தி.மு.க. அரசை கண்டித்து 16-ந்தேதி திருவண்ணாமலையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்! எடப்பாடி அறிவிப்பு…

சென்னை: தமிழக மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து வரும்  16ந்தேதி திருவண்ணாமலையில், அதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.  கோவில் பகுதி மற்றும் அதை சுற்றி உள்ள 18 கிராமங்களில்  மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதில் அக்கறை இல்லாமல் இருந்து வரும் திமுக அரசை கண்டித்து, 16ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். இதுகுறித்து,  அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் … Read more

எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை! பாட்டாளி சொந்தங்களுக்கு அன்புமணி கடிதம்!

சென்னை: பாமகவில் தந்தை மகனுக்கு இடையே மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், பாட்டாளி சொந்தங்களுக்கு மருத்துவர் அன்புமணி உருக்கமான கடிதம் எழுதி உள்ளார். அதில்,    என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை என்று தெரிவித்து உள்ளார். 37-ஆம் ஆண்டில் பா.ம.க: வெற்றிப் பயணத்தை விரைவுபடுத்துவோம் – உறுப்பினர் சேர்க்கை, கட்டமைப்புப் பணிகளை விரைவுபடுத்துங்கள்! என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே!  என பாமக தொண்டர்களுக்கு அன்புமணி உருக்கமாக கடிதம் … Read more

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 12 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டதில் போலி விண்ணப்பங்கள்! தமிழ்நாடு அரசு எச்சரிக்கை…

சென்னை: தமிழ்நாடு அரசு  ரூ.1000 இலவசமாக வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களில்  போலி விண்ணப்பங்கள் நடமாடுவ தாக  தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பெண்களுக்கு அரசு வழங்கும் ரூ.1000 உதவித்தொகை திட்டமான, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு போலி விண்ணப்பங்கள் வாங்கி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என  தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு  ஜூலை 15 ஆம் தேதி முதல் நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் … Read more

புதுச்சேரியில் மூன்று புதிய எம்.எல்.ஏக்கள் நியமனம்

புதுச்சேரி, புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இன்னும் 10 மாதங்களில் பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி 2026 தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் இப்போதே வியூகம் வகுத்து வருகின்றன. அந்த வகையில் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் கட்சியினர் ஏற்கனவே மாநிலம் முழுவதும் நடைபயணம் தொடங்கி மக்களை சந்தித்து பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். அதன் கூட்டணி கட்சிகளான தி.மு.க., கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டவையும் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டி வருகின்றன. அதேபோல் என்.ஆர்.காங்கிரஸ் … Read more

`தமிழர்கள் பெருமிதம் கொள்ளும் படைப்பு வேள்பாரி!’ – உதயச்சந்திரன் முழு உரை

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி-யுமான சு.வெங்கடேசனின் எழுத்திலும், ஓவியர் மணியம் செல்வனின் ஓவியத்துடனும் விகடன் பிரசுரத்தில் வெளியான `வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவல், விற்பனையில் ஒரு லட்சம் பிரதிகளைக் கடந்ததை முன்னிட்டு, விகடன் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று `வெற்றிப் பெருவிழா’ நடைபெற்றது. மாலை 5:30 மணியளவில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் நாவலாசிரியர் சு.வெங்கடேசன், நடிகர் ரஜினிகாந்த், விகடன் குழும நிர்வாக இயக்குநர் சீனிவாசன், நடிகை ரோகிணி, நிகழ்ச்சி நெறியாளர் கோபிநாத், இயக்குநர் ஷங்கர், மாநில நிதித்துறைச் செயலாளர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் மற்றும் வேள்பாரி வாசகர்கள் எனப் … Read more

குரூப் 4 வினாத்தாள் கசியவில்லை! டி.என்.பி.எஸ்.சி.தலைவர் பிரபாகர் விளக்கம்

சென்னை: குரூப் 4 வினாத்தாள் கசியவில்லை! டி.என்.பி.எஸ்.சி.தலைவர் பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் நாளை குரூப்4 தேர்வு நடைபெற உள்ள நிலையில்,   மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் இருந்து குரூப் 4 வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்ட தனியார் பேருந்துகளின் கதவுக்கு A4 ஷீட்டில் சீல் வைத்து பாதுகாப்பு எனக் கூறி அனுப்பியுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த பேருந்தில் இருந்த சீல் வைத்த வினாத்தாள்  கதவு இடுக்கில் சிக்கியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் … Read more

75 வயதானால் மற்றவர்களுக்கு வழி விடுங்கள் – ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சால் பரபரப்பு

நாக்பூர், மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பேசுகையில், “தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும். தாங்களாகவே ஒதுங்கி நின்று மற்றவர்களை உள்ளே வரவிடுங்கள்” என்று கூறினார். மோகன் பகவத்தின் இந்த பேச்சு தற்போது அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்களுக்கு களம் அமைத்துள்ளது. ஏனென்றால், அவரும் பிரதமர் மோடியும் 2025 செப்டம்பரில் 75 வயதை எட்டுவார்கள் என்பதால், அவரது இந்த கருத்து எதிர்கட்சிகளுக்கு மோடியின் ஓய்வு குறித்து … Read more

ஏமாற்றிய காதலன்; பிரிந்த இளம்பெண்ணுக்கு அடுத்தநாளே கிடைத்த 11 லட்சம் ரூபாய் – எப்படி தெரியுமா?

அமெரிக்காவில் தன்னை ஏமாற்றிய காதலனை பிரிந்த பெண்ணிற்கு அடுத்த நாளே, அவருடைய காதலன் கொடுத்த பரிசு மூலம் 14,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 11.62 லட்சம் ரூபாய்) கிடைத்துள்ள சம்பவம், ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க்கைச் சேர்ந்த சாரா என்ற இளம் பெண், தனது காதலன் தன்னை ஏமாற்றியதை அறிந்து உறவை முறித்துக் கொண்டுள்ளார். இதற்கிடையில் சாரா தனது காதலன் பரிசாக அளித்த லாட்டரி டிக்கெட்டை சரிபார்த்தபோது, அதிர்ஷ்டவசமாக அந்த டிக்கெட்டிற்கு 14,000 டாலர் பரிசு தொகை … Read more