தாரா பிரசன்னா?

’உங்க வாழ்க்கையில தவறவிட்ட ஏதோ ஒரு உறவுக்காக இன்னமும் ஏங்கிக்கிட்டிருக்கீங்களா? அதே உறவாக வந்து நடிக்கிறதுக்கு நாங்க இருக்கோம்’ என்கிற சைக்கலாஜிக்கல் கதைக்களம்தான் பிரசன்னா, கனிகா, எஸ்.பி.பி சரண், தன்யா பாலகிருஷ்ணா உள்ளிட்டோர் நடிப்பில் ஆஹா ஓ.டி.டியில்  வெளியாகியிருக்கும் ’Mad Company’ வெப் சீரிஸின் ஒன்லைன். பிரபல நடிகர் ஏ.கே-வாக வரும் பிரசன்னாவுக்கும் ஊடகவியலாளராக வரும் எஸ்.பி.பி சரணுக்கும் ஒரு மோதல் வெடிக்கிறது. இதனால், செய்தி சேனலிலிருந்து நீக்கப்படும் சரண், தனியாக சேனல் தொடங்கிவிடுகிறார். படத்தில் நடிப்பதற்கு ரெட் … Read more